அழுத்தத்தை வெளியேற்றுதல் LETTING OFF THE PRESSURE 62-0518 வெள்ளிக்கிழமை மாலை, மே 18, 1962 அமெரிக்கன் பாப்டிஸ்ட் அசெம்பிளி, க்ரீன் லேக், விஸ்கான்சின், அமெரிக்கா சகோ.வில்லியம் பிரன்ஹாம் அழுத்தத்தை வெளியேற்றுதல் (62-0518) நன்றி, சகோதரர் பிரவுன். எல்லாம் கூடும், விசுவாசித்தால் மட்டும் போதும்; விசுவாசித்தால் மட்டும் போதும், விசுவாசித்தால் மட்டும் போதும், எல்லாம் கூடும், விசுவாசித்தால் மட்டும் போதும். 2 நன்றி. நாம் ஜெபிக்கும்போது, சற்று நேரம் எழுந்து நிற்போம். இன்றிரவு, ஜெபத்தில் நினைவுகூரப்பட விரும்புகிறவர்கள் எத்தனை பேர்? உங்கள் கையை உயர்த்தி அதை தெரியப்படுத்துவீர்களா? நாம் அவரை நோக்கிப் பார்க்கும்போது, இப்போது நம் தலைகளைத் தாழ்த்துவோம். 3 எங்கள் பரலோகப் பிதாவே, கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் உமது இரக்கத்தின் சிங்காசனத்தை அணுகுவதற்கு நாங்கள் அனுமதி கேட்கிறோம். நாங்கள் எந்த வகையிலும் நியாயத்தீர்ப்பின் சிங்காசனத்தில் நிற்க விரும்ப வில்லை, ஆனால் இரக்கத்தின் சிங்காச னத்திலேயே நிற்க விரும்புகிறோம், ஏனெனில் இந்த இரக்கத்தில்தான், அவருடைய கிருபையினால், முதலாவதாக இன்றிரவு உயிரோடு இங்கிருப்பதற்காக உமக்கு நன்றி செலுத்தி வருகிறோம். ஓ, போரின் நடுவிலேயே காட்சியில் இருந்து எங்களை விரைவாக அப்புறப்படுத்த சாத்தான் எவ்வளவு விரும்பு வான், ஆனால் அவருக்குப் பயப்படுகிற வர்களைச் சுற்றி தேவதூதர்கள் பாளையமிறங் கியிருக்கிறார்கள், இதற்காக நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். மேலும், அவருடைய வாக்குத்தத்தத்தின் யதார்த்தத்தை அறிந்துகொண்ட ஒரு புதிய அனுபவத்திற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். 4 தேவனுடைய ராஜ்யத்தின் சக கிறிஸ்தவ குடிமக்களின் இந்தக் கூட்டத்திற்காக இன்றிரவு நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன், பூமியிலுள்ள இந்த மாபெரும் {common wealth} பொதுநல அமைப்பில், கிறிஸ்து இயேசுவுக்குள் உன்னதங்களில் ஒன்றாக அமர்ந்து, வார்த்தையைச் சுற்றி ஐக்கியம் கொள்ளும் இந்த விதத்தில் நாம் இணைந்திருக்கிறோம். வணிகர்களிடையேயும், மற்றும் வாழ்க்கையின் அனைத்து தரப்பினரி டையேயும் நற்செய்தியைக் கொண்டு செல்லும் இந்த 'முழு சுவிசேஷ வணிகர்களின்' மாபெரும், பரந்த வீச்சுக்காகவும் தாக்கத்திற்காகவும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். மேலும், இன்றிரவு இந்த மேடையிலும், இந்த மைதானத்திலும் இருக்கும் இந்த விலையேறப் பெற்ற, அபிஷேகம் பண்ணப்பட்ட ஊழியர்க ளுக்காகவும், பல ஆண்டுகளாக முன்னேறிச் சென்று, இங்கே முன்வரிசைக்கு போரைத் தொடர்ந்து கொண்டு வந்ததன் மூலம் அவர்களுக்குப் பின்னால் உள்ள கிறிஸ்தவத்தின் அடையாளத்திற்காகவும் நன்றி செலுத்துகிறோம். தேவனே, தேவனுடைய தூதர்கள் இப்போது எங்கள் நடுவில் தங்கள் இடத்தைப் பிடித்துக்கொள்ள வேண்டும் என்று இன்றிரவு நாங்கள் ஜெபிக்கிறோம். 5 இரட்சிக்கப்படாதவர்களை இரட்சியும், பரிசுத்த ஆவியானவரால் அவர்களை நிரப்பும், மேலும் காலணிகள் அணியாத, கச்சைகட்டாத, மற்றும்-மற்றும் மூடப்படாதவர்களுக்கு தேவ னுடைய சர்வாயுத வர்க்கத்தையும் அணிவியும். நோயுற்றவர்களையும் பாதிக்கப்பட்டவர்களையும் நீர் குணமாக்க வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். ஆண்டவரே, இந்த முகாமின் மீது அப்படிப்பட்ட ஒரு மகிமையான கெம்பீர சத்தம் எழும்பட்டுமாக, கலிலேயாக் கடலின் மீது நடந்தவர் இன்றிரவு ஏரியின் மீது நடந்து வந்து, எங்களுடன் அமர்ந்து, ஆண்டவரே, எங்கள் ஒவ்வொருவரின் தேவைக்கேற்ப எங்களை நடத்தட்டுமாக. உமது வார்த்தையின் மூலமாக எங்களிடம் பேசுங்கள், ஆண்டவரே, ஏனென்றால் உண்மையாகவே அதுவே எங்கள் நம்பிக்கை மற்றும் எங்கள் நிலைப்பாடு உமது வார்த்தையின் மீதே உள்ளது. இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 6 நன்றி. என் மகன் பில்லி, இன்றிரவு எனக்காகச் சற்று முன்னதாகவே வந்து, என்னிடம் கூறினான், "நான் நிச்சயமாக உங்களை மைதானத்திற்கு அழைத்துச் செல்ல விரும்புகிறேன்." அவன் சொன்னான், "நீங்கள் பல மாநாடுகளைப் பார்த்திருக்கிறீர்கள், மேலும் நாம் உலகின் பெரும்பகுதியை ஒன்றாகச் சுற்றியிருக்கிறோம், ஆனால், இது நீங்கள் பார்த்ததிலேயே மிகவும் அமைதியான, இளைப்பாறுதல் தரும் இடங்களில் ஒன்றாகும், அப்பா" என்றான். அதற்கு நான், "நல்லது" என்றேன். அவன் சொன்னான், "ஆனால் இன்னும் சற்று நேரம் ஆகும் வரை நான் காத்திருக்கப் போகிறேன்." அதற்கு நான், "என்ன விஷயம்?" என்றேன். 7 அவன் கூறினான், "நானும் சில சகோதரர்களும் அங்கே வளாகத்தில், மைதா னத்தில் வெளியே நின்று கொண்டிருந்தோம்," மேலும் கூறினான், "காட்டில் இரண்டு பெரிய கொழுத்த சாம்பல் நிற அணில்கள் அமர்ந் திருந்தன." மேலும் சொன்னான், "அவற்றைப் பிடிப்பதற்காக நீங்கள் நள்ளிரவு வரை அவற்றைத் துரத்திக் கொண்டிருப்பீர்கள், அதனால்..." நான் சொன்னேன், "ஓ, பால்!" 8 இன்றிரவு இங்கே இருப்பது ஒரு பாக்கியம். நன்றி சொல்வதற்கு என்னிடம் பல காரியங்கள் உள்ளன, உயிருடன் இருப்பதற்கும் கர்த்தருடைய சேவையில் இருப்பதற்கும் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். சற்று நேரத்திற்கு முன்பு, நமது அருமையான சகோதரரான சகோதரர் பிரவுன் எனக்கு அளித்த இந்த அற்புதமான கருத்துக்காக நான் நிச்சயமாக நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நான்-நான் ஒருவருக்குப் பின்னால் நிற்பதை நிச்சயமாகச் சிறியதாகவே உணர்கிறேன், சற்று நேரத்திற்கு முன்பு இங்கு மேடையில் நான் அவரை அழைத்தபடி அழைக்கப் போவதில்லை, ஆனால் நிச்சயமாக அது ஒரு சிறந்த பட்டமாக இருந்தது, ஆனால் அவர் அதை விரும்பாமல் இருக்கலாம். எனவே, அவர் கூறினார், "பெந்தெகோஸ்தேகாரர்களை பிரஸ்பிடேரியர் களிடமிருந்து உங்களால் பிரித்தறிய முடியாது." இல்லை, பிரஸ்பிடேரியர்கள் பெந்தெகோஸ்தே காரர்களாக மாறும்போது முடியாது, அது சரிதான். அது-அதுதான், அவர்கள் அனைவ ரையும் ஒன்றாக்குகிறது. 9 அது நிச்சயமாக, கர்த்தருடைய வாய்க் காலாகிய அவருடைய ஊழியரின் மூலமாக வந்து, அன்று இரவு சகோதரர் பிரவுனிடமிருந்து நான் கேட்ட மாபெரும் செய்தியைக் குறித்து நான் ஆச்சரியப்பட்டேன். மேலும் அவர் என் ஆத்துமாவை எப்படி ஆசீர்வதித்தார், மற்றும் தேவன் இது போன்ற மனிதர்களை எழுப்புகிறார் என்பதை அறிந்துகொள்வதிலும் ஆச்சரியப்பட்டேன். மேலும் தென்னாப் பிரிக்காவைச் சேர்ந்த என் அருமையான நண்பர் சகோதரர் டுப்லெசிஸ் இங்கே இருக்கிறார் என்பதையும், அவர் ஏற்கனவே உங்களிடம் பேசியுள்ளார் என்பதையும் நான் அறிவேன். அது தேவனுடைய மாபெரும் ராஜ்யத்தின் வளமான வைட்டமின்களால் நிரப்பப் பட்டிருந்தது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன், அவரும் அத்தகையதொரு எழுச்சியூட்டும் செய்தியைக் கொண்டுவருகிறார். 10 இப்போது, உங்களுக்குத் தெரியும், நான் உள்ளே வருவதற்குச் சற்று முன்பு, வெளியே சுமார் நூறு கெஜம் தூரம் நடந்தேன். உங்களுக்குத் தெரியுமா, அடுத்த ஆண்டு நானே ஒரு மாநாட்டை நடத்தி அதை இங்கே கொண்டு வர வேண்டும் என்றும், இந்த மைதானங்களை நாம் வாடகைக்கு எடுக்க முடியுமா என்று பார்க்கவும், எல்லோரும் இங்கேயே தங்கியிருந்து, ஒரு வாரம் இங்கே இருந்து, நோயுற்றவர்களுக்காக ஜெபித்து, நோயுற்றவர்களையும் பாதிக்கப்பட்டவர்களையும் கொண்டுவந்தால் அது மிகவும் நன்றாக இருக்கும் என்று இது என்னைச் சிந்திக்க வைக்கிறது. அதைக் குறித்து நாம் ஜெபித்து, ஆண்டவர் அதைப் பற்றி என்ன சொல்லப் போகிறார் என்று பார்ப்போம். அவர் எனக்குச் சொல்வது போலவே செய்ய நான் விரும்புகிறேன், உங்களுக்குத் தெரியும், அப்போது தான் நான் அதைப் பற்றி நன்றாக உணர்கிறேன். 11 இங்குள்ள சகோதரர்களிடையே, எனது அடுத்தடுத்த சில கூட்டங்களை நான் அறிவித்தால் அது சரியாயிருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன், அது சரியாயிருக்கும் என்று நினைக்கிறேன். எனக்குத் தெரியும்... இது எதையும் பாதிக்காது என்று நான் நினைக்கிறேன். மேலும் நாளை, நாம் இங்கே இருக்கப் போகிறோம், மற்றும் நாளை இரவு, கர்த்தருக்குச் சித்தமானால் விருந்தில் கலந்து கொள்வோம். அதன்பிறகு ஞாயிற்றுக்கிழமை மதியம் நாம் சிக்காகோவில் உள்ள, அதன் பெயரை என்னால் சரியாகச் சொல்ல முடியவில்லை, மாதர், அல்லது, மாதர், அல்லது, மாதர் உயர்நிலைப் பள்ளி அரங்கத்தில் இருக்கிறோம், கடந்த மாநாட்டில் நான் அங்குதான் இருந்தேன்; எங்களுக்கு மிகவும் மகிமையான நேரம் கிடைத்தது. 12 பின்னர் திங்கள்கிழமை இரவு, அதுவும் மாதரில்தான் என்று நம்புகிறேன், ஒரு வகையான மிஷனரி பேரணிக்காக, அல்லது நாங்கள் இவ்வளவு காலமாக ஒன்றாக இணைந்திருந்த என் அருமையான சகோதரர் ஜோசப் போஸுக்கான ஒரு சிறிய வழியனுப்பு விழாவிற்காக அங்கே இருக்கிறோம். சகோதரர் போஸ், மற்றும் சகோதரர் கார்ல்சன், மற்றும், ஓ, சகோதரர் சன்மோர் ஆகியோரைக் காண்பது மிகவும் நன்றாக இருக்கிறது. இன்றிரவு இங்கு நிறைய பேர் இருக்கிறார்கள், நான் சுற்றிலும் பார்த்து அவர்களின் முகங்களைக் காண்கிறேன், இதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். 13 பின்னர் வீட்டிற்குச் சென்று, ஜூன் 7, 8, 9, மற்றும் 10-ம் தேதிகளில் தெற்கு கரோலினாவின் சதர்ன் பைன்ஸில் 'தி மிட்நைட் க்ரை' பத்திரிகையுடன் நடைபெறும் மாநாட் டிற்குச் செல்கிறேன். அதன் பிறகு மற்றொரு பிரஸ்பிடேரியரான சகோதரர் பிக்பியிடம் செல்கிறேன். 'ஒரு பிரஸ்பிடேரியன் மருத்துவர் பெந்தெகோஸ்தே தீர்க்கதரிசியைச் சந்திக்கிறார்' என்ற அந்த கட்டுரையையோ, அல்லது அதுபோன்ற ஒரு குறிப்பையோ எழுதியவர் அவர்தான். தெற்கு கரோலினாவின் கொலம்பியாவில் நான் அவருடன் இருக்கப் போகிறேன். 14 அதன் பிறகு சவுத் கேட், கௌ பேலஸுக்கு செல்கிறேன், அங்கே நாங்கள் வணிகர்களுடன் பல மாநாடுகளை நடத்தியி ருக்கிறோம். அங்கிருந்து நான் நினைக்கிறேன், அது சாண்டா மோனிகா அல்லது அங்கே எங்கோ ஒரு இடம் என்று நம்புகிறேன், கலிபோர்னியாவில் உள்ள கிராஸ் வாலி, அங்கிருந்து மேலே, அது ஸ்போகேன் என்று நம்புகிறேன், அங்கிருந்து திரும்பி, ஓரிகானுக்குக் கீழே, ஓரிகானின் சேலம், பின்னர் பிரிட்டிஷ் கொலம்பியாவுக்கும், அதன் மேல் அலாஸ் காவின் அங்கரேஜ் வரை சென்று, எழுப்புதல் முடிந்தவுடன், வணிகர்களுக்கான ஒரு கிளையை அங்கு அமைக்கப் போகிறேன். அதன் பிறகு வெளிநாடுகளுக்கான பயணங்களுக்கு முன்பாக குளிர்காலத்தில் சரியான நேரத்திற்கு வீட்டிற்குத் திரும்ப முயற்சிப்பேன். 15 ஒரு மாபெரும் எழுப்புதல் வரப் போகிறது என்று எனது பெந்தெகோஸ்தே சகோதரர்கள் கணித்தபோது, நான் அவர்களைக் கவனித்து செவிமடுத்துள்ளேன். நாம் கடந்து வந்த எழுப்புதல் நின்றுவிட்டது என்பது நம் அனைவருக்கும் தெரியும், ஆனால் மகிமையானதும் பெரியதுமான வேறு ஏதோ ஒன்று வர வேண்டும். எனவே வேதத்தில் இந்த இடங்களைக் கண்டுபிடிக்க நான் கடினமாகப் படித்து வருகிறேன். நான் நினைக்கிறேன், ஒருவேளை... நமது-நமது வெளிப்பாடு வேதப்பூர்வமாக இருக்க வேண்டும், அது ஒரு வேதவசனமாக இருந்தால், அது கர்த்தரிட மிருந்து வந்தது என்று நாம் அறிவோம். அது சரிதான் என்றும், மாலை நேரப் பழங்களுக்கான ஒரு முதிர்ச்சியடையும் காலம் வரப்போகிறது என்றும் நான் நம்பத் தொடங்குகிறேன். 16 ஈஸ்டர் காலையில், 'மணவாட்டி மரம்' குறித்து நான் மறுநாள் பிரசங்கித்தேன்: கிறிஸ்து எப்படி அந்த பரிபூரண மரமாக இருந்தார் என்பது குறித்து. தாவீது அதைக் கண்டு, "அது நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டிருக்கிறது" என்றான். தேவனுடைய பரிபூரண கனிகளைத் தாங்கியிருந்த அந்தப் பரிபூரண மரத்தை ரோம் எவ்வாறு வெட்டி வீழ்த்தி, மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு மரத்தில் அதைத் தொங்கவிட்டது, ஆனால் தேவன் அதை மூன்றாம் நாளில் எழுப்பினார். அதன்பிறகு அதன் கனிகளைக் கொடுத்துக்கொண்டு ஒரு மணவாட்டி மரம் வெளிவருகிறது. இருண்ட காலங்களின் மூலம் சத்துரு மீண்டும் உள்ளே வந்து அதை வெட்டி வீழ்த்துகிறான், ஆனால் "நான் திரும்பக் கொடுப்பேன்" என்று கர்த்தர் சொல்லுகிறார். 17 லூத்தரன்கள் எவ்வாறு எழும்பினார்கள், மற்றும் பிரிவுகளாக மாறினார்கள், கொடி நறுக்கப்பட்டது; மெத்தடிஸ்டுகள் வந்தார்கள், பிரிவுகளாக மாறினார்கள், கொடி நறுக்கப் பட்டது; பெந்தெகோஸ்தே பிரிவு வந்தது, கொடி நறுக்கப்பட்டது, ஆனால் மாலை நேர வெளிச்சங்கள் வரும்போது மரத்தின் உச்சியில் கனி முதிர்ச்சியடைகிறது. நாம் சாலையின் அருகாமையில் இருக்கிறோம். எனவே எதிர் காலத்தில் பெரிய காரியங்களை எதிர் பார்க்கிறோம். 18 உங்களுக்குத் தெரிந்தபடி, எனக்கு ஒரு விபத்து ஏற்பட்டது, என் இரண்டு கண்களும் ஏறக்குறைய பறிபோகும் நிலையில் இருந்தன. என்னால் பார்க்க முடிகிறது, இன்றிரவு நான் இங்கே இருப்பதற்காக மிகவும் நன்றியுள் ளவனாக இருக்கிறேன். 19 இப்போது, வேதவசனங்களை, அல்லது தலைப்பு வசனங்களை குறித்து வைத்துக் கொள்பவர்களே, நான் எதைக் குறித்துப் பேசுகிறேன் என்பதை "தலைப்பு வசனம்" என்று அழைக்கலாமா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை, நான் சில குறிப்புகளையும் வேதவசனங்களையும் இங்கே எழுதி வைத்துள் ளேன், ஒருவேளை சில நிமிடங்களுக்கு கர்த்தர் என்னைக் கொஞ்சம் பேசச் சொல்வார் என்று நான் உணர்ந்தேன். வழக்கமாக நான் ஒருபோதும் முடிப்பதில்லை, நல்லது, மறுநாள் நான், சகோதரர் சோத்மேன், சுமார் ஆறு மணிநேரம் அல்லது அதுபோன்று பேசினேன் என்று நினைக்கிறேன். எனக்கு நீண்ட நேரம் ஆகிறது. 20 உங்களுக்குத் தெரியும், எனக்கு-எனக்கு அவ்வளவாகத் தெரியாது, அதனால் நான்-நான் காத்திருக்க வேண்டும், அதனால் நான் எனது நேரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும், உண்மையான இறையியலாளர்களாக இருந்து வார்த்தைகளை அப்படியே கொட்டுகிற சில சகோதரர்களைப் போல நான் இல்லை. அது வெளிவருவதற்காக நான் காத்திருக்க வேண்டும், அதில் சற்று மெதுவாகச் செல்ல வேண்டும், உங்களுக்குத் தெரியும். எனக்கு நீண்ட நேரம் எடுக்கும், பின்பு நீங்கள்... தொடங்குவதற்கு நீண்ட நேரம் ஆகும், பின்னர் நிறுத்துவதற்கும் நீண்ட நேரம் ஆகும். ஆனால் நான் உணர்கிறேன், ஓடத் தொடங்கும்போது, உங்களுக்குத் தெரியும், அது ஒரு காரை எடுப்பதைப் போன்றதுதான், நீங்கள் அதை ஒரு உயர் கியரில் போடும் வரை அனைத்து கியர்கள் வழியாகவும் சென்றால், அது மிக நன்றாக ஓடும், சிறிது நேரம் அதை அப்படியே ஓடவிட நீங்கள் விரும்புவீர்கள். 21 எனவே, வேத வாசிப்பிற்காக, தொடங்குவதற்கு இன்றிரவு தேவனுடைய வார்த்தையிலிருந்து, நீதிமொழிகள் 18-ம் அதிகாரம் 10-ம் வசனத்தையும், ஏசாயா 32:2-லிருந்தும் வாசிப்போம். 22 இப்போது, நீதிமொழிகள் 18-ம் அதிகாரம் 10-ம் வசனம், இவ்வாறு வாசிக்கப்படுகிறது: கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான். 23 மேலும் ஏசாயாவின் புஸ்தகம், 32:1 மற்றும் 2: இதோ, ஒரு ராஜா நீதியாக அராசாளுவார்; பிரபுக்களும் நியாயமாகத் துரைத்தனம் பண்ணுவார்கள். அவர் காற்றுக்கு ஒதுக்காகவும், பெரு வெள்ளத்துக்குப் புகலிடமாகவும், வறண்ட நிலத்துக்கு நீர்க்கால்களாகவும், விடாய்த்த பூமிக்குப் பெருங்கன்மலையின் நிழலாகவும் இருப்பார். 24 இப்போது இந்த விலையேறப்பெற்ற வார்த்தையின் வாசிப்போடு தேவன் தமது ஆசீர்வாதங்களைச் சேர்ப்பாராக. நீங்கள் எனக்காக ஜெபியுங்கள். சில நாட்களுக்கு முன்பு லூயிஸ்வில்லியில், ஒரு சிறிய பெந்தெகோஸ்தே பிரசங்கியாரான, சற்று கறுப்பின சகோதரர் ஒருவரை நான் கவனித்துக் கொண்டிருந்தேன், அவர் பிரசங்கித்துக்கொண்டும், பாடிக்கொண்டும் இருந்தார், சில நிமிடங்களுக்கு அவர் ஆவியை இழப்பார், உடனே அவர் நிறுத்திவிட்டு, "நீங்கள் அனைவரும் எனக்காக ஜெபிக்கி றீர்களா?" என்று கேட்பார். பின்னர் அவர் சொல்வார், இன்னும் சில வார்த்தைகளைப் பிரசங்கித்துவிட்டு, "யாராவது எனக்காக ஜெபியுங்கள்!" என்று சொல்வார். அவர் சொன்னார்... நீங்கள் ஒருமுறையாவது இங்கே எழுந்து நின்றாலொழிய அதன் அர்த்தம் என்னவென்று உங்களுக்குத் தெரியாது. 25 மேடைக்கு வருவது என்பது, வெறுமனே பார்க்கப்படுவதற்காகவோ அல்லது கேட்கப் படுவதற்காகவோ வருவதாக ஒருபோதும் இருக்கக் கூடாது. நீங்கள் வரவேண்டும், ஜெபத்தில் உங்கள் அறையின் புத்துணர்ச்சி யிலிருந்து வந்து, பரிசுத்த ஆவியானவர் என்ன செய்யச் சொல்கிறாரோ அதைச் செய்ய, அவர் சொன்னதை அப்படியே சொல்ல, அபிஷே கத்தின் கீழ் ஒரு சபைக்குள் நுழைய வேண்டும். அவர், அவர் என்ன செய்வார் என்று எனக்குத் தெரியாது. 26 நான் இதுபோன்று பிரசங்கிக்க ஆரம்பித்து, பரிசுத்த ஆவியானவர் பலிபீடத்தின் குறுக்கே அசைவாடுவதையும், விபச்சாரத்தில் வாழும் ஆண்களையும் பெண்களையும், மற்றும் அனைவரையும் அழைத்து, அவர்களை பலி பீடத்திற்குக் கொண்டுவந்து ஒப்புதல் வாக்கு மூலங்களைப் பெறுவதையும் பார்த்திருக்கிறேன்; அவர் மக்களை விடுவித்து அவர்களைக் குணமாக்குவதையும் பார்த்திருக்கிறேன். அவர் என்ன செய்யப் போகிறார் என்று உங்களுக்குத் தெரியாது. கிறிஸ்தவர்களை வெட்டுகிற, மற்றும் சில சமயங்களில் கிறிஸ்தவர்களை ஆசீர்வதிக்கிற செய்திகளை அவர் கொண்டு வருவதை நான் பார்த்திருக்கிறேன். மேலும் உங்களுக்குத் தெரியாது, நீங்கள் அங்கே செல்கிறீர்கள், அவ்வளவுதான். உங்கள் சொந்த எண்ணத்தின் கீழ் எதையாவது முன்னரே தீர்மானித்துக் கொண்டு நீங்கள் சென்றால், நீங்கள் பெரிதும் ஏமாற்றப்படலாம். 27 ஒருமுறை ஒரு சிறிய, ஜாக் மூர் என்ற பெயருள்ள ஒரு போதகர் இருந்தார், உங்களில் பலருக்கு அவரைத் தெரியும், அவர் இந்த ஐக்கியத்தின் ஒரு உறுப்பினர், அவருக்குத் தாவீது என்று ஒரு சிறுவன் இருந்தான், நான் அதை அடிக்கடி நினைத்துப் பார்த்திருக்கிறேன், அவனுக்கு சுமார், அந்த நாட்களில், தாவீதுக்கு சுமார் ஆறு வயது இருக்கும். அவன் தன் தந்தை பிரசங்கிப்பதையும், மற்றும் அனைத்து போதகர்கள் பிரசங்கிப்பதையும் கேட்டிருந்தான், அதனால் கர்த்தர் தன்னைப் பிரசங்கிக்க அழைத்திருக்கிறார் என்று அவன் நினைத்தான், அதனால் அவன் சொன்னான், "அப்பா, நான் பிரசங்கிக்க வேண்டும்" என்று சொல்லிக் கொண்டே இருந்தான். அதற்கு அவனுடைய தந்தை, "சரி, தாவீது, ஏதோ ஒரு நேரத்தில்" என்றார். அவன் தொடர்ந்து, "இப்போது, அப்பா, நான் பிரசங்கிக்கலாம் என்று நீங்கள் எனக்கு வாக்குறுதி அளித்திருந்தீர்கள்" என்றான். 28 அதனால் அவனுடைய அம்மா அவனுக்கு மிகவும் அழகாக ஆடை அணிவித்து, ஒரு சிறிய 'போ டை', நீளமான கால்சட்டை, ஒரு சிறிய வெள்ளைச் சட்டை ஆகியவற்றைப் போட்டுவிட்டாள், அவன் ஒரு பாதிரியாரைப் போல் காணப்பட்டான், பிரசங்கிக்கத் தயாராகி, அன்று இரவு மேலே வந்து நாற்காலியில் அமர்ந்தான். எனவே சகோதரர் ஜாக் கூறினார், "மக்களே, உங்களுக்குத் தெரியுமா," அவர் கூறினார், "தாவீது நீண்ட காலமாகப் பிரசங்கிக்க விரும்புகிறான்," கூறினார், "இப்போது நாங்கள் அவனைச் சுதந்திரமாக விடப்போகிறோம்." கூறினார், "வா, தாவீது, இங்கே கீழே குதித்து வந்து பிரசங்கி." 29 சொல்லப்படுகிறது, உலகத்தையே தீக்கிரையாக்கப் போவதைப் போல அவன் அந்த நாற்காலியில் இருந்து வெளியே வந்தான். மேடையின் முடிவில் கீழே குதித்து, அவன் வலதுபுறமும் இடதுபுறமும் பார்த்தான். அவன் மிகவும் சோர்வடைந்து காணப்பட்டதாகக் கூறப்படுகிறது, "இது வேலைக்காகாது" என்று சொன்னான். அவன் திரும்பிப் போய் உட்கார்ந்து கொண்டான். 30 அது வேலை செய்யும் என்று நான் நினைக்காத பல நேரங்களை நான் பார்த்திருக்கிறேன், அதனால் போதகர்களாகிய நாங்கள் எப்படியாவது நின்று, அதன் வழியே தடுமாறித்தான் செல்ல வேண்டும். எனவே, அந்தச் சிறிய சகோதரர் சொன்னது போல, "எனக்காக ஜெபியுங்கள்." 31 கருப்பொருள் குறித்துச் சிந்திக்கும்போது, இப்போது இந்த மகிமையான வேதபகுதியை வாசித்த பிறகு, ஆராதனையின் அடுத்த பகுதிக்குச் செல்லும்போது, நான் முன்பு கையாள முயற்சித்த, 'அழுத்தத்தை வெளியேற்றுதல்' என்ற தலைப்பில் என் நினைவுக்கு வரும் ஒரு வேதபகுதியை இன்றிரவு எடுத்துக்கொள்ள விரும்புகிறேன். அது மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்று நான் நினைத்தேன். 32 எங்கும் மிகுந்த அழுத்தம் இருக்கிறது. ஒவ்வொருவரும் அழுத்தத்தின் கீழ் இருப்பது போல் தெரிகிறது. அது என்ன செய்கிறது? என்ன விஷயம்? எல்லாமே, இது ஒரு அழுத்தத்தின் நாள். மக்கள் ஒரு மணி நேரத்திற்கு தொண்ணூறு மைல் வேகத்தில் தெருக்களில் ஓட்டிச்சென்று காவல் துறையி னரிடம் அபராதச் சீட்டுகளைப் பெறுகிறார்கள், சாலையில் வேகமாகச் செல்கிறார்கள், மற்றவர்களுக்கு ஐந்து அடி முன்னால் செல்வதற்காக சுழன்று வளைந்து தங்கள் உயிரை இழக்கும் அபாயத்தை ஏறக்குறைய எடுத்துக்கொண்டு, அவர்கள் வீட்டிற்குச் செல்வதற்கு முன்பு ஒரு மணி நேரம் குடிக்க ஒரு மதுபானக் கூடத்திற்குச் செல்கிறார்கள். அழுத்தம். அது சரிதான். 33 கிறிஸ்தவர்களையும்கூட, இது தொந்தரவு செய்கிறது. அவர்களில் சிலர் உங்கள் மீது சீறிவிழுவதற்கு முழுவதுமாக அழுத்தத்திற்கு உள்ளாகி, வெடித்துச் சிதறப் போவது போல போதுமான கோபம் முழுவதும் கட்டமைக்கப் பட்டுள்ளதைப் பாருங்கள். என்ன விஷயம்? ஏதோ தவறு இருக்கிறது, அப்படி இருக்கக்கூடாது, கோபம் சாத்தானிடமிருந்து வருகிறது. 34 இருப்பினும் அனைவரும் ஒரு அழுத்தத்தின் கீழேயே இருக்கிறார்கள். நிச்சயமாக இங்குள்ள இந்தக் குழு அப்படிப் பட்டது என்று நான் நம்பவில்லை, ஆனால்-ஆனால் அது ஒரு... உங்களுக்குத் தெரியும், இந்தக் கூட்டங்கள் பதிவு செய்யப்படுகின்றன, அதனால் அது வேறு இடங்களுக்குச் செல்லும், உங்களுக்குத் தெரியும், அதனால் அழுத்தத்தின் கீழ் இருக்கும் அந்தக் குழுவிடம் நான் பேசிக் கொண்டிருப்பேன். ஆனால் நான் நினைத்தேன், உங்களுக்குத் தெரியும், அது எல்லா குழுக்க ளையும் தொந்தரவு செய்கிறது, அழுத்தம். சாத்தான் ஒருமுறை உங்களை அழுத்தத்திற்கு உள்ளாக்க முடிந்தால், அவன் உங்களை ஏறக்குறைய சவுக்கடி கொடுத்துவிட்டான். அது சரிதான். அவ்வளவு அழுத்தம். 35 மக்கள் தவறான காரியங்களைச் செய்கிறார்கள், அதிலிருந்து மறைந்துகொள்ள முயற்சிக்கிறார்கள். நல்லது, அது செய்யும் ஒரே காரியம் மேலும் அழுத்தத்தை உருவாக்குவது தான், அது அதிக அழுத்தத்தையே உருவாக்குகிறது. 36 அழுத்தம் என்றால் என்னவென்று எனக்குத் தெரியும், அழுத்தத்தின் காரணமாக மற்றுமொரு நாள் நான் என் உயிரை இழக்கப் பார்த்தேன். மீன்பிடிக்கவும், வேட்டையாடவும் செல்வதற்கான ஒரு பொழுதுபோக்கை கர்த்தர் எனக்குக் கொடுத்ததற்காக நான் மகிழ்ச்சி யடைகிறேன். 37 சில மாதங்களுக்கு முன்பு இறந்துபோன என் தாயை, தேவனுடைய ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்தவான் என்று நான் நினைக்கும் என் தாயை அனைவருக்கும் தெரியும். ஈஸ்-..., அல்லது, அன்னையர் தினத்தன்று, மறுநாள், நான் ரோஜாப்பூ அணியவில்லை. அவர்களில் சிலர் கேட்டனர், "என்ன விஷயம், பில்லி?" என்றனர். "உங்கள் தாய் சமீபத்தில்தானே இறந்தார்?" என்றனர். "நீங்கள் ஏன் வெள்ளை ரோஜாவை அணியவில்லை?" என்றனர். 38 நான் சொன்னேன், "என்னால் வெள்ளை ரோஜா அணிய முடியாது, என் தாய் மரிக்க வில்லை, அவள் உயிரோடு இருக்கிறாள்." ஆம், நான் கூறினேன், "நான் இரண்டை அணிந்தால், உங்கள் வழியில் நான் ஒரு இடறலை வைப்பேன். நான் ஒரு வெள்ளை ரோஜாவை அணிந்தால், எனக்கு நானே ஒரு மாயக்காரனாக இருப்பேன், ஏனென்றால் அவள் மரிக்கவில்லை, உயிரோடு இருக்கிறாள் என்று நான் நம்புகிறேன். இயேசு சொன்னார், 'என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான். உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவ னெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்.' அதை நான் நம்புகிறேன்." அது அவருடைய வார்த்தை. 39 ஆகையால், நான் போய்க் கொண்டி ருந்தேன்... எனது பொழுதுபோக்கு மீன் பிடிப்பதும் வேட்டையாடுவதுமாகும், அதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். நான் வீட்டிற்குச் செல்லும்போது, மற்றும் அழைப்புகள் வரும்போது, மக்கள் எல்லா இடங்களிலிருந்தும் அங்கே அமர்ந்திருக்கிறார்கள், மாதக்கணக்கில் காத்திருக்கிறார்கள், அவர்களும் அழுத்தத்தின் கீழ் இருக்கிறார்கள், மேலும் கர்த்தர் அவர்களை என்ன செய்யச் சொல்வார் என்பதையும், தங்கள் வாழ்வில் என்ன என்பதையும் கண்டறிய முயற்சிக்கிறார்கள், தேவன் பரலோகத்திலிருந்து கீழே பேசி அவர்களுக்கு அதை வெளிப் படுத்தும் வரை நாங்கள் அங்கேயே இருக்கிறோம், அது மக்களிடையேயும் அழுத்தத்தை உருவாக்குகிறது. 40 பிறகு எனக்கு மனஅழுத்தம் ஏற்படும்போது, நான் கீழே செல்கிறேன், நான் சில சங்கங்களைச் சேர்ந்தவன், கீழே சென்று இலக்குகளைச் சுடுவேன். எனக்கு எப்போதுமே ஒரு 'வெதர்பி மேக்னம்' துப்பாக்கி தேவைப்பட்டது. ஆனால் நான்... ஓ, என் நண்பர்கள் சிலர் அதை எனக்காக வாங்கியிருப்பார்கள், அவை மிகவும் விலை உயர்ந்தவை, ஆனால் நான்-நான் அவர்களை அப்படிச் செய்ய அனுமதிக்க முடியவில்லை. கால்களில் காலணிகள் கூட இல்லாமல் மிஷனரிகள் பிரசங்கித்து வருகிறார்கள் என்பது எனக்குத் தெரிந்திருக்கும்போது, ஒரு துப்பாக்கிக்காக என் நண்பர் ஒருவர் அவ்வளவு பணம் செலுத்துவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, அதனால் நான்-நான்-நான் அப்படிச் செய்ய முடியவில்லை. 41 சகோதரர் ஆர்ட் வில்சன் சிறிது காலத்திற்கு முன்பு இங்கே என் மகனுக்கு ஒரு சிறிய துப்பாக்கியைக் கொடுத்தார், அவன் இடது கை பழக்கம் உள்ளவன் என்று அவருக்குத் தெரியாது, அதில் வலது கை போல்ட் (bolt) இருந்தது. வெதர்பி (Weatherby) விற்பனையகம் நடத்தும் என்னுடைய இன்னொரு நண்பர் சொன்னார், "நான் அதை எடுத்து வெதர்பிக்கு அனுப்பி, உங்களுக்காக அதை ரீபோர் (rebore) செய்து, அதிலிருந்து ஒரு வெதர்பி மேக்னமை (Weatherby Magnum) உருவாக்கித் தருகிறேன்." அவர் கூறினார், "நீங்கள் அதைச் செய்தால், முப்பது டாலர்கள் செலவாகும்," அவர் கூறினார், "நான் அதை சுமார் பன்னிரண்டு டாலர்களில் செய்ய முடியும்," அவர் கூறினார், "என்னை-என்னை அதைச் செய்ய விடுங்கள்." 42 சரி, கடைசியாக, நான்-நான் சம்மதித்தேன், அவர் ஒரு மெத்தடிஸ்ட் சகோதரர், பரிசுத்த ஆவியானவரை அப்போது தான் பெற்றிருந்தார், மற்றும்-மற்றும் நான்-நான் அவரிடம், "தொடங்குங்கள்," என்று கூறினேன், அவர் அதைச் செய்ய அவ்வளவு தீவிரமாக விரும்பினார். நான் அதை சுடும் களத்திற்கு எடுத்துச் சென்று, அதில் ஒரு தோட்டாவை வைத்து, சுடுவதற்கு உயர்த்தினேன், அப்போது என் தலைக்கு மேல் சுமார் ஐந்து அடி உயரத்தில் நெருப்பைக் கண்டேன், ஒரு வினாடி அல்லது இரண்டு வினாடிகளுக்கு எனக்குத் தெரிந்தது அவ்வளவுதான். நான் இறந்து விட்டேன் என்று நினைத்தேன், ஒரு மகிமையான காரியம் என்னவென்றால், எனக்கு மிகவும் அமைதியான உணர்வு இருந்தது, நான்-நான்-நான்-நான்-நான் இறக்க நேர்ந்தால், நான் அதற்குப் பயப்படுவேன் என்று நினைக்க வில்லை என நம்புகிறேன். 43 ஆகையால், என்னால் பார்க்கவோ, கேட்கவோ முடியவில்லை, ஒன்றும் செய்ய முடியவில்லை. அது துப்பாக்கியை முழுவது மாக சுக்குநூறாக வெடிக்கச் செய்தது, அதன் குழல் ஐம்பது கெஜ தூரத்திற்கு இந்தப்பக்கமாகவும், அதன் பிடி மற்றும் பிற பாகங்கள் எனக்குப் பின்னால் ஐம்பது கெஜ தூரத்திற்கும் சென்றன, மேலும் துப்பாக்கியின் துண்டுகள் மரத்தின் பட்டையைக் கிழித்தன, மீதமிருந்தவை என் கையில் உருகின. எதையோ பீய்ச்சியடிப்பது போன்ற ஒரு சத்தத்தை என்னால் கேட்க முடிந்தது, அது ஒரு... சத்தம் போல் இருந்தது. என்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டு, என்ன நடந்தது என்று பார்க்க என் கண்களைத் திறந்து வைக்க முயன்றேன். 44 ஒரு துண்டு என் நெற்றியில் நேராகத் தாக்கியது, ஒன்று என் கண்ணைச் சுற்றி இப்படியும் அப்படியுமாகச் சென்றது, ஒன்று இந்தக் கன்ன எலும்பில், ஒன்று மண்டையோட்டிற்குள் சிக்கிக்கொண்டது, இது கண்ணின் இந்தப் பக்கத்தில் தாக்கியது, மற்றும் இது எலும்புக்குள் சென்றது, இது ஊடுருவிச் சென்று அந்தப் பல்லை அங்கிருந்து தட்டி விட்டது. ஆகையால் எனக்குப் பார்ப்பதற்குச் சற்று நேரம் பிடித்தது. 45 என்னுடன் இருந்த மனிதர், இலக்கு எங்கே தாக்கப்பட்டது என்று பார்க்க நடந்து கொண்டிருந்தார். என்னால் அவர் பேசுவதைக் கேட்க முடியவில்லை, அவருடன் பேசவும் முடியவில்லை, நான் என் கையால் இந்தக் கண்ணைத் திறந்து வைத்துக்கொண்டு, அவருக்கு சைகை செய்ய முயன்றேன். கடைசியாக, அவர் அங்கே வந்தார், சகோதரர் வுட், அவர் மிகவும் பதற்றமடைந்ததால் அவரால் காரைக்கூட ஸ்டார்ட் செய்ய முடியவில்லை. அதனால் நாங்கள்... கடைசியாக அந்த... நான் சென்று அதைக் கழுவிச் சுத்தப்படுத்தினேன், மேலும் சில துண்டுகளை அவர்கள் என் மண்டையோட்டிலிருந்து எடுத்தார்கள், நான் அந்தப் பெரிய துண்டுகளைப் பார்த்தேன், அவை மரத்தில் ஒன்றரை அங்குலம் அல்லது இரண்டு அங்குலம் ஆழத்தில் பாய்ந்திருந்தன. 46 இப்போது, வின்செஸ்டர் நிறுவனம் (Winchester Company) தங்கள் துப்பாக்கி அறுபத்தி தொள்ளாயிரம் பவுண்டு அழுத்தத்தைத் தாங்கும் என்பதை நிரூபிக்கிறது. இது, சுமார் நான்கு டன்னாக இருந்திருக்கும். ஆகையால் நீங்கள் காண்கிறீர்கள், என் கண்ணிலிருந்து ஒரு அங்குல தூரத்திற்குள் ஆறு அல்லது எட்டு டன் வெடித்திருக்க வேண்டும். அது, அது துப்பாக்கியை வெடிக்கச் செய்தால், அது சாதாரணமாக, அவ்வளவுதான் என்னில் மீதம் அங்கு கீழே இருந்திருக்கும். எனவே என்ன பிரச்சனை? துப்பாக்கியை போர் (bore) செய்தவர்கள் அதில் அதிக இடைவெளியை (headspace) விட்டுவிட்டார்கள், துப்பாக்கி முன்னோக்கி வெடிப்பதற்குப் பதிலாக, அது பின்னோக்கி வெடித்தது, அதனால் அது-அது என் முகத்தில் பாய்ந்து, சுமார் ஒன்றரை பவுண்டு எடையுள்ள அந்த போல்ட்டை வெடிக்கச் செய்தது, ஆ, என் ஆச்சரியமே, கன்சர்வேஷன் கிளப்பில் (Conservation Club) எனக்கு வெகு பின்னால் அமைந்திருந்த ஒரு மான் கூண்டிற்கு நேராக அது விழுந்தது. 47 நான் அதை நினைக்கும்போது, "தேவனே, நான் இங்கு இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்," என்று நினைத்தேன். சாத்தான் என்னை அங்கே கொல்ல முயன்றான் என்பதை உணர்ந்தேன், ஆனால் தேவன் நான் வீட்டிற்கு வரத் தயாராகும் வரை அவனால் அதைச் செய்ய முடியாது, அந்த நேரத்தில் நான் போகத் தயாராக இருக்கிறேன். ஜெபம் செய்ய இன்னும் சில நோயாளிகள் இருக்கிறார்கள், அல்லது செய்ய வேண்டிய ஏதோ ஒன்று இருக்கிறது. 48 பிறகு அந்த அழுத்தத்தைப் பற்றி நினைத்த போது, நான் நினைத்தேன், "உங்களுக்குத் தெரியுமா, அது எனக்கு ஏதோ ஒன்றை நினைவூட்டுகிறது." சில நிமிடங் களுக்கு, அதைச் சொல்வது நன்றாக இருக்கலாம். இது எதைக் காட்டுகிறது என்றால், அந்தத் துப்பாக்கி ஆரம்பத்திலேயே ஒரு வெதர்பி மேக்னமாகத் தொடங்கியிருந்தால், அது அந்த அழுத்தத்தைத் தாங்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும், ஆனால் அது ஒரு வெதர்பி மேக்னம் அல்ல, அது ஒரு வெதர்பி மேக்னமாக மாற்றப்பட்ட ஒரு வின்செஸ்டர், அதனால் அதால் அந்த அழுத்தத்தைத் தாங்க முடியவில்லை. நான் நினைத்தேன், "அது மிகவும் வியப்பான ஒரு காரியம். என்றாவது ஒரு நாள் அதிலிருந்து நான் ஒரு வேதப் பகுதியை எடுப்பேன்." 49 மீண்டும் பிறக்க வேண்டும் என்ற அடிப்படைக் காரியத்திற்குத் திரும்பாமல், நாம் கிறிஸ்தவர்கள் என்று நடித்துக்கொண்டு மட்டுமே தொடங்கினால், நீங்கள் அந்தப் பாதையில் எங்காவது வெடித்துச் சிதறுவீர்கள். அழுத்தம் மிகவும் கனமானது, நீங்கள் அதற்காக உருவாக்கப்பட்டிருக்காவிட்டால் உங்களால் அதைத் தாங்க முடியாது, தேவன் உங்களைப் பிடித்துக்கொண்டு, உங்களை மெருகேற்றுவது மட்டுமல்லாமல், தொடக்கத்திலிருந்தே ஆரம் பித்து உங்களை ஒரு உண்மையான மேக்னமாக, வார்த்தையைத் தாங்கும்படி உருவாக்கப்பட்ட, இந்த நாளின் அழுத்தத்தைத் தாங்கும்படி உருவாக்கப்பட்ட தேவனுடைய ஒரு உண்மை யான பிள்ளையாக கொண்டு வரும் வரை நீங்கள் அதற்காக உருவாக்கப்பட முடியாது. 50 பலரும் வெடித்துச் சிதறுகிறார்கள். மனிதர்கள் மற்றவர்களைப் போலப் பாசாங்கு செய்ய முயற்சிக்கிறார்கள், அதனால் அவர்கள் இன்று அல்லது நாளை வெடித்துச் சிதறுகிறார்கள். தேவன் நம்மை இந்த பூமிக்குக் கொண்டு வந்து சபையிலும், வெவ்வேறு காரியங்களிலும் நம்மை நிறுத்தியிருக்கிறார், நாம் நாமாகவே இருக்க வேண்டும். தேவன், தமது முன்னறிவினால், சபையில் வைத்திருக்கிறார், அதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அழுத்தம் உருவாகிறது, அது இன்றோ அல்லது நாளையோ அது-அது உங்கள் மீது வெளிப்படும். 51 சில இரவுகளுக்கு முன்பு எங்கள் போதகர், நோயுற்றிருக்கவில்லை, அவர் மிகவும் கடினமாக உழைத்ததால் சோர்வடைந்திருந்தார். என்னுடைய எல்லா அழைப்புகளையும் தவிர, அவருடைய அழைப்புகளையும் என்னிடம் கொடுத்தார்கள், நான் மருத்துவமனைக்குச் சென்றேன். அங்கே ஒரு குறிப்பிட்ட பெண்மணிக்கு-மறுநாள் காலை குடல் அறுவை சிகிச்சை (colostomy) நடக்கவிருப்பதாகவும், அவள் ஒருவேளை அறுவை சிகிச்சை மேசையிலேயே இறந்துவிடலாம் என்றும், அவள் ஒரு பாவி என்றும் அவர்கள் என்னிடம் கூறினார்கள். போதகரால் அவளைப் பார்க்கச் செல்ல முடியவில்லை, அதனால் அவர்கள்... நான் அவருடைய அழைப்பை ஏற்று, நான் அந்த... இடத்திற்குச் சென்றேன். 52 அவள் அறை எண் 321-ல் இருப்பதாக அவர்கள் கூறினார்கள். நான் மாடிக்குச் சென்றேன், பார்வையாளர்கள் நேரத்திற்குச் சற்று முன்பு என்பதால், நான் கனிவாக இருக்க விரும்பினேன், நான் அவளிடம் தனியாகப் பேச விரும்பினேன், நான், "அம்மா," அந்தத் தாதியிடம், "ஒரு குறிப்பிட்ட பெயரைக் கொண்ட ஒரு பெண்மணியைப் பற்றி என்னிடம் சொல்ல முடியுமா?" என்று கேட்டேன். அவள், "எனக்குத் தெரியாது," என்று சொன்னாள், முற்றிலும் அழுத்தத்தில் இருந்தாள். அதனால் நான், "அவள் 321-ல் இருப்பதாகச் சொன்னார்கள்," என்றேன். அவள், "அப்படியானால் ஏன் நீங்கள் 321-க்குச் சென்று பார்க்கக் கூடாது?" என்றாள். நான், "நன்றி, அம்மா," என்றேன். நான் 321-க்குச் சென்றேன், நான் கேட்டேன், "திருமதி நக்கிள்ஸ் (Mrs. Knuckles) என்ற பெயருள்ள பெண்மணி இங்கே இருக்கிறாரா?" "அந்தப் பெயரில் யாருமில்லை." ஓ, நான் மீண்டும் அந்தப் பெண்மணியிடம் செல்ல விரும்பவில்லை, அதனால் நான் அந்த கூடத்தைக் கடந்து, "திருமதி நக்கிள்ஸ் இங்கே இருக்கிறாரா?" என்று கேட்டேன். "இல்லை, திருமதி நக்கிள்ஸ் என்ற பெயரில் யாருமில்லை." அதனால் நான் திரும்பிச் சென்றேன், அங்கு கூடத்தில் வேறொரு தாதி இருந்தாள், நான் அவளிடம், "நான் 321-க்குச் செல்லும்படி கூறப்பட்டேன், திருமதி நக்கிள்ஸ் என்ற பெண்மணி இங்கே இருக்கிறாரா?" என்று கேட்டேன். அவள் சொன்னாள், "அது 221-ஆக இருந்திருக்கலாம். கீழே செல்லுங்கள்." நான், "சரி, அம்மா. நன்றி," என்றேன். 53 நான் கீழே சென்றேன், அங்கே ஒரு சிறிய மருத்துவர் அமர்ந்திருந்தார், தவறாக எண்ண வேண்டாம், நான் அதைத் தவறான அர்த்தத்தில் சொல்லவில்லை, அவர் எவ்வளவு உயரமாக இருந்தாரோ அவ்வளவு அகலமாகவும் இருந்தார், அங்கே அமர்ந்திருந்தார், தட்டையான தலைமுடி கொண்டவர், ஏறக்குறைய என் வயதுடையவர், தன்னுடைய ஸ்டெதாஸ் கோப்பை தன் விரலில் சுற்றிக் கொண்டிருந்தார், நான், "நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?" என்று கேட்டேன். அவர் வெறும் பக்கவாட்டில் பார்த்தார், நான் நினைத்தேன், "ஓஹோ, நான் அவரிடம் பேச விரும்பவில்லை, இங்கே அதிக அழுத்தம் இருக்கிறது." 54 அதனால் நான் அந்தத் தாதியிடம் சென்று, "அம்மா, நான் சற்று குழப்பத்தில் இருக்கிறேன்," என்றேன். நான் சொன்னேன், "திருமதி நக்கிள்ஸ் என்ற பெண்மணியைக் கண்டுபிடிக்க நான் மாடிக்குச் சென்றேன், அவர் 321-ல் இருக்க வேண்டும், காலையில் புற்றுநோய்க்காக ஒரு குடல் அறுவை சிகிச்சை செய்யப்படவிருக்கிறது." நான் கேட்டேன், "அவள் அந்தத் தளத்தில் இருக்கிறாளா என்று நீங்கள் சொல்ல முடியுமா? மேலிருந்த தாதி அவள் கீழே 322, ஆக, 331-ல் இருக்கலாம் என்று சொன்னாள்." அவள், "சரி, அப்படியானால், சென்று பாருங்கள்," என்றாள். நான், "நன்றி," என்றேன். 55 நான் மீண்டும் அங்கே சென்றேன். இல்லை, அவர்களுக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது. பிறகு நான் வெளியே வந்தேன், நான் வரும்போது, கூடத்தில் இருந்த ஒரு பெண்மணி, "அங்கே சென்று இந்தத் தாதியிடம் கேளுங்கள்," என்றார். அதனால் நான் அவளிடம் சென்றேன், அவள் சொன்னாள்... நான், "நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?" என்றேன். அவள், "நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?" என்றாள். மிகவும் கனிவாக, அமைதியாக. 56 மேலும் நான், "இந்தத் தளத்தில் ஒரு பெண்மணி இருக்கிறாரா என்று சொல்ல முடியுமா?" என்று கேட்டேன். நான் சொன்னேன், "நான் மிகவும் குழப்பமாக இருக்கிறேன்," நான்-நான் சொன்னேன், "நான் மாடிக்கும் கீழேக்கும் சென்றுகொண்டிருந்தேன்." நான் சொன்னேன், "திருமதி நக்கிள்ஸ் என்ற பெயருள்ள ஒரு பெண்மணி." 57 அவள் சொன்னாள், "ஒரு நிமிடம் இருங்கள், ஐயா." அவள் தன் முகத்தில் அணிந்திருந்த சிறிய முகக்கவசத்தைக் கழற்றினாள், அவள் அறுவை சிகிச்சைக்குச் சென்றிருந்தாள், அங்கே ஓடிச் சென்று அந்தப் புத்தகத்தை எடுத்தாள், அதில் தேடிப் பார்த்துவிட்டு, "ஓ, ஆம்," அவள் சொன்னாள், "அவள் 221-ல் இருக்கிறாள்." நான், "மிக்க நன்றி, அம்மா," என்றேன். அவள், "வரவேற்கிறேன்," என்றாள். 58 நான் நினைத்தேன், "நல்லது, தேவனுக்கு ஸ்தோத்திரம்! அது... அவளுக்கு இருக்கிறது... அவள், அவசரத்தில் இருந்தபோதிலும், அவள், அவளிடம் குறைந்தபட்சம் மரியாதையாவது இருக்கிறது." அதனால் நான் கதவுக்கு வெளியே நடந்து திரும்பி நடந்தேன், இங்கே மூன்று இருந்தது... மற்றும் பிரிவுகள் அனைத்தும் பிரிக்கப்பட்டிருந்தன, நான்-நான் எந்த வழியில் செல்வது என்று எனக்குத் தெரியவில்லை. நான் பார்த்தேன், என்னால் எந்தப் பலகைகளையும் பார்க்க முடியவில்லை, இங்கே அந்த சிறிய மருத்துவர் தனது பையை அடுக்கிக்கொண்டு, தனது ஸ்டெதாஸ்கோப்பை பிடித்துக்கொண்டு வந்தார், நான், "ஐயா, 221 எங்கே இருக்கிறது என்று நீங்கள் என்னிடம் சொல்ல முடியுமா?" என்று கேட்டேன். அவர், "இந்த வழி, மற்றும் அந்த வழி," என்றார். நான், "உங்கள் தகவலுக்கு நன்றி," என்றேன். அது... 59 ஆ, எல்லோரும் அழுத்தத்தில் இருக்கிறார்கள். சரிதான். நேரமில்லை, இல்லை... நான்... எல்லோரும் எங்கோ போய்க் கொண்டிருப்பது போல் தெரிகிறது, விரைந்து சென்று காத்திருக்கிறார்கள், முழு உலகமும் அதனால் பீடிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. மேலும் மருத்துவர்களிடம் அதற்கான மருந்து இல்லை. சரிதான். ஆனால் இன்றிரவு, நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், இதற்கெல்லாம் மத்தியில் ஒருவரிடம் அதற்கான மருந்து இருக்கிறது என்பதை நான் அறிவேன், அதுதான் தேவன், இந்த அழுத்தத்திலிருந்து எப்படி விடுபடுவது என்பதற்கான மருந்து அவரிடம் இருக்கிறது. 60 நான் இதைப் பற்றி ஒரு மருத்துவரிடம் பேசிக்கொண்டிருந்தேன், ஆ, ஒரு வருடம் அல்லது அதற்கும் மேலாகிவிட்டது, அவர் சொன்னார், "சகோதரர் பிரான்ஹாம்," அவர் சொன்னார், "உங்களுக்குத் தெரியுமா, பைத்தியக் கார மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன." அவர் சொன்னார், "மனநல மருத்துவர்கள்-உடைந்து கொண்டிருக்கிறார்கள், மனநல மருத்துவர்களுக்குச் சிகிச்சையளிக்க மனநல மருத்துவர்களை வைத்திருக்கிறார்கள்." அதற்கு நான், "ஓ, என்னே!" என்றேன். அவர், "இதற்கு என்ன தீர்வு என்று நான்-நான் ஆச்சரியப்படுகிறேன்," என்றார். நான், "என்னிடம் அது இருக்கிறது," என்றேன். அவர், "என்ன?" என்றார். நான், "இயேசுவே பதில். இவை அனைத்திற்கும் அவரே பதில்," என்றேன். அதற்கு அவர், "நான்-நான் நீங்கள் சொல்வது சரி என்று நம்புகிறேன்," என்றார். 61 இந்த நரம்புத்தளர்ச்சி (neurotic) காலத்தில், யாருக்கும் ஒரு நிமிடம் கூட இல்லை. ஏன், முன்பு நாம் பக்கத்து வீட்டுக்காரர்களைச் சென்று சந்திக்கும் வழக்கம் இருந்தது. 62 சகோதரிகளாகிய உங்களில் சிலருக்கு, ஏன், ஜெபம் செய்ய நேரம் இல்லை. நான்-நான் ஜான் வெஸ்லியைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன். சகோதரி சுசன்னா வெஸ்லிக்கு பதினேழு குழந்தைகள் இருந்தன, அவரிடம் தானியங்கி சலவை இயந்திரம் மற்றும் உலர்த்தி இருக்கவில்லை, அவள் குழாயைத் திறந்து சுடுநீரைப் பெறவில்லை, அவள் ஒரு பழைய தேவதாரு மர வாளியில் நீரூற்றிலிருந்து அதைச் சுமந்து வந்தாள், ஆனாலும், அந்தச் சிறு பிள்ளைகளைச் சுற்றி அமரவைத்து அவர்களுக்கு வேதாகமத்தைக் கற்பிக்க ஒவ்வொரு நாளும் இரண்டு முதல் மூன்று மணிநேரம் அவளால் கண்டுபிடிக்க முடிந்தது. அங்கிருந்துதான் உலகத்தின் போக்கையே மாற்றிய ஒரு சார்லஸும் ஒரு ஜானும் வந்தார்கள். 63 இப்போது, பாருங்கள், நாம்-நாம் மிகவும் பைத்தியமாக இருக்கிறோம், எங்கோ செல்கிறோம், ஆனால் எங்கும் செல்லவில்லை, கண்மூடித்தனமாகச் சென்றுகொண்டிருக்கிறோம். 64 இப்போது, பழைய ஏற்பாட்டில் ஒரு மனிதன் ஏதாவது தவறு செய்திருந்தால், மற்றும், ஒருவேளை அவன் ஒரு மனிதனைக் கொன்றிருந்தால், அல்லது-அல்லது ஏதேனும் தவறு செய்திருந்தால், பிறகு அந்த-அவன் கொன்ற மனிதன், அவனுடைய நண்பர்கள் இந்த மனிதனைக் கண்டுபிடிக்கும் வரை தேடி அவனையும் கொல்வார்கள், ஏனென்றால் பழைய ஏற்பாடு, "பல்லுக்குப் பல், கண்ணுக்குக் கண்," என்பதாக இருந்தது. 65 ஆனால் யோசுவா, "அடைக்கலப் பட்டணங்கள்" என்று அழைக்கப்பட்ட சில இடங்களைக் கட்டினார். இந்த இடங்கள், அவற்றில் ஒன்று ராமோத்-கீலேயாத்தில் உள்ளது, தாண் முதல் பெயெர்செபா வரை நான்கு இடங்கள் இருந்தன என்று நான் நினைக்கிறேன். அவை அடைக்கல இடங்களாக இருந்தன, அங்கு ஒரு மனிதன் தவறு செய்துவிட்டு அதைச் செய்ய விரும்பவில்லை என்றால், அவன் இந்த அடைக்கலப் பட்டணங்களில் ஒன்றின் நகர வாசல்களுக்கு வந்து தன் வழக்கை மன்றாடி, தான் இந்தத் தீமையைச் செய்ய நினைக்கவில்லை என்று அவர்களிடம் கூறலாம், பிறகு அவன் இந்த நகரத்திற்குள் வந்து தன் எதிரியிடமிருந்து பாதுகாப்பாக இருக்க முடியும். 66 சரி, அவன் பொய் சொல்லி, துரத்தி வருபவர்கள் அவனைக் கண்டுபிடித்தால், அவன் பொய் சொல்லியிருந்தால், அவர்கள் அவனை பலிபீடத்திலிருந்தே நேராக இழுத்துச் செல்ல முடியும். ஆனால் அவன் உண்மையாக இருந்து, அவன் தவறு செய்ய விரும்பவில்லை என்றால், ஏன், அவர்களால் முடியும், அவன் இந்த நகரத்தில் இருக்கும் வரை அவன் பாதுகாப்பாக இருக்க முடியும். இப்போது, அது ஒரு பாதுகாப்பான இடம், கொலையாளி, அல்லது, அவனைக் கொல்லத் துரத்துபவர், அவரிடமிருந்து அவன் பாதுகாப்பாக இருந்த ஒரு அடைக்கல இடம், அவன் பாதுகாக்கப் பட்டான், ஆனால் அந்த மனிதன் முதலில்-தற்செயலாக அதைச் செய்த ஒரு மனிதனாக இருக்க வேண்டும். அவன் வேண்டுமென்றே, திட்டமிட்டு அதைச் செய்திருந்தால், அந்த மனிதனுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை, அவனுக்கு ஒரு-ஒரு வாய்ப்பு கூட இருக்கவில்லை. ஆனால் அவன் அதைச் செய்ய எண்ணியிருக்கவில்லை என்றால்... 67 இப்போது, நான் ஒரு நிமிடம் இங்கே நிறுத்த விரும்புகிறேன். இன்று மக்கள் இருக்கிறார்கள், உங்களில் சிலரும் இங்கே இருக்கலாம், நீங்கள் தவறு செய்கிறீர்கள் ஆனால் நீங்கள் அதைச் செய்ய நினைக்கவில்லை. கர்த்தருடைய நாமத்தை வீணாகப் பயன்படுத்தும் மனிதர்களை நான் சந்தித்திருக்கிறேன், கையில் சிகரெட்டுடன் நின்று புகைப்பிடித்துக் கொண்டிருக்கும் பெண்களை நான் சந்தித்திருக்கிறேன், சபிக்கும் மனிதர்களை, நீங்கள் அவர்கள் முன்னிலையில் அப்படி நடந்து செல்லும்போது, அவர்கள் உங்களை ஒரு கிறிஸ்தவன் என்று அறிந்துகொண்டு, அவர்கள் சொல்வார்கள், "என்னை மன்னியுங்கள், ஐயா, நான்-நான் அதை அப்படிச் சொல்ல நினைக்கவில்லை." 68 பெண்கள் வெட்கத்தால், சிகரெட்டைப் பின்னால் மறைத்து வைத்துக்கொண்டு தங்கள் கைகளை கிட்டத்தட்ட சுட்டுக்கொள்வதை நான் பார்த்திருக்கிறேன், குடிக்கும் ஒரு மனிதன் தப்பிக்க முயல்வான், எங்காவது விலகிச் செல்வான், பாருங்கள், அவர்களுக்கு, அதைப் போன்றவர்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அவர்களில் சிலர் ஒரு கிறிஸ்தவரின் முன்னிலையிலேயே நேராக நடந்து வந்து சபிப்பார்கள், புத்திசாலித்தனமாகச் செயல் படுவதற்காக, அந்த மனிதனுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. 69 நீங்கள் தவறான செயல்களுக்கு எதிராகவும், பரிசுத்தத்தைப் பற்றியும் பிரசங்கிக்கும் போது, பெண்கள் ஒழுக்கமற்ற உடைகளை அணியக்கூடாது என்று பிரசங்கிக்கும் போது, இந்தச் சிறிய பழைய உடைகள், அவர்கள் அணியும் அரைக்கால் சட்டைகள் (shorts), அவர்கள் அதை வெறும் மோசமாக இருப்பதற்காகவே அணிகிறார்கள், அவர்கள் அப்படிச் செய்யும்போது, அவர்களுக்கு எந்த அடைக்கல இடமும் இல்லை. அது அங்கே இருந்தாலும், அவர்கள் அதைத் தேட மாட்டார்கள், அதனால் இன்றோ அல்லது நாளையோ, அவர்கள் பிடிபடுவார்கள். 70 ஆனால் தப்பிக்க ஒரு இடத்தை விரும்புபவர்களுக்கு, நீங்கள் தவறு செய்யும்போது உங்களால் வசதியாக உணர முடியாது, வசதியாக உணர எந்த வழியும் இல்லை. ஒரு மனிதன் தேவனுடைய சட்டங்களை மீறும்போது, தான் குற்றவாளி என்று அவனுக்குத் தெரியும், நரகத்தின் வேட்டை நாய்கள் உங்களுக்கு நேர் பின்னால் இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியும், இன்றோ அல்லது நாளையோ உங்கள் பாவங்கள் உங்களைக் கண்டுபிடிக்கும். 71 வணிகர்களாகிய உங்களில் சிலர், நீங்கள் இங்கிருந்து வெளியே சென்று யாரையாவது வேண்டுமென்றே ஏமாற்றினால், நீங்கள் தவறு செய்துள்ளீர்கள் என்று உங்களுக்குத் தெரியும், இன்றோ அல்லது நாளையோ அது உங்களைப் பிடிக்கும், அது சரிதான். அவர்கள் நம்புகிறார்கள் "ஓ, சரி, அது ஒன்றும் செய்யாது," என்று, ஆனால் நீங்கள் இரவில் படுக்கத் தொடங்கும்போது, உங்களுக்குள் இருக்கும் ஏதோ ஒன்று நீங்கள் ஜெபிக்கும்போது உங்களுக்குச் சொல்கிறது, அது உங்களுக்கு நேராக முன்னால் நிற்கிறது. நீங்கள் தவறு செய்தீர்கள் என்று உங்களுக்குத் தெரியும். 72 இப்போது, நம்மால் சந்திக்க முடியாத காரியங்கள் நம் அனைவரிடமும் உள்ளன. சில நேரங்களில் நம்மால் அடைக்க முடியாத கடன்கள் நமக்கு உள்ளன. சில நேரங்களில் நம்மால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள் நமக்கு உள்ளன, எனக்கு அப்படி நிறைய இருக்கின்றன, ஆனால் நான் நன்றாக உணரும் ஒரு காரியம் இருக்கிறது, இரவில், என்னால் முடிந்த அனைத்தையும் நான் செய்த பிறகு, என்னால் முடிந்த ஒவ்வொரு நோயாளியையும் நான் சந்தித்த பிறகு, ஆனாலும் அவர்களில் பலர் நினைப்பார்கள், "அவர் ஒரு மாயக்காரர், அவர் என்னிடம் வரவே இல்லை, என் குழந்தையும் அவ்வளவு முக்கியமானதுதான்," அவர்கள் அப்படி உணர்கிறார்கள் என்று எனக்குத் தெரியும், அவர்கள் அப்படி உணர்வது இயல்புதான், ஆனால் நான் என் கடைசி துளி ஆற்றலையும் பயன்படுத்திய பிறகு, என்னால் முடிந்த மிகச் சிறந்ததை நான் செய்த பிறகு, நான் இரவில் பிதாவின் முன்பாக முழங்கால்படியிட்டு, "தேவனே, இன்றிரவு இந்த நகரத்தில் நூறு பேர் என்னை தங்களிடம் வரும்படி அழைக்கிறார்கள், ஆனால் என்னால் இனிமேல் செல்ல முடியாது, என் பலம் உமக்குத் தெரியும்," என்று நான் கூறும்போது, அவர் என்னை அழைத்தால், நான் என் தலையை அந்தத் தலையணையில் வைத்து, அந்த இரவில் அந்தத் தலையணையில் நான் இறக்க நேர்ந்தாலும், நான் ஒரு அடைக்கலத்தில் இருக்கிறேன் என்று உணர்கிறேன், என் ஆண்டவருக்காக என்னால் முடிந்த மிகச் சிறந்ததை நான் செய்திருக்கிறேன். அதை நாம் செய்ய முடிந்தால், தேவன் நமக்காக ஒரு வழியை ஏற்படுத்துகிறார். 73 இப்போது, இந்த அடைக்கல இடத்திற்கு வரும் இந்த மனிதன், இப்போது, அவன் அங்கே வரும்போது, முதலில் அவன் உள்ளே வர விரும்ப வேண்டும், தன்னை நெருங்கி வரும் கோபாக்கினையிலிருந்து தப்பிக்க அவன் விரும்ப வேண்டும், அவன் அதைச் செய்ய விரும்பியாக வேண்டும். 74 இப்போது, நான் இதை விமர்சனமாகச் சொல்லவில்லை, அது தேவனுக்குத் தெரியும், அது அதிலிருந்து பத்து லட்சம் மைல் தூரத்தில் இருக்கிறது, ஆனால் பிரசங்கிகள் பிரசங்கம் செய்யும் கூட்டங்களுக்கு நான் சென்றிருக் கிறேன், அவர் சொல்வார், "உங்களில் சிலர் வரிசைகளின் வழியே பின்னால் சென்று, உங்கள் நண்பர்களைக் கண்டுபிடித்து, அவர்களை இங்கே கொண்டு வாருங்கள்." இப்போது, நான்-நான் எப்போதும் அதில் சற்று தயக்கம் காட்டுவேன். வார்த்தை-வார்த்தை உணர்த்தா விட்டால் நான் நம்புகிறேன்! அது அப்படிச் செய்தால், பரிசுத்த ஆவியானவர் நடத்துவார். அது மிகவும் உணர்ச்சிவசப்பட்ட ஒன்று. கிறிஸ்துவிடம் வரும் ஒரு மனிதன் விவேகத்துடன், பயபக்தியுடன் வர வேண்டும், பரிசுத்த ஆவியானவர் அவனைக் கண்டித்து உணர்த்துவதன் அடிப்படையில், மற்றும்-மற்றும் அவனைக் காப்பாற்ற யாரோ ஒருவர் மரித்தார் என்பதை அவனுக்குக் காட்டுவதன் அடிப்படையில், வார்த்தையின் அடிப்படையில் விவேகத்துடன் வந்து, நம்பி, அவனுடைய ஜீவனுக்குப் பதிலீடான கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள வேண்டும். 75 இப்போது, கிறிஸ்துவிடம் வரும் ஒரு மனிதன், மற்றும் கிறிஸ்துவே நமது அடைக்கலம் என்று நான் நம்புகிறேன், இப்போது, அதுதான் புதிய ஏற்பாட்டு அடைக்கலம், அதுவே கிறிஸ்து, இப்போது, இந்த அடைக்கலத்திற்கு வரும் ஒரு மனிதன் வர விரும்ப வேண்டும், மேலும் அவன் வேறொரு காரியத்தையும் நினைவில் கொள்ள வேண்டும், அவன் அங்கே தங்க வேண்டும். ஆ, என் ஆச்சரியமே, துரத்துபவர்கள் கடந்து செல்லும் வரை அவன் சும்மா உள்ளே ஓடிவந்துவிட்டு, மீண்டும் வெளியே செல்ல முடியாது, அவன் திருப்தியடைந்திருக்க வேண்டும். 76 சரியான மனநிலையுள்ள ஒரு மனிதன், மரணம் தனக்குப் பின்னால் பாய்ந்து வருவதையும், தான் பிசாசின் நரகத்திற்குச் செல்வதையும் பார்க்க முடிந்து, ஒரு அடைக்கல இடத்தைக் கண்டுபிடிக்க முடிந்த பிறகு, மீண்டும் வெளியே செல்ல விரும்பினால், அந்த மனிதனிடம் ஏதோ தவறு இருக்கிறது என்று நான் நம்புகிறேன். அவன் அடைக்கலத்திற்குள் இருக்கும் வரை, அவன் பாதுகாப்பாக இருக்கிறான், அவன் மீண்டும் வெளியே சென்றால், அவன் அவனைக் கொல்பவர்களுக்கு ஆளாகிறான். மேலும் கிறிஸ்துவுக்குள் நமக்கு ஒரு அடைக்கலம் இருக்கிறது மற்றும் பாதுகாக்கப்படுகிறோம், தேவனுடைய கோபாக் கினையிலிருந்தும், நம் மீது வரும் நரகத்தின் கோபாக்கினையிலிருந்தும் நமக்கு பாதுகாப்பு இருக்கிறது. 77 இப்போது, இந்த அடைக்கல இடம், இந்த மனிதன் தங்க விரும்ப வேண்டும், இன்றும் அதே நிலைதான், நாம் தங்க விரும்ப வேண்டும். நான் இதைச் சொல்லட்டுமே: நான் இப்போது பிரசங்க பீடத்தின் பின்னால் இருந்து, விரைவில் முப்பத்திரண்டு வருடங்கள் ஆகப் போகிறது, நான் ஒரு சிறுவனாக இருந்தபோதே பிரசங்கிக்கத் தொடங்கினேன், என் இருதயத்தின் ஆழத்திலிருந்து இதைச் சொல்கிறேன், இந்த மகிமையான இடத்தை விட்டு விலக நான் ஒருபோதும் விரும்பியதில்லை. "நான் தேவனுடைய கூடாரத்தில் பாதுகாப்பாக இருக்கிறேன், அவருடைய அன்பிலும் கிருபையிலும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்," என்று எழுத்தாளர் கூறுவது போல, "நான் அல்லேலூயா பக்கத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்." இங்கு இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பூமியின் அனைத்து பொன் கோடிகளுக்காகவும் இந்த ஆசீர்வதிக்கப்பட்ட இடத்தை நான் விட்டு விலக மாட்டேன் (இல்லை.), சோதிக்கிறவன் என்னை இணங்கச் செய்ய பலமுறை முயன்றாலும், ஆனால் நான் தேவனுடைய கூடாரத்தில் பாதுகாப்பாக இருக்கிறேன், அவருடைய அன்பிலும் கிருபையிலும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். 78 ஆ, இது இருக்க எவ்வளவு வசதியான இடம்! நான் இருக்கும் வரை என் எதிரியிடமிருந்து நான் பாதுகாப்பாக இருக்கிறேன் என்று எனக்குத் தெரியும்... 79 இப்போது, இந்த மனிதன் ஓடும்போது, அவனுக்குப் பின்னால் ஒரு எதிரி இருக்கிறான், அவன் செய்த பாவத்திற்காக விரைவில் அவன் அவனைப் பிடித்துத் துண்டு துண்டாக வெட்டுவான், ஆனால் அவன் உள்ளே இருக்கும்போது, அவன் தனது அழுத்தத்தை விட்டுவிடலாம், அவன் பாதுகாப்பாக இருக்கிறான். வாசல் காவலாளி அவனைப் பிடிப்பான், அவனைக் கொல்பவர்கள் உள்ளே நுழைவதற்கு முன்பே, ஏனென்றால் அவன் அடைக்கலக் கோபுரத்திற்குப் பாதுகாப்பாக வந்துவிட்டான். இப்போது, அவன் அங்கே இருக்கும்போது அவன் எப்படிப் பாதுகாப்பாக உணர்ந்து அழுத்தத்தை விட்டுவிட முடியும்! "அப்பாடா, என் ஆச்சரியமே! அவர்கள் என்னைப் பிடிக்கத் தயாராக இருந்தார்கள், ஆனால் நான் இப்போது முற்றிலும் பாதுகாப்பாக இருக்கிறேன்." ஒரு அடைக் கலத்தைக் கண்டுபிடிக்க என்னவொரு இடம், ஒரு பாதுகாப்பான இடம்! வெளியே அவன் இறந்துவிடுவான், அங்கே உள்ளே அவன் நலமாக இருக்கிறான். 80 எனவே தேவன் நமக்கு ஒரு அடைக்கலக் கோபுரத்தை உருவாக்கினார். இப்போது, வேதாகமம் கூறுகிறது, "கர்த்தரின் நாமம் பலத்த துருகம், நீதிமான் அதற்குள் ஓடி, பாதுகாப்பாக இருக்கிறான்." "அவர்கள் இனிமேல் வேட்டையாடப்படுவார்கள்" என்று அல்ல, ஆனால், "அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்" என்று. ஆ, நான் அதை அப்படியே நேசிக்கிறேன்! தேவன் வழங்கிய பாதுகாப்பு இடம். ஆமென். எதிரியால் உங்களைப் பிடிக்க முடியாது, ஏனென்றால் நீங்கள் கிறிஸ்துவுக்குள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள். 81 நான் அடிக்கடி சொல்வது போல், ஒருமுறை கிழக்கத்திய நாடுகளில், நான் ஒரு போதக நண்பருடன் ஜீப்பில் சென்று கொண்டிருந்தேன், நாங்கள் ஒரு குன்றின் மீது ஏறிக் கொண்டிருந்தோம், அங்கே சில செம்மறியாடுகளும், கழுதைகளும், மற்ற எல்லாமும் மேய்ந்து கொண்டிருந்தன, ஒரு மனிதர் அவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தார், நான் கேட்டேன், "அந்த மனிதரை நீங்கள் என்னவென்று அழைப்பீர்கள்?" அவர் சொன்னார், "சகோதரர் பிரான்ஹாம், அவர் ஒரு மேய்ப்பன்." நான் சொன்னேன், "சரி, ஒரு மேய்ப்பன் செம்மறியாடுகளை மட்டுமே மேய்ப்பான் என்று நான் நினைத்தேன்." "ஓ," அவர் சொன்னார், "இல்லை, ஒரு மேய்ப்பன் செம்மறியாடுகள், வெள்ளாடுகள், மாடுகள், கழுதைகள், ஒட்டகங்கள், மற்றும் எதை வேண்டுமானாலும் மேய்ப்பான்." நான் சொன்னேன், "சரி, அது எனக்குத் தெரியாது." 82 அவர் சொன்னார், "ஆனால் சகோதரர் பிரான்ஹாம், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று இங்கே இருக்கிறது," அவர் சொன்னார், "சூரியன் மறையத் தொடங்கும் போது, மேய்ப்பன் எல்லா மிருகங்களுக்கு இடையிலும் சென்று, கடைசி செம்மறி யாட்டைக் கண்டுபிடிக்கும் வரை தேடி, அவற்றை கிடைக்குள் கொண்டு வந்து, இரவில் கிடைக்குள் அடைப்பான், ஆனால் அவன் அனைத்தையும் மேய்த்தாலும், மற்றவை வெளியே தங்கிவிடும்." 83 அப்போது எனக்கு ஒரு எண்ணம் வந்தது, "ஓ தேவனே, என்னை ஒரு கழுதையாக இருக்க விடாதீர், என்னை ஒரு செம்மறியாடாக இருக்கப் பண்ணும், என் தீபம் மங்கும்போதும், என் வாழ்க்கையின் சூரியன் மறையும்போதும், என் கண்கள் மூடும்போதும் என்னை பத்திரமாக கிடைக்குள் சேர்த்துக்கொள்ளும். நான் ஒரு பெயரளவு கிறிஸ்தவனாக அங்கே வெளியே விடப்பட விரும்பவில்லை, நான் ஒரு உண்மையான செம்மறியாடாக இருக்க விரும்புகிறேன். நான் விரும்புகிறேன்..." 84 வேதாகமம் சொல்வது போல் அவையெல்லாம் ஒரே மேய்ச்சல் நிலத்தில் சாப்பிடுகின்றன, "நீதிமான்கள் மீதும் அநீதிமான்கள் மீதும் மழை பெய்கிறது." மக்கள் ஒன்றாக அமர்ந்திருக்கிறார்கள், மக்களின் கூட்டங்கள், அவர்களில் சிலர் அப்படி இருக்கிறார்கள், சிலர் இல்லை. அவர்கள் அனைவரும் ஒரே ஆவியின் மேல் விழுகிறார்கள், ஆவியானவர் அதே கூட்டத்தை ஆசீர்வதிப்பார். அது பெய்யும், மழை நெருஞ்சிலின் மீதும் பெய்யும், அது நேராக நிமிர்ந்து மகிழும், கோதுமையின் மீது பெய்து அதை உருவாக்கும் அதே மழைதான், ஆனால், "அவர்களுடைய கனிகளால் அவர்கள் அறியப் படுகிறார்கள்." கிறிஸ்தவர்கள் ஒரு கிறிஸ்தவ வாழ்க்கையைக் கனியாகக் கொடுக்கிறார்கள். 85 இப்போது கவனியுங்கள், தேவனுடைய பாதுகாப்பு வலயம், தேவனுடைய பாது காப்பான இடம், நாம் இங்கே இந்த அடைக்கலத்திற்குள் இருக்கும்போது, தேவனு டைய குணமாக்கும் வல்லமைக்கு நமக்கு ஒரு உரிமை உண்டு. தேவன் தம்முடைய சத்துருவை மன்னித்து அடைக்கலத்திற்குள் ஏற்றுக்கொள்வார் என்றால், அவனை உள்ளே கொண்டுவந்த பிறகு அவர் அவனை எவ்வளவு அதிகமாகப் பார்த்துக் கொள்வார்? பாருங்கள்? அங்கே குணமாக்கும் வல்லமை இருக்கிறது, எனவே கிறிஸ்தவர்கள் வியாதிப்படும் போது, அதைக் குறித்து பதற்றமடைய வேண்டியதில்லை, "அவருடைய தழும்புகளால் நாம் குணமானோம்" என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். அதுதான் வாக்குத்தத்தம், அவர் அதை வாக்குத்தத்தம் செய்தார், அதனால் அவரால் அதைத் திரும்பப் பெற முடியாது. 86 இது நமது வியாதிகளுக்கும், நமது கவலைகளுக்கும் ஒரு அடைக்கலமான இடம், "அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்." இது ஒரு அடைக்கலம், அவருடைய வார்த்தையை, அவருடைய வாக்குத்தத்தங்களை நம்புங்கள். அவர் செய்த ஒவ்வொரு வாக்குத்தத்தமும் நீங்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கும் வரை உங்களுக்கு உரியது. அடைக்கலத்திற்காக நீங்கள் அவரிடம் வரும் வரை, அவர் செய்த ஒவ்வொரு வாக்குத் தத்தத்திற்கும் உங்களுக்கு உரிமை உண்டு. இங்குள்ள அல்லது வேறு எங்குமுள்ள ஒவ்வொரு கிறிஸ்தவனும், கிறிஸ்து எதற்காக மரித்தாரோ அதற்கெல்லாம் உரிமை உள்ளவர்கள், நீங்கள் கிறிஸ்துவுக்குள் இருக்கும்போது முழுவதையும் சுதந்தரித்துக் கொள்கிறீர்கள், அது முழுவதும் உங்களுடையது. அது முற்றிலும் உண்மை. 87 சூனேமியாள் ஸ்திரீயைப் பாருங்கள், அவளுக்கு இருந்தபோது... அந்தச் சிறு குழந்தை மரித்துவிட்டது. ஓ, கர்த்தரால் அவளுக்குக் கொடுக்கப்பட்ட அந்தச் சிறியவன், தீர்க்கதரிசி பேசியபோது... சுமார் பன்னிரண்டு வயதுடைய அந்தச் சிறு பையன், ஒருநாள் அறுவடை வயலில் தன் தந்தையுடன் இருந்தான், அவனுக்கு ஒருவேளை வெயில் தாக்கியிருக்கலாம், "என் தலை" என்று அழுதான். தகப்பன் வீட்டிற்கு வந்தவுடனே, அங்கே புலம்பல், மற்றும் பல காரியங்கள் இருந்தன, அந்தச் சிறு குழந்தை மரித்துவிட்டது, சிறு பையன், அவள் அவனை எலியாவின் படுக்கையில் கிடத்தினாள். அவள் சொன்னாள், "ஒரு கழுதையை ஆயத்தப்படுத்து. நான் தீர்க்கதரிசி இருக்கும் குகைக்குப் போகிறேன்." அவளுடைய கணவன் சொன்னான், "இது அமாவாசையும் அல்ல, ஓய்வுநாளும் அல்ல, அவர் அங்கே இருக்கமாட்டார்." அவள் சொன்னாள், "எல்லாம் நலமாயிருக்கும்." 88 அப்படியே அவள் வருவதைக் கேயாசி கண்டபோது, எலியா தன் குகையின் வாசலில் நின்று வெளியே பார்த்தான், அவன் சொன்னான், "இதோ அந்த சூனேமியாள் வருகிறாள், அவள் வேகமாக சவாரி செய்கிறாள், ஏதோ தவறாக இருக்க வேண்டும்." அவன் சொன்னான், "போய் அவளைக் கேள்." அவன்-அவன் சொன்னான், "உனக்குச் சுகமா? உன் புருஷனுக்குச் சுகமா? பிள்ளைக்குச் சுகமா?" அவள் சொன்னாள், "சுகமே. எல்லாம் சரியாக இருக்கிறது." 89 ஏன்? அவளால் அழுத்தத்தை விடுவிக்க முடிந்தது, அவள் தேவனுடைய பிரதிநிதியிடம் வந்திருந்தாள், அவள் ஜீவனுள்ள வார்த்தையிடம் வந்தாள், "கர்த்தருடைய வார்த்தை தீர்க்கதரிசிகளுக்கு வந்தது." அவளுக்குப் பிள்ளை பிறக்கும் என்று அவளுக்குச் சொல்லும் அளவுக்கு தேவனிடம் தயவு பெற்ற இந்த மனிதனுடைய பிரசன்னத்தில் அவள் இருந்த போது, அவள் சத்தியமாயிருந்த தேவனுடைய வார்த்தையைக் கொண்டிருந்த அதே மனிதனின் பிரசன்னத்தில் இருந்தாள். அல்லேலூயா! 90 பாவ வாழ்க்கையிலிருந்து என்னை இரட்சித்து, கடைசி நாட்களில் என்னை எழுப்புவேன் என்று வாக்குத்தத்தம் செய்த, என் வியாதியைக் குணமாக்கும், நான் இங்கே இருக்கும்போது என்னைப் பாதுகாக்கும் அதே தேவனின் பிரசன்னத்தில் இன்றிரவு இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், அழுத்தம் நீங்கிவிட்டது, அழுத்தத்தைப் பற்றி மறந்து விடுங்கள். 91 அவள் மேலே வந்து, எலியாவின் பாதத்தில் விழுந்து, "எல்லாம் நலமாயி ருக்கிறது" என்று சொன்னாள். நிச்சயமாக, அவள் வார்த்தையிடம் வந்தாள், அவள் தேவனின் பிரசன்னத்திற்குள் வந்தாள், அழுத்தம் நீங்கியது. இப்போது எல்லாம் நலமாயி ருக்கிறது, அழுத்தம் நீங்கிவிட்டது, ஏனென்றால் அவள் தேவனுடைய பிரதிநிதியிடம் வந்துவிட்டாள். 92 இன்று பூமியில் தேவனுடைய பிரதிநிதி பரிசுத்த ஆவியானவரே. நீங்கள் அவருடைய பிரசன்னத்தில் இருக்கும்போது, அவர் உங்களை ஆசீர்வதிப்பதைக் காணும்போது, உங்கள் அயலாரை வெறுக்கக்கூடிய அளவுக்கு ஒரு அழுத்தத்தை உங்களால் எப்படி உருவாக்கிக் கொள்ள முடியும்? உங்கள் இருதயத்தில் ஒரு சபைப் பிரிவின் வேறுபாட்டை உங்களால் எப்படி உருவாக்கிக்கொள்ள முடியும்? "அவர்கள் பெந்தெகொஸ்தேக்காரர்களாக இல்லாவிட்டால், அவர் ஒன்னெஸ் (Oneness) அல்லது அவர் த்ரீனஸ் (Threeness) ஆக இருந்தால், அவர் அசெம்ப்ளீஸ் (Assemblies) சபையைச் சேர்ந்தவராக இருந்தால், அவர் சர்ச் ஆஃப் காட் (Church of God) சபையைச் சேர்ந்தவராக இருந்தால், நான் அவரோடு ஐக்கியம் கொண்டிருப்பேன்" என்று சொல்வது. சர்வவல்லமையுள்ள தேவனின் பிரசன்னத்தில் உங்களால் அதை எப்படிச் செய்ய முடியும்? பரிசுத்த ஆவியானவர் ஒரு சபையார் மீது இறங்கும்போது, சபைப் பிரிவுகளின் வேறுபாடுகளை எப்படி உருவாக்க முடியும்? அது எப்படி அதைச் செய்ய முடியும்? அழுத்தத்தை விடுவியுங்கள். 93 பிரச்சனை என்னவென்றால், நாம் சபைப் பிரிவுகளின் சிந்தையோடு இருப்பதால், நமது அழுத்தத்தை நாம் உருவாக்கிக் கொண்டோம். ஓ, அமெரிக்கா அதனாலும், சபைப் பிரிவுகள், வேலிகள் அமைத்தல், விசுவாசப் பிரமாணங்கள் ஆகியவற்றாலும் சீரழிந்து கிடக்கிறது. அந்த விசுவாசப் பிரமாணங்கள் மற்றும் வேலிகளைப் பற்றி உங்களுக்கு என்ன கவலை? தேவனின் பிரசன்னத்திற்குள் வாருங்கள், பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்திற்குள் வாருங்கள், அதன்பிறகு அழுத்தத்தை விடுவியுங்கள். 94 இந்த வியாபாரிகளின் ஐக்கியக் கூட்டங்களைப் பற்றி நான் விரும்பும் ஒரு நல்ல காரியம் அதுதான், நீங்கள் உங்கள் சட்டைக் காலரைத் தளர்த்திவிட்டு, அழுத்தத்தை விடுவித்துவிடுகிறீர்கள், அதற்காக வெட்கப் படுவதில்லை. மிகச்சிறந்த ஹோட்டல்களிலும், மிகச்சிறந்த இடங்களிலும் நான் அவர்களுடன் நின்றிருக்கிறேன், பரிசுத்த ஆவியானவர் ஒரு பிரஸ்பிடீரியன், பாப்டிஸ்ட், மெத்தடிஸ்ட் அனைவர் மீதும் இறங்க விடுங்கள், அனைவரும் கைகுலுக்கி, சத்தமிட்டு, ஆர்ப்பரித்து தேவனைத் துதிப்பார்கள். ஏன்? அவர்கள் அழுத்தத்தை விடுவித்தார்கள், அதுதான் விஷயம், யார் என்ன சொன்னாலும் அவர்கள் கவலைப்படுவதில்லை, அவர்கள் தேவனுடைய பிரசன்னத்தில் இருக்கிறார்கள், அழுத்தத்தை விடுவிக்கிறார்கள். இதைச் செய்வதற்கு எவ்வளவு அற்புதமான இடம்! ஓட நிறைய இடம் இருக்கிறது, இங்கே வெளியே வாருங்கள், புறப்படுங்கள், அவ்வளவுதான், அழுத்தத்தை விடுவியுங்கள். அப்படிச் செய்வது நல்லது, நீங்கள் செய்யாவிட்டால், நீங்கள் வெடித்துவிடலாம், எங்காவது ஒரு வால்வ் (valve) வெடித்துவிடும். சரி. 95 இப்போது, இப்போது நாம் நினைவில் கொள்வோம்: அவருடைய வார்த்தையை நம்புங்கள். இப்போது, கூட, நீங்கள்-நீங்கள் சொல்வீர்கள், "நான் வியாதியாயிருக்கும்போது அவரை நம்பலாமா?" நிச்சயமாக. மரியாளைப் பாருங்கள், அல்லது, அது மார்த்தாள், அவளுடைய சகோதரன் மரித்துப்போனபோது அவள் இயேசுவை அழைத்தாள், அவர் வருவதற்குப் பதிலாக, அவர் போய்விட்டார். அவள் மீண்டும் அனுப்பினாள், அவர் இன்னும் தூரமாகப் போனார். அதுதான், அழுத்தத்தை உருவாக்குகிறது. இப்போது, எனக்கு பதிலாக... 96 "நான் இன்று அவரிடம் கேட்டேன், அவர் இன்னும் தூரமாகப் போய்விட்டார், நான் மீண்டும் அவரிடம் கேட்டேன், அவர் இன்னும் தூரமாகப் போகிறார்." ஆனால் கொஞ்ச நேரத்திற்குப் பிறகு, அவள் அவனை அடக்கம் செய்த பின்பு, இயேசு வந்த செய்தியைக் கேட்டவுடன், அவள் அவருடைய பிரசன்னத்திற்குள் சென்றாள், அவர் பாதத்தில் விழுந்தாள், அவரை நிந்திப்பதற்காக அல்ல, நீங்கள் தேவனுடைய வரத்தை அப்படி அணுகினால், உங்களுக்கு ஒன்றும் கிடைக்காது, நீங்கள் பயபக்தியுடனும், மரியாதையுடனும் வர வேண்டும். 97 "நான் போய் ஒரு முயற்சி செய்து பார்க்கிறேன்" என்று சொல்வதற்காக மட்டும் நீங்கள் வரும்போது, அப்படிச் செய்யாதீர்கள், உங்களுக்கு ஒன்றும் கிடைக்கப் போவதில்லை. அடைக்கலப் பட்டணத்தின் வாசலுக்குள் வரும் மனிதனைப் போல, நீங்கள் முற்றிலும் ஒப்புக்கொடுத்து, பயபக்தியோடு வர வேண்டும், அது அவனுடையது, அவன் போவதற்கு அது ஒன்றுதான் இடம் என்று அவனுக்குத் தெரியும். நீங்கள் விசுவாசித்து வர வேண்டும். 98 "ஓ, நான் பலிபீடத்தண்டைக்குச் சென்று என்னால் அந்நியபாஷையில் பேச முடிகிறதா என்று பார்ப்பேன். நான் கீழே சென்று என்னால் சத்தமிட முடிகிறதா என்று பார்ப்பேன்." ஓ, சகோதரனே, நீங்கள் உங்கள் இருக்கையிலேயே இருப்பது நல்லது, உங்களுக்கு ஒன்றும் கிடைக்கப் போவதில்லை, இல்லை. ஆனால் உங்களின் ஒரே அடைக்கல இடம் அதுதான் என்று அறிந்து நீங்கள் வரும்போது... 99 நீங்கள் ஒரு கூட்டத்தில் அமர்ந்தி ருக்கும்போது, "எனக்கு ஜெப அட்டை கிடைக்கவில்லை" என்று நீங்கள் அழுத்தம் கொடுக்கிறீர்கள், மக்கள் அப்படிச் செய்வதை நான் பார்த்திருக்கிறேன், அழுத்தம் உருவாகிறது, அவர்கள் அதை முற்றிலுமாக இழந்து விடுகிறார்கள். அவர்கள் கூட்டத்தில் ஜெப வரிசையில் நிற்பதை நான் பார்த்திருக்கிறேன், அங்கே மேலே வந்து, "சரி, நான்..." என்று சொல்வதைப் பார்த்திருக்கிறேன், பாருங்கள், நீங்கள் உங்களுக்கு எதிராகவே போராடுகிறீர்கள், அப்படிச் செய்யாதீர்கள். தைரியத்துடனும், பயபக்தியுடனும் வாருங்கள், தேவன் ஒரு வாக்குத்தத்தம் செய்திருக்கிறார் என்பதையும் அது எல்லாவற்றையும் தீர்த்துவிடும் என்பதையும் அறிந்து தேவனுடைய பிரசன்னத்திற்குள் வாருங்கள். 100 மார்த்தாள் மேலே வந்து, "ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால்..." என்று சொன்னாள், "நீர் ஏன் வரவில்லை?" என்று அல்ல. ஆனால், "நீர் இங்கே இருந்திருந்தால், என் சகோதரன் மரித்திருக்க மாட்டான். ஆனாலும், ஆண்டவரே, இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக் கொள்வதெதுவோ, அதை தேவன் உமக்குத் தந்தருளுவார்." அவள் அழுத்தத்தை விடுவித்தாள். அவளுடைய கண்கள் கண்ணீரால் நிறைந்திருந்தாலும், அவளுடைய பலவீனமான உடல் சோர்வுற்றிருந்தாலும், அவளால் இதைச் சொல்ல முடிந்தது: "நீர் இங்கே இருந்திருந்தால், என் சகோதரன் மரித்திருக்க மாட்டான். ஆனால் இப்பொழுதும், நீர் தேவனிடத்தில் கேட்பதை தேவன் உமக்குத் தருவார்." நான் அதை விரும்புகிறேன். ஆமாம் ஐயா. எதற்காக வந்தாளோ அதைப் பெற்றுக்கொண்டாள். 101 ஏன்? அவள் அவருடைய பிரசன்னத் திற்குள் வந்தாள், "நாங்கள் உம்மை அழைத்தபோது நீர் ஏன் வரவில்லை? நாங்கள் சபையை விட்டோம், எங்கள் சபைப் பிரிவைக் கைவிட்டோம், உம்மோடு நடக்க வந்தோம், நீர் ஒரு விடுவிப்பவராக இருப்பீர் என்று நினைத்தோம், நீர் வியாதியஸ்தர்களைக் குணமாக்குவதை நாங்கள் பார்த்திருக்கிறோம், உம்முடைய சொந்த நண்பரையே மரிக்க விட்டீர், நான் உம்மை அழைத்தும் வரவில்லையே!" என்று பதற்றத்துடன் அல்ல. அது ஒரு நவீன பெந்தெகொஸ்தே பதிப்பாக இருந்திருக்கும். இல்லை, இல்லை, மார்த்தாள் அல்ல, இல்லை ஐயா, அவள் சொன்னாள், "ஆண்டவரே," அவர் அவளுக்கு அப்படித்தான் இருந்தார், அவளுடைய ஆண்டவர், "நீர் இங்கே இருந்திருந்தால், என் சகோதரன் மரித்திருக்க மாட்டான். இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்வதெதுவோ, அதை தேவன் உமக்குத் தந்தருளுவார்." "ஓ," அவர் சொன்னார், "உன் சகோதரன் உயிர்த்தெழுவான்." அவள் சொன்னாள் - அவள் சொன்னாள், "ஆண்டவரே, கடைசிநாளில் அவன் உயிர்த்தெழுவான் என்று எனக்குத் தெரியும்." 102 அவர் சொன்னார், "நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்." அவர் அவளுக்கு எவ்வளவு அழுத்தத்தைத் திருப்பிக் கொடுக்க முடியும் என்று பார்க்க விரும்பினார், ஆனால் அவள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. 103 "ஆமென், ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரன் என்று நான் விசுவாசிக்கிறேன்." அழுத்தம் நீங்கிவிட்டது. ஏன்? அவள் அடைக்கலத்தைக் கண்டுபிடித்தாள், அவள் மறைவிடத்தைக் கண்டுபிடித்தாள், மரணத்தின் மத்தியிலும், அவள் அடைக் கலத்தைக் கண்டுபிடித்தாள். 104 இப்போது, மரண நேரத்தில் ஒரு அடைக்கலம் இருக்கிறது. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? பஸ்காவின் இரவில் எகிப்தை நோக்கிக் பார்ப்போம். அங்கே எகிப்தில், இந்த அடிமைகளுக்கு அது இருந்தது, மக்கள் தம்முடைய மக்களை நடத்தும் விதத்தைக் கண்டு தேவன் சலிப்படைந்து களைத்துப் போன ஒரு நேரம் வந்தது. அதனால் அவர் என்ன செய்தார்? அவர் தம்முடைய மக்களைப் பாதுகாக்க ஒரு பிராயச்சித்தத்தைக் கோரினார். மக்கள் அதை ஏற்றுக்கொண்டால், தம் மக்களைப் பாதுகாக்க அவர் எப்போதும் ஒரு வழியை ஏற்படுத்துகிறார். 105 இப்போது எகிப்தில் நடந்த ஒரு காரியத்தை எடுத்துக்கொள்வோம்: அது இரவு நேரம், நான் கவனிக்கிறேன், இதோ வருகிறது, இரவு வருகிறது, அவர்கள் அங்கே சென்றதிலிருந்து அதுபோன்ற ஒரு இரவு இருந்ததில்லை. ஓ, அது ஒரு பயங்கரமான இரவு! எல்லாமே கறுப்பாகவும் இருட்டாகவும் இருந்தது, சந்திரன் பிரகாசிக்கவில்லை, நட்சத்திரங்கள் வெளியே வரவில்லை. ஓ, என்ன ஒரு பயங்கரமான இரவு! எல்லாம் சோர்வாக இருந்தது. 106 ஒரு சிறு பையன் ஜன்னலுக்குச் சென்று வெளியே பார்த்தான், அவன் சொன்னான், "அப்பா, தெருவில் நான் விளையாடிய அந்தச் சிறிய எகிப்தியப் பையனை உங்களுக்குத் தெரியுமா? பாருங்கள், அவனுடைய வீட்டின் மேல் இரண்டு பெரிய, கறுப்புச் சிறகுகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. அங்கே அவனுடைய தாய் தெருவில் இருக்கிறாள், அவள் அலறுகிறாள், 'என் குழந்தை மரித்துவிட்டது, என் தலைச்சன் பிள்ளை!'" பிறகு அவன் தன் அப்பாவைப் பிடித்துக் கொள்கிறான், "அப்பா, உங்களுக்கு என்மேல் கவலை இல்லையா? நான் உங்கள் தலைச்சன் பிள்ளை என்று உங்களுக்குத் தெரியாதா?" என்று கேட்கிறான். 107 அந்தத் தகப்பன், மிகவும் அமைதியாக, தன் சிறு பையனின் கையைப் பிடித்துக் கொண்டு, கதவருகில் நடந்து சென்று, "மகனே, கதவின் நிலைகளில் இருக்கும் அந்த இரத்தத்தைப் பார்க்கிறாயா? நிலைக்கால்களில் இருப்பதைப் பார்க்கிறாயா? பார்த்தாயா?" என்று சொல்வதை என்னால் பார்க்க முடிகிறது. "சரி, அப்பா, அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?" 108 "மகனே, அது தேவனுடைய வாக்குத்தத்தம், இப்போது அழுத்தத்தை விட்டுவிடு, 'நான் இரத்தத்தைக் காணும்போது உங்களைக் கடந்துபோவேன்' என்று அவர் சொன்னார்... அது தேவனுடைய வாக்குத்தத்தம், அதனால் அந்தச் சிறகுகள் வராது." 109 அந்தச் சிறு பையன் ஜன்னலுக்குச் சென்று மீண்டும் பார்த்தான், "அப்பா, இதோ அவர் வருகிறார்!" என்றான். அவனுடைய தந்தை வேறு ஏதோ ஒரு காரியத்தில் மும்முரமாக இருந்தார். தூதன் கதவை நோக்கி கீழே நகர்கிறான், ஆனால் அவன் இரத்தத்தைக் கண்டபோது, அவன் விலகிச் சென்றான், பாருங்கள். அது ஏன்? அழுத்தத்தை விடு விப்பது, தேவன் அதை வாக்குத்தத்தம் செய்தார், அது தேவனுடைய வாக்குத்தத்தத்தினால், அவர் எப்போதும் தம் வாக்குத்தத்தத்தைக் காத்துக்கொள்கிறார். அது சரிதான். 110 நமக்காக ஒரு சிறிய காரியத்தை எடுத்துக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் கவனித்தீர்களா? இஸ்ரவேலர்களைப் பற்றி நாம் பேசும்போது, அவர்கள் எகிப்தில் இருந்தபோது அவர்கள் அடிமைகளாக இருந்தார்கள், அவர்கள் ஒருபோதும், ஒருபோதும், ஒருபோதும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தைப் பார்த்ததில்லை, அவர்களில் யாரும் அங்கே போனதில்லை, அவர்கள் கேள்விப்பட்டதைத் தவிர வேறு எதுவும் அவர்களுக்குத் தெரியாது. பாலும் தேனும் ஓடுகிற ஒரு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு அவர்களைக் கொண்டு செல்வதாக தேவன் வாக்குத்தத்தம் செய்தார். அடிக்கப்பட்டு, பூசணம்பூத்த அப்பம் அவர்களுக்கு எறியப்பட்டு, தினமும் சவுக்கடி பட்ட ஒரு கூட்ட அடிமைகளுக்கு அது ஒரு பெரிய விஷயமாக இருந்தது; அது ஒரு பயங்கரமான காரியம். 111 இப்போது, கேளுங்கள் கிறிஸ்தவர்களே, இங்கே இந்த உவமையைக் கவனியுங்கள்: இப்போது, பாலும் தேனும் ஓடுகிற ஒரு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசம் இருக்கிறது, அங்கே அவர்கள் தங்களுடைய சொந்த வீட்டில் வாழ முடியும், அவர்களுக்கு பயம் இருக்க வேண்டியதில்லை, அது ஒரு அடைக்கலமான இடம், அங்கே அவர்கள் தங்கள் தோட்டங்களை வளர்க்க முடியும், தங்கள் குழந்தைகளைப் பெற்று பாதுகாப்பாக இருக்க முடியும் என்று அவர்கள் கேள்விப்பட்டபோது, திடீரென்று வனாந்தரத் திலிருந்து ஒரு தீர்க்கதரிசி ஒரு அக்கினி ஸ்தம்பம் அவரைப் பின்தொடர, அல்லது அவர் அந்த அக்கினி ஸ்தம்பத்தைப் பின்தொடர வந்தார், அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை நோக்கி தங்கள் பயணத்தைத் தொடங்கினார்கள். 112 அவர்கள் காதேஸ்பர்னேயா வரை சென்றபோது, அங்கே என்ன நடந்தது? யோசுவா, அவர்களுடன் யோசுவா என்ற பெயருடைய ஒரு பெரிய போர்வீரன் இருந்தான், அதற்குக் "யெகோவா-இரட்சகர்" என்று அர்த்தம், அவன் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் சென்று அதற்கான ஆதாரத்தைக் கொண்டுவந்தான். 113 இப்போது, நினைவில் கொள்ளுங்கள், அந்த தேசம் இருக்கிறதா இல்லையா என்று அவர்களுக்குத் தெரியாது, அவர்கள் விசுவாசத்தினாலே மட்டுமே அந்த வாக்குத் தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குப் பயணம் செய்தார்கள். அது எங்கே இருக்கிறது என்று அவர்களுக்குத் தெரியாது, அக்கினி ஸ்தம்பம் அவர்களை அங்கு வழிநடத்தியது, இந்தத் தீர்க்கதரிசி இந்த அக்கினி ஸ்தம்பத்தைப் பார்த்துக்கொண்டு நடந்தார், அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு வரும்வரை அதைத் தொடர்ந்தார்கள், யோசுவா யோர்தானைக் கடந்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் சென்று, தேவன் அவர்களுக்கு வாக்குத்தத்தம் செய்தபடியே அந்த தேசம் இருக்கிறது என்பதற்கான ஆதாரத்தைக் கொண்டுவந்தான். மக்கள் திராட்சைப்பழங்களை ருசி பார்த்தார்கள், இரண்டு மனிதர்கள் சுமந்து வரும்படியான ஒரு திராட்சைக்குலை. 114 அது தேவனின் வாக்குத்தத்தத்தின்படியே சரியாக இருந்தது, அவர்கள் அதைப் பெற்றார்கள், அந்த தேசம் யோர்தானுக்கு மறுகரையில் இருந்தது. ஏன், நிச்சயமாக, அவர்கள் அதை ஒருபோதும் பார்த்ததில்லை, அங்கு யாரும் சென்றதில்லை என்று அவர்களுக்குத் தெரியும், ஆனால் தேவன் வாக்குத்தத்தம் செய்தார், தேவன் எப்போதும் தம் வாக்குத்தத்தத்தைக் காத்துக்கொள்கிறார், அது மனிதர்களை அடிமைத்தனத்திலிருந்து தன் சொந்த வீட்டைக் கொண்டிருக்கக்கூடிய நிலைக்குக் கொண்டுவருவதாக இருந்தது. 115 ஒரு நாள் மற்றொரு பெரிய போர்வீரன் வந்தார், அவருடைய பெயர் இயேசு. அவர், "என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு," என்று போதித்தார். ஒரு மனிதன் இங்கே மரித்த பிறகு ஒரு ஜீவன் இருக்கிறது என்றும், அவன் மீண்டும் வாழ முடியும் என்றும் அவர் போதித்தார், மரித்தோரின் உயிர்த்தெழுதல் ஒன்று இருக்கிறது என்றும், ஒரு நாள் அவர் வந்து முழு உலகத்தையும் நியாயந்தீர்ப்பார் என்றும் அவர் போதித்தார். 116 ஒரு நாள் அவர் மரணம் என்னும் யோர்தானுக்குள் இறங்கி, யோர்தானைக் கடந்து, மரித்தோரின் உயிர்த்தெழுதல் இருக்கிறது என்பதற்கான ஆதாரத்தைக் கொண்டு மூன்றாம் நாளில் திரும்பி வந்தார். அல்லேலூயா! அவர் நின்று மீனையும் அப்பத்தையும் சாப்பிட்டார், அவர் நாற்பது நாட்கள் அவர்களுடன் இருந்து, தம்மை உயிருள்ளவராகக் காண்பித்தார், "என்னைத் தொட்டுப் பாருங்கள், நான் ஒரு ஆவி அல்ல, நான் மனிதன், சதையும் எலும்புகளும் உள்ளவன்" என்று சொன்னார். 117 அவர் என்னவாக இருந்தார்? மரண நதியைக் கடந்து ஆதாரத்துடன் திரும்பி வந்த நமது காலத்தின் யோசுவா. அதுமட்டுமல்ல, அவர், "என்னை விசுவாசிக்கிறவன் ஒருக்காலும் மரிக்கமாட்டான்" என்று சொன்னார். அவர்கள் மேலே சென்று காத்திருக்கும்படி கட்டளை யிடப்பட்டார்கள், அவர் அவர்களுக்குத் தங்கள் இரட்சிப்பின் அச்சாரத்தை அனுப்பப் போகிறார். அவர் சொன்னார்... 118 அச்சாரம் என்றால் என்னவென்று ஆச்சரியப்படுகிறீர்களா? நான் உங்கள் பண்ணையை பத்தாயிரம் டாலர்களுக்கு வாங்குகிறேன், அதை வைத்திருக்க நான் உங்களுக்கு ஆயிரம் கொடுக்கிறேன். எனக்காக அதை நீங்கள் வைத்திருப்பீர்கள் என்பதற்கான வாக்குத்தத்தம் அது, அதுதான் அச்சாரப் பணம். சரி, அவர் சொன்னார், "நீங்கள் உங்கள் இரட்சிப்பின் அச்சாரத்தைப் பெறப்போகிறீர்கள் என்பதை நான் உங்களுக்கு நிரூபிக்கப் போகிறேன், ஆனால் உன்னதத்திலிருந்து வரும் வல்லமையால் நீங்கள் தரிப்பிக்கப்படும் வரை எருசலேம் நகரத்தில் காத்திருங்கள்." 119 ஒரு நாள் நான், நானே, பாவத்தில் வீழ்ந்து, செல்ல இடமில்லாமல் இருந்தேன், என்ன நடந்தது? பெந்தெகொஸ்தே நாளில் நடந்தது போலவே, தேவன் பரிசுத்த ஆவியானவரை காத்திருந்த சீஷர்கள் மீது திரும்ப அனுப்பினார், அப்படி நடந்தபோது அவர்கள் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டு மரணத்திலிருந்து எழுந்தார்கள். மரணம் என்றால் என்ன? பாவம், பாவங்கள். "பாவத்தின் சம்பளம் மரணம்." மரணம் என்றால் என்ன? அவிசுவாசம், "விசுவாசியாதவனோ ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று." 120 இன்று அநேகர் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக்கொள்கிறார்கள். அவர்கள் சில சபைகளின் சில விசுவாசப் பிரமாணங்களை நம்ப விரும்புகிறார்கள், நீங்கள் அவர்களிடம் தேவனுடைய வார்த்தையைச் சொன்னால், அவர்கள் உங்கள் முகத்திற்கு நேராகச் சிரிக்கிறார்கள், அதுதான் பாவம். அது அவர்களுடைய விசுவாசப் பிரமாணங்களுடன் ஒத்துப்போகாததால், அவர்களுக்கு அதனுடன் எந்த சம்பந்தமும் இருக்காது, நீங்கள் வேறு எதையாவது செய்வது போலவே செய்யலாம். தேவனுடைய வார்த்தை சத்தியமாக நிற்கிறது. சரி. அவர்கள்-அவர்கள் அங்கிருந்து கீழே வந்தபோது, உயிர்த்தெழுதலுக்கான ஆதாரம் தங்களிடம் இருப்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். 121 இப்போது, இன்று, நாம் அடைக் கலமாக கொண்டிருப்பது அதையே. என்ன நடக்கிறது என்று பாருங்கள்: நாம், அவர் நமக்கான மாற்று மரணமாக இருந்தார் என்பதை அங்கீகரிக்கும்போது, அது நம்முடைய நீதி அல்ல, அவருடையது என்பதை நாம் உணரும்போது, மேலும் நாம் அவரை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்போது, அப்போது நாம் ஞானஸ்நானத்தில் அவருடன் கல்லறைக்குச் செல்கிறோம், அவருடன் மரிக்கிறோம், நீங்கள் அப்படி செய்யாவிட்டால், நீங்கள் அடக்கம் செய்யப்படக்கூடாது, ஆகையால் நீங்கள்... மரித்து, உங்கள் பாவங்களை அறிக்கை செய்து, உங்களை ஒரு பாவி என்று அழைத்து, இரக்கத்திற்காக வேண்டி, ஞானஸ்நானத்தில் கிறிஸ்துவுடன் அடக்கம் செய்யப்படும்போது, உயிர்த் தெழுதலில் நாமும் அவருடன் எழுந்திருக்கிறோம். 122 இப்போது பாவத்திலிருந்து எழுப்பப் பட்டு (அல்லேலூயா! இப்போது, நான் ஆவிக்குரியவனாய் உணருகிறேன், சகோதரனே.), அவருடைய உயிர்த்தெழுதலின் சாயலில் மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டு, பாவ வாழ்க்கையிலிருந்து நாம் எழுப்பப்பட்டு, கிறிஸ்து இயேசுவுக்குள் உன்னதங்களில் அவருடன் அமர்ந்திருக்கிறோம், பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு, நாம் ஏற்கனவே மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டுவிட்டோம் என்பதற்கான நித்திய ஜீவனின் சாட்சியுடன், இன்று இரவு நம் ஆத்துமாக்கள் கிறிஸ்துவுடன் உயிருடன் இருக்கின்றன, ஏனெனில் பாவம் நமக்குக் கீழே இருக்கிறது, அங்கிருந்து நாம் எழுந்துவிட்டோம், இதுவே நமது உயிர்த்தெ ழுதலின் அச்சாரமாக இருக்கிறது. ஆமென். 123 நீங்கள் மரணத்திலிருந்து ஜீவனுக்குக் கடந்துவிட்டீர்கள் என்பதை எப்படி அறிவீர்கள்? நீங்கள் எங்கே நிற்கிறீர்கள்? ஏனென்றால் நாம் பாவத்திலிருந்து எழுப்பப்பட்டிருக்கிறோம், ஞானஸ்நானத்தில் அவருடன் அடக்கம் செய்யப்பட்டு, உயிர்த்தெழுதலில் அவருடன் எழுந்திருக்கிறோம், இப்போது நமது ஆத்துமாக்கள் அவருடன் இருக்கின்றன, அவர் நம்முடன் இருக்கிறார். அவருடைய பிரசன்னத்தை நாம் உணருகிறோம், அவருடைய கிரியைகளை நாம் காண்கிறோம், அவர் பூமியில் இருந்தபோது செய்த அதே காரியங்களை இப்போதும் செய்வதை நாம் காண்கிறோம், சபையின் மூலமாக செயல்படுகிறார்: வியாதியஸ்தர்களைக் குணப்படுத்துகிறார், அவர்களின் இருதயத்திலுள்ள எண்ணங்களை அறிகிறார், பகுத்தறிவு, வல்லமைகள், மரித்தோரை எழுப்புதல் என அவர் செய்த அதே காரியங்களைச் சரியாகச் செய்கிறார். 124 அப்படியானால் அழுத்தத்தை விடுவியுங்கள், சகோதரனே, கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை, கிறிஸ்து இயேசுவுக்குள் நாம் ஏற்கனவே அவருடன் எழுந்திருக்கிறோம். நாம் இப்போது உன்னதங்களில் அமர்ந்திருக்கிறோம், "நாம் இருப்போம்" என்பதல்ல, நாம் இப்போது, இந்த நிமிடம், அவருடன் எழுப்பப்பட்டு, நமது நித்திய இரட்சிப்பின் அச்சாரத்துடன் உன்னதங்களில் அமர்ந்திருக் கிறோம். ஆஹா! அது சரிதான். ஆமென். அழுத்தத்தை விடுவியுங்கள்! அணுகுண்டுகளை அனுப்புங்கள், நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், நாம் அவருடன் எழுந்திருக் கிறோம். ஆமென். 125 இந்த அழுத்தம் எதற்காக? எதற்காக நீங்கள் கூக்குரலிடுகிறீர்கள், சபைப் பிரிவிலிருந்து சபைப் பிரிவுக்கு ஓடுகிறீர்கள்? அழுத்தத்தை விடுவியுங்கள், கிறிஸ்துவிடம் வாருங்கள். தேவனுடைய ஆவியானவரை உங்களுக்குள் பெற்றுக்கொள்ளுங்கள், நீங்கள் பின்னோக்கி திரும்பி, எங்கிருந்து வந்தீர்கள் என்று பாருங்கள், அங்கே உலகத்தை கீழே பாருங்கள், நீங்கள் மீண்டும் அதில் நடக்க மாட்டீர்கள். இல்லை. ஏன்? நீங்கள் அவருடன் எழுப்பப்பட்டிருக்கிறீர்கள், நீங்கள் ஒரு புதிய சிருஷ்டி, கிறிஸ்து இயேசுவுக்குள் உன்னதங் களில் அமர்ந்திருக்கிறீர்கள். அழுத்தத்தை விடுவியுங்கள். 126 யோசுவா கடந்து சென்று அவர்களுக்கு ஆதாரத்தை மீண்டும் கொண்டு வந்தான். அவர்கள் என்ன செய்தார்கள்? முறு முறுத்தார்கள், அதை நம்பவில்லை. இன்றைய மத உலகமும் அப்படித்தான் இருக்கிறது, இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றென்றைக்கும் மாறாதவராக இருக்கிறார் என்பதை அவர்கள் நம்பவில்லை, அவர்கள் அதைக் கண்டு அஞ்சுகிறார்கள், அவர்கள் பரிசுத்த ஆவியானவரைக் கண்டு பயப்படு கிறார்கள், அதுவே நமது உயிர்த்தெழுதலின் உண்மையான சாட்சியாகவும், நாம் நித்திய ஜீவனைப் பெற்றிருக்கிறோம் என்பதற்கான ஆதாரமாகவும் இருக்கிறது. 127 இதை நான் உறுதிப்படுத்தும் விதமாக இங்கே மற்றொரு காரியத்தைப் பாருங்கள்: எலியாவும் எலிசாவும் எப்போதும் கிறிஸ்துவின், மற்றும் இரட்டிப்பான பங்கைக் கொண்ட சபையின் அடையாளமாக இருந்தார்கள். "நான் செய்யும் கிரியைகளை நீங்களும் செய்வீர்கள், இதைவிடப் பெரியவைகளை... நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறேன். நான் என் பிதாவினிடத்திற்குப் போகும்போது, இதைவிடப் பெரியவைகளை அல்லது அதிகமானவைகளை நீங்கள் செய்வீர்கள்." 128 எலியா எலிசாவை அழைத்தபோது, குகையிலே தேவன் அவனிடம் ஒரு மெல்லிய சத்தத்தில் பேசியபோது, அவன் தன் சால்வையை எடுத்துக்கொண்டு கீழே சென்று, அந்த இளம் தீர்க்கதரிசி ஒரு எருதுடன் வயலில் செல்வதைக் கண்டான், ஒரு நேரிய வரிசையை எப்படி உழுவது என்று அவனுக்குத் தெரிந்திருந்தது, எனவே அவன் தன் சால்வையை எடுத்து அவன் மீது போட்டான். அவன் அதைத் திரும்ப எடுத்திருக்க வேண்டும். அவன் ஞானஸ்நானம் பெற்றான், நீங்கள் காண்கிறீர்கள், எலியாவின் மேல் இருந்த ஆவியால், அவனுக்கு ஒரு பங்கு இருந்தது: அவன் ஒரு தீர்க்கதரிசியாக அழைக்கப்பட்டான். பின்னர் அவனுடன் யோர்தானுக்குச் சென்று, ஒரு பங்குடன் யோர்தானைக் கடந்தபோது, அவன் திரும்பி வந்தபோது அவனுக்கு இரண்டு பங்குகள் இருந்தன. தேவனுக்கு மகிமை! 129 இன்று பரிசுத்த ஆவியானவர் நம் மீது வரும்போது, நீங்கள் ஒரு பங்கைப் பெறுகிறீர்கள், மரணம் என்னும் யோர்தானைக் கடந்து உயிர்த்தெழுதலில் நாம் திரும்பி வரும்போது, ஆவிக்குரிய சரீரம் மற்றும் மாம்ச சரீரம் என இரண்டையும் அவருடன் எழுப்பப்பட்டதாகக் கொண்டிருக்கிறோம். 130 நான் உங்களைச் செவிடாக்கவில்லை என்று நம்புகிறேன். ஓ, ஆனால் சகோதரனே, நான் சொல்வது உங்களுக்குப் புரிகிறதா? நாம் ஏற்கனவே எழுந்திருக்கிறோம். நாம்... [ஒரு தீர்க்கதரிசனம் உரைக்கப்படுகிறது] அல்லேலூயா. அவருடன் எழுந்திருக்கிறோம், இப்போது அமர்ந்திருக்கிறோம். 131 நீங்கள் எங்கே இருந்தீர்கள்? இங்கே எத்தனை கிறிஸ்தவர்கள் இருக்கிறீர்கள்? உங்கள் கைகளை உயர்த்துங்கள். கிறிஸ்தவர்களாக, நீங்கள் முதலில் எங்கிருந்து வந்தீர்கள் என்று திரும்பிப் பார்க்கிறீர்களா? நீங்கள் ஒரு காலத்தில் மரித்திருந்தீர்கள் என்பதை அது காட்டுகிறது. நீங்கள் இது போன்ற ஒரு கூட்டத்திற்கு வந்திருக்க மாட்டீர்கள், நீங்கள்-இப்படிப்பட்ட ஒரு சூடான கட்டிடத்தில் அமர்ந்திருக்க மாட்டீர்கள், உங்கள் பணத்தை செலவழித்து, நாட்டைக் கடந்து வந்திருக்க மாட்டீர்கள், நீங்கள் ஏதோ ஒரு கேளிக்கை விடுதிக்கோ அல்லது வேறு எதற்கோ சென்றிருப்பீர்கள். ஏன்? நீங்கள் மரித்திருந்தீர்கள், அது உங்கள் சுபாவமாக இருந்தது, நீங்கள் பிறப்பிலேயே ஒரு பாவியாக இருந்தீர்கள். 132 ஆனால் கிறிஸ்து திரும்பி வந்து, "நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன். நான் அதற்கான அச்சாரத்தை உங்களுக்குக் கொடுப்பேன், பரிசுத்த ஆவியானவரை உங்கள் மீது அனுப்புவேன்," என்று சொன்னார், ஓ, என் தேவனே, அதோ நீங்கள் இருக்கிறீர்கள், அதுவே அந்த அச்சாரம். 133 இன்று, உலகம் நம் காலடியில் இருப்பதைக் காண்கிறோம். நாம் பைத்தியம் என்று மக்கள் நினைக்கிறார்கள். எல்லாம் நமக்குரியது என்பது உங்களுக்குத் தெரியாதா? பணத்தால் எப்படி சமாதானத்தை விலைக்கு வாங்க முடியும், பணத்தால் அன்பை வாங்க முடியும்? அதைத்தான் தேசங்கள் செய்ய முயற்சிக்கின்றன. பணத்தால் மகிழ்ச்சி, "கீழே மருந்துக்கடைக்குச் சென்று எனக்கு கால் டாலர் மதிப்புள்ள மகிழ்ச்சியை வாங்கிக் கொடுங்கள், ஆம், ஐயா, நான் அதைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்." 134 உங்களால் அதைச் செய்ய முடியாது. ஏன்? இது தேவனுடைய ஈவு, இது தேவனிடமிருந்து வருகிறது, மேலும் கிறிஸ்து என்னும் அடைக்கலத்தில் இருக்கிற, உன்னதங்களில் அவருடன் எழுப்பப்பட்ட அவருடைய பிள்ளைகளுக்கு இது இலவசம். இப்போதே, நாம் அவருடன், அவருக்குள் அமர்ந்திருக்கிறோம். "கர்த்தரின் நாமம் பலத்த துருகம், நீதிமான் அதற்குள் ஓடி, சுகமாயிருப்பான்." அதற்குள் இருப்பதில் எப்பேர்ப்பட்ட ஐக்கியம்! மகிமை! 135 நான் ஒரு பெந்தெகொஸ்தே-பாப்டிஸ்ட். ஆம், பெந்தெகொஸ்தே அனுபவமுள்ள ஒரு பாப்டிஸ்ட். ஏன்? என்னால் முடியும்... நான் அந்த ஆதாரத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறேன், நான் என் ஆண்டவரைப் பெற்றுக்கொண்டேன். ஒரு காலத்தில் நான் இங்கே வேதாகமத்தில் பார்த்தபோது, அது வித்தியாசமான காரியங்களைச் சொன்னதை நான் காண்கிறேன், நான் சொன்னேன், "ஓ, சரி, சபை சொல்கிறது, 'சரி, அது இன்னொரு காலத்திற்காக. "நீங்கள் உலகமெங்கும் போய், சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன." அது ஒரு தவறான மொழிபெயர்ப்பு,'" மற்றும் இவை அனைத்தையும். அதில் ஏதோ தவறு இருக்கிறது, அது என்னை அதில் ஒரு அவிசுவாசியாக ஆக்கியது. 136 ஆனால் ஒரு நாள், அல்லேலூயா, நான் அந்த காரியத்திற்கு மரித்து, பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தின் மூலம் அவருக்குள் உயிரோடிருக்கிறேன், மேலும், இன்று இரவு, அவிசுவாசத்திற்கு மேலாக எழுப்பப்பட்டு, அவருக்குள் நான் உயிர்த்தெழுந்திருக்கிறேன். அதிலுள்ள ஒவ்வொரு வார்த்தையையும் நான் நம்புகிறேன், அது அப்படித்தான் என்று நான் நம்புகிறேன். அவர் பூமியில் முதல் முறை இருந்ததைப் போலவே, இன்றும் அவர் இருக்கிறார் என்பதைச் சரியாக நிரூபித்து, அவர் செயல்படுவதை நான் காண்கிறேன், மாலை வேளையில் அவர் இருப்பார் என்று அவர் வாக்குறுதி அளித்ததைப் போலவே. நாம் இப்போது அவருடன் உன்னதங்களில் அமர்ந்திருக்கிறோம். அழுத்தத்தை விடுவி யுங்கள், எல்லாவற்றையும் குறித்துக் கலக்கமடைய வேண்டிய அவசியமில்லை. அவருடைய அறிவுறுத்தல்களைப் பின்பற்றிய பிறகு, கலக்கமடைந்து என்ன பயன்? ஆம். 137 இன்று பல கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படுபவர்கள், சபைப் பிரிவிலிருந்து சபைப் பிரிவுக்கு ஓடுகிறார்கள், அவர்கள் வெளியே ஓடி தங்கள் காகிதங்களை எடுத்துக்கொண்டு, "நான் ஒரு மெத்தடிஸ்டாக இருந்து சோர்வடைந்துவிட்டேன், நான் ஒரு பாப்டிஸ்ட் ஆகப் போகிறேன், என் காகிதங் களை பாப்டிஸ்டுகளிடம் கொண்டு செல்வேன்" என்கிறார்கள். பாப்டிஸ்டுகள் பிரஸ்பிடே ரியனிடம் ஓடுகிறார்கள், பிரஸ்பிடேரியன்கள் இதற்கு, அதற்கு, மற்றொன்றுக்கு ஓடுகிறார்கள், பெந்தெகொஸ்தே குழுக்கள் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு ஓடிக்கொண்டிருந்தன. நீங்கள் என்ன செய்கிறீர்கள்? என்ன பிரச்சனை? அது அழுத்தத்தை உருவாக்குகிறது என்பதையே காட்டுகிறது, நீங்கள் எங்கே நிற்கிறீர்கள் என்பதே உங்களுக்குத் தெரியவில்லை. 138 "யார் சரியானது, சகோதரர் பிரான்ஹாம்? இவர்கள் சரியானவர்களா, அல்லது இவர்கள் சரியானவர்களா, அல்லது இது சரியானதா?" கிறிஸ்துவே சரியானவர். "நான் அவரை எவ்வாறு பெற்றுக் கொள்வது?" 139 "என் வசனங்களைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு. கடைசி நாளில் நான் அவனை எழுப்புவேன்." ஆமென். ஏனென்றால் என்ன? அவன் தேவனுடைய வார்த்தையை விசுவாசித்தான். அவ்வளவுதான். 140 அதைப் பெற நீங்கள் சத்தமிட வேண்டும் என்று சிலர் நம்மை நம்ப வைக்க விரும்புவார்கள், மெத்தடிஸ்டுகள் அதை நம்பினார்கள். அநேகர் சத்தமிட்டதன் பின்னால் நிறைய அழுத்தம் இருப்பதை அவர்கள் கண்டுபிடித்தார்கள், அது சரிதான், கோபங்களை வளர்த்துக்கொண்டு லூத்தரன்களுடன் சண்டையிட்டார்கள். 141 பெந்தெகொஸ்தே சபையார் கூறுகிறார்கள், "நீங்கள் அதை நம்புவதற்கு அந்நிய பாஷைகளில் பேச வேண்டும்." அவர்கள் அந்நிய பாஷைகளில் பேசினார்கள், மேலும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டார்கள், "பழைய ஒன்றானவரே, எனக்கு உங்களுடன் எந்த ஒட்டுறவும் இருக்கப் போவதில்லை. பழைய திரித்துவவாதியே, எனக்கு உங்களுடன் எந்த ஒட்டுறவும் இருக்கப் போவதில்லை. பழைய இன்னாரே, நான்..." பாருங்கள், நீங்கள் இன்னும் அழுத்தத்தின் கீழ் இருக்கிறீர்கள், நீங்கள் இன்னும் சரியான இடத்தை அடையவே இல்லை. 142 ஆனால், சகோதரனே, நீங்கள் மரித்து, உயிர்த்தெழுதலில் அவருடன் எழுப்பப்பட்ட அந்த இடத்திற்கு நீங்கள் வரும்போது, நீங்கள் உங்கள் சகோதரனை, உங்கள் சகோதரியை நேசிக்கிறீர்கள், எந்தவொரு சபைப் பிரிவும் அந்தத் தடையை உடைக்க முடியாது, நீங்கள் கிறிஸ்தவர்கள், நீங்கள் பிரஸ்பிடேரியனாகவோ, மெத்தடிஸ்டாகவோ, பாப்டிஸ்டாகவோ அல்லது நீங்கள் யாராக இருந்தாலும் கிறிஸ்து இயேசுவுக்குள் நீங்கள் ஒன்றாய் இருக்கிறீர்கள், மேலும் அவர் நம் மத்தியில் உலாவுவதைக் காண்கிறீர்கள். அது சரிதான். ஆமென். 143 நமது சபைப் பிரிவுகள் நமக்கு என்ன தருகின்றன என்பதைப் பாருங்கள்? ஒரு குவியல் முட்டாள்தனம். நமது ஐக்கியத்தைப் பிரிக்கிறது, தடைகளை உடைக்கிறது, மக்களை அழுத்தத்தின் கீழ் வைக்கிறது, எல்லாமே, ஒரு ஸ்தாபனத்திற்காகப் போராட முயற்சிக்கிறது, அது மரித்து அழியப்போகிறது, அது மரிக்க வேண்டியதில்லை, அது ஏற்கனவே மரித்து விட்டது, ஆரம்பத்திலேயே அது மரித்துத்தான் இருந்தது. 144 ஆனால் கிறிஸ்து, நீங்கள் கிறிஸ்துவுக்குள் இருக்கிறீர்கள், நீங்கள் உயிருடன் இருக்கிறீர்கள், நீங்கள் கிறிஸ்து வுக்குள் இருந்தால் அவருடைய வார்த்தையை நம்புகிறீர்கள், நீங்கள் கிறிஸ்துவுக்குள் இருந்தால் அவர் தம்மை உங்களுக்கு வெளிப்படுத்துகிறார், நீங்கள் கிறிஸ்துவுக்குள் இருந்தால் நீங்கள் மரணத்திலிருந்து ஜீவனுக்குக் கடந்துவிட்டீர்கள். "கர்த்தரின் நாமம் பலத்த துருகம், நீதிமான் அதற்குள் ஓடி, சுகமாயிருப்பான்." "சபைப் பிரிவு ஒரு பலத்த துருகம்" என்பதல்ல, "விசுவாசப் பிரமாணம் ஒரு பலத்த துருகம்" என்பதல்ல, ஆனால், "கர்த்தரின் நாமம் பலத்த துருகம், நீதிமான் அதற்குள் ஓடி, சுகமாயிருப்பான்." 145 அழுத்தத்தை விடுவியுங்கள், கிறிஸ்து விடம் மட்டும் வாருங்கள். "சரி, நான் இந்தச் சபையின் விசுவாசப் பிரமாணத்தை எடுத்துக் கொள்வேன். நான் அந்தச் சபையின் விசுவாசப் பிரமாணத்தை எடுத்துக்கொள்வேன்," என்று வராதீர்கள். தேவனுடைய வல்லமையை எடுத்துக் கொள்ளுங்கள், இயேசு கிறிஸ்துவின் நாமத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் ஜெபியுங்கள், அதில் ஞானஸ்நானம் கொடுங்கள், அதில் வியாதியஸ்தர்களுக்காக ஜெபியுங்கள், அதில் பிசாசுகளைத் துரத்துங்கள், "என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்து வார்கள்." அதில் வாழுங்கள், அதில் சத்தமிடுங்கள், அதில் நடங்கள், அதில் மரியுங்கள். ஆமென். "நீங்கள் வார்த்தையி னாலாவது கிரியையினாலாவது எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே செய்து, பிதாவுக்கு ஸ்தோத்திரஞ் செலுத்துங்கள்." ஆமென். அவ்வளவுதான். 146 "கர்த்தரின் நாமம் பலத்த துருகம், நீதிமான் அதற்குள் ஓடி, சுகமாயிருப்பான்." இப்போது, நீங்கள் அதனிடம் வந்து, ஏதோ விசுவாசப் பிரமாணம், அல்லது அதுபோன்ற எதையாவது சொல்ல முடியாது, நீங்கள் மரித்து அதனிடம் வர வேண்டும். நீங்கள் அதற்குள் நடந்து, உங்களுக்கு நீங்களே மரித்து, புதிதாக எழ வேண்டும், அப்போது தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையும் மெய்யாகிறது. 147 வேதாகமத்தை எழுதிய பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைப் பெற்ற ஒரு மனிதன், பின்பு, "அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன" என்று சொல்வதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? ஒரு மனிதன், அவர் இறையியலில் எவ்வளவு ஆழமாக இருந்தாலும், அல்லது-அல்லது வேறு எதுவாக இருந்தாலும், பரிசுத்த ஆவியானவர் எழுதிய வேதாகமத்தின் அதே வார்த்தையை மறுதலித்துவிட்டு, பரிசுத்த ஆவியானவர் தமக்குள்ளே இருக்கிறார் என்று சொல்வதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? 148 வேதாகமம் அதைக் கண்டனம் செய்யும் போது, ஒரு பெண் தன்னை ஒரு ஜோடி-இந்தக் குட்டையான ஆடைகளை அணிந்துகொண்டு, தெருக்களில் அங்குமிங்கும் நடப்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? மக்கள் செய்வதை, இன்று-மக்கள் அவர்கள் வாழும் விதத்தில் வாழ்ந்துவிட்டு, பரிசுத்த ஆவியைப் பெற்றிருப்பதாகக் கூறுவதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? ஏன், மக்களே, நீங்கள் கொடுக்கும் கனிகளே, நீங்கள் அதைப் பெறவில்லை என்பதை நிரூபிக்கின்றன. உங்களுக்கு ஒன்றும் தெரியாத ஒரு விசிலை நீங்கள் ஊதிக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் மரித்திருக்கும்போது, நீங்கள் மரித்திருக்கிறீர்கள்; நீங்கள் உயிருடன் இருக்கும் போது, நீங்கள் உயிருடன் இருக்கிறீர்கள், பழையவைகள் ஒழிந்துபோயின, மேலும் தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையும் "ஆமென்" என்று நிறுத்தற்குறியிடப்பட்டுள்ளது. உங்கள் விசுவாசப் பிரமாணங்களோ அல்லது சபைப் பிரிவோ என்ன சொன்னாலும் சரி, வேதாகமம் அதைச் சொல்கிறது, "இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை மேற் கொள்வதில்லை" என்று இயேசு சொன்னார். ஆஹா! ஆமென். 149 நான், நான் கோபப்படுகிறேன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என எண்ணுகிறேன், நான் அப்படி இல்லை, நான் பொங்கி வழிகிறேன். காண்கிறீர்களா? அன்பு, அன்பு என்பது கண்டித்து உணர்த்துதல். அன்பு என்பது தெய்வீக திருத்தம். ஓ, வாக்குத்தத்தம்! 150 ஏன்? அவர்கள் ஏன் இடத்திற்கு இடம் ஓடுகிறார்கள்? அவர்கள் ஏன் இதில் இணைந்து, இங்கே இருக்கும் ஒன்றிற்கு, இந்த ஸ்தாப னத்திற்கு, அல்லது அதற்குக் ஓடுகிறார்கள்? அவர்கள் வெறுமனே அழுத்தத்தை வளர்த்துக் கொள்கிறார்கள். என்ன பிரச்சனை? அவர்கள் இன்னும் சரியான அடைக்கலத்திற்கு வரவில்லை. சமாதானம், அன்பு, சந்தோஷம், நீடியபொறுமை, தயவு, பொறுமை, விசுவாசம் ஆகியவை பரிசுத்த ஆவியானவருக்குள், தேவனுடைய ராஜ்யத்தில் இருக்கின்றன, இந்த மற்ற காரியங்கள் ஒழிந்துபோயின. 151 "கர்த்தரின் நாமம் பலத்த துருகம்." நாம்-நாம் அதை அடைகிறோம், நாம் அதை விசுவாசிக்கிறோம், தேவனுடைய கூடாரத்தில் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம். நீங்கள் அதைச் செய்யும்போது, நீங்கள் மரணத்திலிருந்து ஜீவனுக்குக் கடந்துவிட்டீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் ஒரு காலத்தில் தேவனை நம்பாதிருந்ததை இப்போது திரும்பிப் பார்த்து, இப்போது நீங்கள் அவரை விசுவாசிப்பதைக் காண்கிறீர்கள், நீங்கள் ஒரு காலத்தில் ஒரு விசுவாசப் பிரமாணத்திற்காக சச்சரவு செய்ததை இப்போது பார்த்து, இப்போது நீங்கள் வேதாகமத்தில் இருக்கிறீர்கள். 152 ஒரு காலத்தில், அந்நிய பாஷைகளில் பேசுவது போன்ற ஒரு காரியமே இல்லை, இது போன்ற ஒரு காரியம் இல்லை, வேதாகமம் இதைப் போதிக்கவில்லை என்று யாரோ உங்களுக்குச் சொன்னார்கள், நீங்கள் அதைப் படித்தீர்கள், அங்கே அது வேதாகமத்தில் இருந்தது, நீங்கள் சொல்கிறீர்கள், "ஆனால் போதகர் சொல்கிறார், அல்லது... என் சபைப் பிரிவு சொல்கிறது அது மற்றொரு காலத்திற்கானதென்று." சரி, நீங்கள் இன்னும் பாவத்தில் மரித்திருக்கிறீர்கள், மேலே எழுந்திருங்கள், அது அவிசுவாசம். 153 "ஓ," நீங்கள் சொல்கிறீர்கள், "ஆனால், நான் பரிசுத்தமாக வாழ்கிறேன்." இங்கு யாருமில்லை, அமெரிக்காவில் உள்ள எந்தவொரு பெந்தெகொஸ்தேக்காரராலும் அந்த ஆப்பிரிக்கப் புறஜாதியினரைப் போல பரிசுத்தமாக வாழ முடியாது. இல்லை, ஐயா. முகமதியர்களைப் பற்றி என்ன? அவர்களின் பரிசுத்தத்தைப் பற்றி என்ன? ஒரு முறை அவர்களுடன் வாழ முயற்சித்துப் பாருங்கள், உங்கள் நீதியை ஒப்பிட்டுப் பாருங்கள். 154 அங்கே ஒரு கோத்திரத்தில், ஒரு இளம் பெண் குறிப்பிட்ட காலம் வரை திருமணம் செய்துகொள்ளாவிட்டால், அவளது கன்னி மைக்காக அவள் சோதிக்கப்படுகிறாள், அவள் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்று கண்டு பிடிக்கப்படுகிறாள், அவள் தீட்டுப் பட்டதாகக் காணப்பட்டால், அதைச் செய்த மனிதனை அவள் சொல்ல வேண்டும், மேலும் அவர்கள், இருவரும் ஒன்றாகக் கொல்லப் படுவார்கள். அதுவாக இருந்தால் தேசத்தில் நிறைய கொலைகள் நடக்கும், அல்லவா, இந்தச் சுற்றிலும்? அதனுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். 155 ஓ, ஆனால் இன்று நாம் மக்களிடம் வாழும்படி சொல்லலாம், அவர்கள் பெருமை யடைந்து, கோபமடைந்து, வேறு ஏதாவது ஒன்றிற்கு ஓடிச்சென்று, "நான் அதைக் கேட்க விரும்பவில்லை. சரி, நீங்கள் எப்போதும் என்னைக் கத்திக்கொண்டே இருக்கிறீர்கள்!" என்று சொல்கிறார்கள். அது எனக்கு மிகாயாவை நினைவூட்டுகிறது, அவன் எலியாவிற்கு முன்பாக, அல்லது ஆகாபிற்கு முன்பாக நின்றபோது, அவன் எலியாவின் வார்த்தையை எடுத்துக்கொண்டதாலேயே அங்கே நின்றான், அவன் தன் தரிசனத்தை, அவனுக்கு முன்பாக தீர்க்கதரிசி சொன்னதோடு, தேவனுடைய வார்த்தையோடு ஒப்பிட்டுப் பார்த்தான். நாமும் ஒரு தரிசனத்தைப் பெறும்போது, அது தேவனுடைய வார்த்தை யோடு ஒத்துப் போகவில்லை என்றால், அதை விட்டுவிடுங்கள், வார்த்தையோடு நிலைத்தி ருங்கள். ஆம், ஐயா. [ஒலிநாடாவில் காலியிடம்] 156 இப்போது, ஏசாயா அவரைக் கண்ட போது அவரை விவரித்தார், அவர் கூறினார்... இப்போது, அவர்கள் அவரை இந்த ஐக்கியத்தில் கண்டபோது, இந்த பலத்த துருகமான அவரைக் கண்டு, அதில் நிலைத்திருந்து, அதில் விசுவாசித்தபோது: "அவர் ஒரு அடைக்கலம்." ஆனால் ஏசாயா இங்கே 32-வது அதிகாரத்தில் அவரைக் கண்டபோது, "அவர் ஒரு விடாய்த்த பூமிக்கு ஒரு கன்மலை" என்று கூறினார். அது இந்த பூமியாக, ஒரு விடாய்த்த, இருண்ட பூமியாகத்தான் இருக்க வேண்டும். 157 "ஓ," நீங்கள் சொல்கிறீர்கள், "ஆஹா, இது மகிழ்ச்சியும் ஆனந்தமும் நிறைந்த ஒரு பூமி." ஆம், அது அப்படித்தான் என எனக்குத் தெரியும், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு உண்மையான தீர்க்கதரிசியின் வரிசை என்பதைக் குறித்து நான் பிரசங்கித்ததைப் போலவே என நம்புகிறேன், ஆமோஸ் வந்து அந்த நகரத்தைப் பார்த்தபோது, அந்தப் பழைய கிராமத்துப் போதகர், வழுக்கைத் தலையுடையவர், தொங்கும் மீசையுடையவர், அவரது கண்கள் சுருங்கின, ஹாலிவுட்டிற்கு வரும் இந்த நவீன சுற்றுலாப் பயணிகளில் ஒருவரைப் போல கவர்ச்சியையும் மற்ற காரியங்களையும் அவர் பார்க்கவில்லை, அவரது கண்கள் சுருங்கின, அவர் அங்கே கீழே பார்த்து, "நீங்கள் நம்புவதாகக் கூறும் அதே தேவன் உங்களை அழிப்பார்" என்றார். இன்று இரவு அவர் அமெரிக்காவுக்கு வந்திருந்தால், அவர் அதே காரியத்தைத்தான் சொல்லியிருப்பார், "நீங்கள் சேவை செய்வதாகக் கூறும் அதே தேவனே, உங்கள் அழிவாக இருப்பார்," மேலும் அவர் அதைச் செய்தார். அவர் பதின்மூன்று ஆண்டுகள் மட்டுமே பிரசங்கித்தார், ஆனால் அவர் தம்முடைய வார்த்தை நிறைவேறுவதைக் காணும் வரை வாழ்ந்தார். அவர் தேவனுடைய வார்த்தையுடன் அச்சமற்ற ஒரு மனிதராக இருந்தார். 158 ஆமோஸுக்கு அது எப்படித் தெரியும் என்று நீங்கள் சொல்கிறீர்கள்? ஒரு மருத்துவர் ஒரு நோயைக் கண்டறிவது போலவே அவரும் அந்த நிலையைத் துல்லியமாகக் கண்டறிய முடிந்தது. ஒரு மருத்துவர் ஒரு நோயாளியை எடுத்து, அதைப் பார்த்து, அதில் உள்ள அறிகுறிகளைப் பார்க்கும்போது, அது புற்றுநோய், அது மிகவும் முற்றிய நிலையில் இருந்தால், அவர், "இது மரணம்" என்கிறார். அவருக்குத் தெரிந்தவரை எந்த நம்பிக்கையும் இல்லை, அந்த நோயாளிக்கு எந்த நம்பிக்கையும் இல்லை, ஏனென்றால் அவர் மிகவும் முற்றிய நிலையில் இருக்கிறார். 159 ஆனால் தேவனுடைய ஒரு உண்மையான, மெய்யான தீர்க்கதரிசி கீழே பார்த்து, ஒரு தேசத்தின் பாவத்தைக் காணும் போது, நம் பெண்கள் தலைமுடியைக் கத்தரித்துக் கொள்வதையும், தரமற்ற ஆடைகளை அணிவதையும் கண்டு, மனிதர்கள் தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து, விசுவாசப் பிரமாணங்களுக்குக் கட்டுப்பட்டு, அதைப் போன்ற காரியங்களைச் செய்து, மனிதர்களை வழிதவறச் செய்யும், குருடர்களுக்குக் குருடரான வழிகாட்டிகளாக இருப்பதைக் கண்டு, தேவனுடைய வார்த்தையினால் அந்த நிலையைக் கண்டறியும்போது, அங்கு அழிவைத் தவிர வேறு எதுவும் நடக்க முடியாது, அதுவே எஞ்சியிருக்கிறது. புற்று நோய் உள்ளே அரித்துவிட்டது, ஆணிவேர் வரை அழுகிவிட்டது. 160 அனைத்து சபைப் பிரிவுகளுக்குள்ளும் இது நடந்து முடிந்துவிட்டது, தவறான காரியத்திற்கு எதிராகக் கூக்குரலிடுவதைத் தவிர வேறு ஒன்றும் செய்வதற்கில்லை. ஆமென்! அதற்கர்த்தம், "அப்படியே ஆகக்கடவது," மேலும் அது சரிதான். 161 சரி. "இளைத்த பூமிக்கு ஒரு பெரிய கன்மலையும், புயற்காலத்தில் ஒரு அடைக் கலமுமாக." ஓ, அவர் அவரை இளைத்த பூமிக்கு ஒரு பெரிய கன்மலையாகக் கண்ட போது நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்! 162 ஓ, அதிக நாட்களுக்கு முன்பல்ல, ஒரு கழுகைக் குறித்த ஒரு புத்தகத்தை நான் வாசித்துக்கொண்டிருந்ததை இங்கே நினைவுகூருகிறேன், அது ஒரு குறிப்பிட்ட வகையான கழுகு, அது கீழை நாடுகளில் இருப்பதாக நான் நினைக்கிறேன். மேலும், 'கழுகு தன் கூட்டை கலைப்பதுபோல' என்பது குறித்து நான் சில காலத்திற்கு முன்பு இங்கே பிரசங்கித்தேன். நான் கழுகுகளைக் குறித்து வாசித்துக்கொண்டிருந்தேன், அதில் நாற்பது வகையான கழுகுகள் இருப்பதைக் கண்டறிந்தேன், ஆனால் இந்தக் குறிப்பிட்ட கழுகைப் பற்றி வேதம் சொல்கிறது, "கழுகு தன் இளமையைப் புதுப்பித்துக்கொள்வது போல, தன் பெலனைப் புதுப்பித்துக்கொள்ளும், நாம் கழுகுகளைப் போலச் சிறகடித்து எழும்புவோம்," மற்றும் பல. இந்தக் குறிப்பிட்ட கழுகு, தனக்கு வயதாகத் தொடங்கும்போது, தான் வெகு சீக்கிரம் மரிக்கப்போவதை அது அறிகிறது, அதன் தலையின் மேல் ஒரு கடினமான ஓடு உருவாகிறது. உங்களுக்குத் தெரியும், அது வழுக்கையாக இருக்கும். 163 தேவன் தம்மை ஒரு கழுகுக்கு ஒப்பிட்டதற்குக் காரணம் அதுதான், அவர் தமது பிள்ளைகளைக் கழுகுகளுக்கு ஒப்பிடுகிறார், ஏனெனில் அவை மிக உயரத்தில் பறக்கும் பறவைகளாகும், இருக்கிற மற்ற எந்தப் பறவையையும் விட அவற்றால் உயரே செல்ல முடியும். அதன் கண் மிகவும் கூர்மையானது, இங்கே கீழே என்ன நடக்கிறது என்பதை அது காணாவிட்டால், வெகு தொலைவில் உள்ளதைப் பார்க்காவிட்டால், அது மேலே செல்வதால் அதற்கு எந்தப் பயனும் இல்லை. இப்படி உயரே மிதந்து சென்று, வெகு தொலைவில் பார்த்து, காரியங்கள் வருவதைக் கண்டு, கீழே திரும்பி வந்து, என்ன நடக்கப் போகிறது என்பதை மக்களுக்குச் சொல்லக்கூடிய கழுகுகளுக்கு அவர் தமது தீர்க்கதரிசியை ஒப்பிட்டார், அந்தக் கழுகு. 164 மேலும் இந்த வயதான கழுகு, அதற்கு வயதாகத் தொடங்கும் போது, அது கண்டுபிடிக்கிறது... அது பாறைகளின் வெடிப்புகளுக்குள் வெகு உயரே செல்கிறது, அது ஒரு குறிப்பிட்ட பாறையைக் கண்டு பிடிக்கிறது, அது அங்கே மேலே செல்கிறது. அதற்கு மிகவும் வயதாகிவிட்டதால் அதனால் எங்கும் நடக்க முடிவதில்லை, அதன் தலைக்கு மேலுள்ள இந்தக் கடினமான ஓடு அதைக் கொல்லுகிறது. அது தன் தலையை எடுத்து அந்தப் பாறையின் மேல் மோதத் தொடங்குகிறது, அதன் தலையிலிருந்து அந்த ஓடு உடைந்து விழும் வரை பாறையின் மேல் மோதிக்கொண்டே இருக்கிறது. ஓ, அது அதற்கு வலியை ஏற்படுத்துகிறது! அது அங்கே அடித்துக்கொள்வதை நீங்கள் காண முடியும். அது பின்னால் குதிக்கும் (கண்ணாடிகள் வழியாக அதைக் கவனித்தேன்.), அது மீண்டும் தன் தலையை மோதும். அது என்ன செய்ய முயற்சிக்கிறது? அந்த ஓட்டை உடைத்துத் தள்ள. அந்த ஓட்டை அது உடைத்துத் தள்ளும் வரை அது இரத்தஞ்சிந்தும், அதன் உடல் முழுவதிலும் இரத்தம் வழியும். 165 அதனால் அதை உடைத்துத் தள்ள முடியாவிட்டால், அது மரிக்கிறது, ஆனால் அது அதை உடைத்துத் தள்ளிவிட்டால், அது களிகூரவும் அலறவும் தொடங்கும், மைல் கணக்கில் அது அலறுவதை நீங்கள் கேட்க முடியும். ஏன்? தன் மேலிருந்த ஓடு முழுவதையும் தான் அகற்றிவிட்டோம் என்பதை அது அறியும், அந்த ஓட்டை அகற்றிவிட்டதால், தன் இளமை புதுப்பிக்கப்படப் போகிறது என்பதை அது அறியும். அது அற்புதமானது, கழுகின் அந்தச் செயலை நான் பாராட்டுகிறேன், ஆனால் சகோதரரே, எனக்கு ஒரு கன்மலையைத் தெரியும். ஆமென்! எனக்கு ஒரு கன்மலையைத் தெரியும், இளைப்படைந்த ஒரு பாவி தன் தலையை அதில் மோதுவதற்கு அல்ல, ஆனால் உலகத்தின் கடினமான ஓடு முழுவதும் தன்னை விட்டு உடையும் வரை, அனைத்து அவிசுவாசங்களும், சங்கிலிகளும் அறுந்து போகும் வரை ஜெபத்தில் தன்னைத்தானே மோதிக்கொள்ள முடியும், மேலும் அந்த மனிதன் ஒவ்வொரு பாவச் சங்கிலியும் தன்னை விட்டு அறுந்து போகும் வரை அங்கே ஜெபத்தில் தன்னைத்தானே மோதிக்கொள்ள முடியும். 166 வேசிகள் சீமாட்டிகளாக மாறும் வரை எங்கே மோதிக்கொள்ளலாம் என்பதை நான் அறிவேன், குடிகாரர்களும் சூதாடிகளும் தேவனுடைய பரிசுத்தவான்களாக, தேவனுடைய மனுஷர்களாக மாறும் வரை எங்கே மோதிக்கொள்ளலாம் என்பதை நான் அறிவேன், எனக்கு ஒரு கன்மலையைத் தெரியும், அந்தக் கன்மலைதான் நமது அடைக்கலமாகிய கிறிஸ்து இயேசு. உங்கள் மேலிருந்து உலகம் முழுவதையும் நீங்கள் அகற்றியவுடன், உங்கள் இளமையை நீங்கள் புதுப்பித்துக்கொள்கிறீர்கள். 167 எதைப் புதுப்பித்துக்கொள்கிறீர்கள்? நீங்கள் பு-... நித்திய ஜீவன் நிச்சயம் என்பதால் நீங்கள் தேவனைத் துதிக்கத் தொடங்கலாம் என்று அறிந்துகொள்ளுங்கள், ஏனெனில் அவர் அதை வாக்குத்தத்தம் செய்துள்ளார். உலகம் முழுவதும் உங்களை விட்டுச் செல்லும் வரை அங்கேயே இருங்கள், ஆனால் உலகத்தின் கடினமான ஓட்டில் சிறிது உங்கள் மேல் ஒட்டிக்கொண்டிருக்கும் வரை, நீங்கள்-நீங்கள் தொடர்ந்து மோதிக்கொண்டே இருப்பது நல்லது, ஏனென்றால் நித்திய ஜீவன் இன்னும் அங்கே இல்லை. "சரி, தேவனுடைய வார்த்தையின் ஒரு பகுதி சரியானது என்று நான் விசுவாசிக்கிறேன்," என்று நீங்கள் கூறும்போது, ஆ, உங்களுக்கு இன்னும் அங்கே அந்த ஓடு இருக்கிறது. ஆம், ஐயா. பெண்கள் இன்னும் தங்கள் தலைமுடியை கத்தரித்துக்கொண்டும், அரைகுறை ஆடைகளை அணிந்துகொண்டும் இருக்கும்போது, அங்கே நிறைய ஓடுகள் இருக்கின்றன. உம்-ஹும். 168 சில நாட்களுக்கு முன்பு யாரோ ஒருவர் இதற்காக என்னைக் கடிந்துகொண்டார், அவர்கள் கூறினார்கள், "சகோதரர் பிரன்ஹாம், மக்கள் உங்களை ஒரு தீர்க்கதரிசியாக மதிக்கிறார்கள்." நான் சொன்னேன், "நான் எந்தத் தீர்க்கதரிசியும் அல்ல." 169 அவர் சொன்னார், "ஆனால் அவர்கள் உங்களை அப்படிச் சொல்கிறார்கள். மக்கள் எப்படி பரிசுத்த... தீர்க்கதரிசன வரங்களை எப்படிப் பெறுவது மற்றும் அங்கிருக்கும் அந்தக் காரியங்களை எப்படிப் பெறுவது என்று அவர்களுக்கு நீங்கள் ஏன் போதிக்கக்கூடாது? அந்தப் பெண்களிடம், அந்த ஆண்களிடம் அவர்களின் கோட்பாடுகளைப் பற்றியும், பெண்கள் உடுத்தும் விதத்தைப் பற்றியும் சொல்வதை நிறுத்துங்கள்." 170 நான் சொன்னேன், "அவர்களால் தங்களுடைய ஏபிசி (ABC) -யையே கற்றுக் கொள்ள முடியாவிட்டால், அவர்களுக்கு எப்படி இயற்கணிதத்தைக் கற்பிக்கப் போகிறார்கள்?" கிறிஸ்தவர்களைப் போலச் சுத்தமாக இருக்கவும், செயல்படவும், இருக்கவும் அவர்களுக்குச் சாதாரண ஒழுக்கம் கூட இல்லை, அவர்கள் இன்னும் மழலையர் பள்ளியிலிருந்து வெளியே வராதபோது, ​​மேலும் வெளியே வர விரும்பாதபோது, உலகில் எப்படி நீங்கள் அவர்களுக்குக் கற்பிக்கப் போகிறீர்கள், அவர்களுக்கு உயர்நிலைப் பள்ளிக் கல்வியை எப்படிக் கொடுக்கப் போகிறீர்கள். நான் கோபமாகவோ அல்லது அருவருப்பாகவோ இருக்க விரும்பவில்லை, ஆனால் அதுதான் சத்தியம். ஆமென். ஹூ! நான் பக்தியுடன் உணருகிறேன். 171 அங்கேயே இருங்கள்! பரிசுத்த ஆவியானவர் வரும்போது அவர் உங்களை ஒரு வித்தியாசமான சிருஷ்டியாக மாற்றுவார். நீங்கள் உலகம் முழுவதையும் உங்களை விட்டு அகற்றி, சங்கிலிகளையும் அனைத்து அவிசுவாசத்தையும் அகற்றிவிடும்போது, இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றென்றைக்கும் மாறாதவர் என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்கள், தேவனு டைய வல்லமையை நீங்கள் விசுவாசிக் கிறீர்கள், உயிர்த்தெழுதலை நீங்கள் விசுவாசிக் கிறீர்கள், பரிசுத்த ஆவியின் ஸ்நானத்தை நீங்கள் விசுவாசிக்கிறீர்கள், இந்த ஆவிக்குரிய வரங்கள் அனைத்தையும் நீங்கள் விசுவாசிக்கிறீர்கள் மற்றும் அவை செயல்படுவதைக் காண்கிறீர்கள். 172 ஏன்? நீங்கள் அவருடன் மரித்து, அவருடன் அடக்கம்பண்ணப்பட்டு, அவருடன் எழுந்திருக்கிறீர்கள். அங்கே நீங்கள் இருக்கிறீர்கள். அதன்பின் அந்த அழுத்தம் நீங்கிவிடுகிறது. ஓ, சகோதரரே, உங்களைக் கண்டனம் செய்கிற ஒரு வார்த்தையைக் கூட பிரசங்கியாரால் பிரசங்கிக்க முடியாது, இல்லை, ஐயா, ஏனென்றால் அவர் சொல்வதற்கெல்லாம் நீங்கள் "ஆமென்" என்று சொல்ல முடியும், பாருங்கள், ஏனென்றால் நீங்கள் பழைய சங்கிலிகள் அனைத்தையும் அகற்றிவிட்டீர்கள். அவ்வளவுதான். நீங்கள் ஒரு கோட்பாட்டை நம்பவில்லை, நீங்கள் கிறிஸ்துவை நம்புகிறீர்கள். ஆம், ஐயா. 173 ஆம், பழைய ஓடு முழுவதும் அகற்றப்படும்போது, நீங்கள் நன்றாயிருக் கிறீர்கள், பிறகு ஒரு புதுப்பிக்கப்பட்ட இளமையை, அல்லது ஒரு புதுப்பிக்கப்பட்ட ஜீவனைப் பெற நீங்கள் ஆயத்தமாகிறீர்கள். உங்களுக்கு நித்திய ஜீவன், ஜோவா (Zoe), உங்களுக்குள் வாசமாயிருக்கும் தேவனின் சொந்த ஜீவன் இருக்கிறது, அதன்பின் நீங்கள் உயிருடன் இருக்கிறீர்கள், மரித்தவர்கள் அல்ல. அதன்பின் உங்கள் விருப்பங்களும் வாஞ்சைகளும் இந்த உலகத்தின் நாகரீகங்கள் மற்றும் இச்சைகளின் மேல் அல்ல, இங்கு நடனங்களுக்கு அலைந்து திரிவதிலும், திரைப்படக் காட்சிகளுக்குச் செல்வதிலும் அல்ல, மேலானவைகளின் மேலேயே இருக்கும். 174 உங்களில் பெந்தெகொஸ்தே மக்கள் பலரும் இரவில் வீட்டிலேயே தங்கி, தொலைக்காட்சிகள் மற்றும் இது போன்ற காரியங்களைப் பார்ப்பதாலும், உங்கள் ஜெபக் கூட்டங்களைத் தவறவிடுவதாலும் தான், இங்கே வெளியேயுள்ள உங்களுடைய வேதபாடச் சாலைகள் சத்தியத்தை உங்களுக்குச் சொல்ல நிற்கும் தேவனுடைய மனுஷர்களுக்குப் பதிலாக, எல்விஸ் போன்ற சில உலகப் பிரகாரமான பிரசங்கிமார்களை உருவாக்கியி ருக்கின்றன. அது முற்றிலும் சரி. அவர்கள் என்ன செய்ய முயற்சிக்கிறார்கள்... 175 நாம் எத்தகைய அறுவடையை அறுக்கிறோம் என்று உங்களுக்குத் தெரியுமா? நாம் ஒரு பிரிவினையின் அறுவடையை அறுக்கிறோம், ஏனென்றால் நாம் பிரிவினையின் விதையை விதைத்தோம். முளைத்து வரக்கூடிய ஒரே வகையான விதை பிரிவினையின் விதை மட்டும்தான், அதற்குக் காரணம் அதைத்தான் நாம் விதைக்கிறோம், மக்களை இதில் சேர்க்கவும், மக்களை அதில் சேர்க்கவும் முயற்சிக்கிறோம். 176 நீங்கள் மக்களைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர வேண்டும், மேலும் உங்கள் பிரிவினை காரியங்கள் அல்லது வித்தியா சங்களை மறந்துவிட வேண்டும். பரிசுத்த ஆவியானவரைக் கொண்டு ஒரு பரிசுத்த தேவனால் அவர்களைப் பரிசுத்த வாழ்க்கைக்குத் திரும்பக் கொண்டுவாருங்கள், ஒரு காலத்தில் தேவனுடைய வல்லமை அசைவாடியது போல அது அசைவாடுவதைப் பாருங்கள். ஆமென். தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொண்டு, வார்த்தையை மறுதலிக்கிறார்கள்! "தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறார்கள்." அதன்பின்பு, "சரி, இன்று நமக்குத் தேவையானது..." என்று கூறுகிறார்கள். நமக்குள் அழுத்தம் உருவாகி யிருப்பதில் ஆச்சரியமில்லை. மெத்தடிஸ்ட் சரியா? 177 அதிக நாட்களுக்கு முன்பல்ல, ஒரு பெண் என்னிடம் வந்து, "சகோதரர் பிரன்ஹாம், பரிசுத்த ஆவியைப் பெற்ற ஒரு பெண் ஸ்கேண்டல் (scandal) பாவாடைகளை அணிவது தவறு என்று நீங்கள் நம்புகிறீர்களா?" என்று கேட்டாள். நான், "ஸ்கேண்டல் பாவாடை என்றால் என்ன?" என்றேன். அதற்கு அவள், "அது அப்படி-இப்படி இருக்கும், உள்ளாடைகள், உள்ளே இருப்பது வெளியே தெரியும்" என்றாள். நான் சொன்னேன், "பரிசுத்த ஆவியைப் பெற்ற ஒரு பெண் உலகில் எதற்காகத் தன் உள்ளாடையைக் காட்ட விரும்புவாள்?" 178 வெட்கம், வெட்கம்! ஏன், இன்று நமது சகோதரர்களுக்கு என்ன ஆயிற்று-இன்றைய பிரசங்கங்களுக்கு என்ன ஆயிற்று? அவர்கள் அதைச் செய்யப் பயப்படுகிறார்கள், ஏனென்றால் அது அவர்களது உணவுக்கான சீட்டு, நீங்கள் வெளியேற்றப்பட்டுவிடுவீர்கள் என்று பயப்படுகிறார்கள். ஏன், அவர்கள்-அவர்கள் என்னை வெளியேற்ற வேண்டிய தில்லை, நானே எப்படியும் வெளியே வந்துவிட்டேன். 179 மேலும் அவிசுவாசிகளுக்கு மத்தியில் என்னைக் கட்டிக்கொள்ள நான் விரும்ப வில்லை, அப்படிச் செய்ய வேண்டாம் என்று இயேசு சொன்னார், "அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருங்கள், அவர்கள் நடுவி லிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோங்கள் என்று தேவன் சொல்லுகிறார், நான் உங்களை ஏற்றுக்கொள்வேன்." 180 காரியங்கள் நடைபெற முடியாததில் ஆச்சரியமில்லை, நாம் ஒரு பெந்தெகொஸ்தே எழுப்புதலை உருவாக்க முயற்சிப்பதில் ஆச்சரியமில்லை, நாம் செய்கிற காரியங்களைச் செய்யத் தவறுவதில் ஆச்சரியமில்லை, ஏன், சகோதரரே, நாம் தவறான விதையை விதைக்கிறோம், நமது ஸ்தாபனங்கள் எதை நம்புகிறதோ, நமது கோட்பாடுகள் நமக்கு எதைப் போதிக்கிறதோ அதை நாம் விதைக்கிறோம். 181 பில்லி கிரஹாம் நாட்டை ஆயிரம் முறை கடக்கலாம், மேலும் ஓரல் ராபர்ட்ஸ், மற்றும்-மற்றும் ஜேக் ஷுலர்ஸ், மற்றும் மற்ற அனைவரும், நாம் தேவனிடம் திரும்பி வரும்வரை, மீண்டும்... 182 மேலும் ஒரு அரசாங்கம் எப்படி உலகில் தன்னைத் தானே உருவாக்கிக்கொள்ள முடியும்? "அது அரசாங்கம்" என்று நீங்கள் சொல்கிறீர்கள். அரசாங்கத்திற்கு என்ன பிரச்சனை என்று உங்களுக்குத் தெரியுமா? அதற்குக் காரணம், நாமே தேர்ந்தெடுக்கிறோம். மக்கள்தான் அதற்குக் காரணம், பிரச்சனை அங்கேயே இருக்கிறது. நாம் எந்த வகையான அரசாங்கத்தைப் பெற்றுள்ளோமோ அதை நாம்தான் தேர்ந்தெடுக்கிறோம், ஏனென்றால் அது நம் இருதயத்திற்குள் சென்றுவிட்டது, அதைத்தான் நாம் செய்ய முயற்சிக்கிறோம். மக்கள் அதுபோன்ற ஒன்றை விரும்புகிறார்கள், அவர்கள் அதற்கு வாக்களிக்கிறார்கள். 183 ஒரு சபைக்குச் செல்லுங்கள், அதிக நாட்களுக்கு முன்பல்ல, ஒரு பொறுப்புள்ள சபையில் நான் இருந்தேன், அங்கு ஒரு சிறு சகோதரன் சுமார் ஆறு மாதங்களாகப் பிரசங்கம் செய்துவந்தான், மேலும் அறங்காவலர்களும் டீக்கன் போர்டும் அவனை அழைத்து, "நீ அதை நிறுத்த வேண்டும், இது போன்றவற்றை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்" என்று கூறினார்கள். "எதை நிறுத்த வேண்டும்?" என்றான். "நீ-நீ பிரசங்கிக்கும் அந்தச் செய்தியை" என்றார்கள். "செய்தியா? நான் வேதத்தையே பிரசங்கிக்கிறேன்" என்றான். அவர் சொன்னார், "நாங்கள் அத்தகைய எதையும் நம்புவதில்லை." "சரி, அது வேதம்." அவர்கள் என்ன செய்தார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? அவர்கள், "நாங்கள் அவனை வெளியே தள்ளுவோம்" என்றார்கள். அவன் சொன்னான், "நீங்கள் அப்படிச் செய்ய வேண்டியதில்லை, நான் ஏற்கனவே வெளியேதான் இருக்கிறேன்." அது சரி. நிச்சயமாக. 184 மக்களுக்கு என்ன பிரச்சனை? வெறும் ஒரு உணவுக்கான சீட்டு. நான் விரும்புவது... நீங்கள் சொல்கிறீர்கள், "சரி, உங்களால் முடியாது, நீங்கள்... மக்கள் என்று அவர்கள் பயப்படுகிறார்கள், அந்த... உங்களிடம் ஒரு அட்டை இல்லையென்றால்..." 185 ஆமோஸ் அந்த நாளில் மக்களுக்குப் பிரசங்கிக்க அங்கே கீழே வந்தபோது அவனிடம் ஒரு அட்டை இருந்ததாக நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியுமா? "இதோ என் ஐக்கிய அட்டை, பரிசேயர் மற்றும் சதுசேயர் அனைவருடனும் நான் ஒத்துழைப்பைக் கொண் டுள்ளேன்" என்று சொன்னாரா? அவர்கள் அவனை வெறுத்தார்கள். அது சரி. அவர் இன்று நின்றிருந்தால், இன்று அவர்களும் அப்படியே செய்வார்கள், அவர் இந்த வார்த்தையின் மேலேயே நேராக நிற்பார், அதே காரியத்தைச் செய்வார், மேலும் கத்தோலிக்கர் முதல் பெந்தெகொஸ்தே வரை அனைவரையும் கண்டனம் செய்வார். அவர் அதே காரியத்தைத்தான் செய்வார், அவர் நிச்சயமாகச் செய்வார். அவருக்கு எந்த-அவருக்கு எந்த ஒத்துழைப்பும் இருக்காது, அவர் ஒரு ஐக்கிய அட்டையை வைத்திருக்க வேண்டியதில்லை, ஆனால் அவரிடம் 'கர்த்தர் உரைக்கிறதாவது' (THUS SAITH THE LORD) என்பது இருந்தது. அதைத்தான் மக்கள் விரும்பவில்லை. 186 அவர் இன்று வீதிகள் வழியே நடந்து சென்று மக்களைப் பார்ப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா, அவருடைய நீதியான ஆத்துமாவால் அமைதியாக நிற்க முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? நிச்சயமாக இல்லை, இல்லை. அதுதான் பிரச்சனை, நமது அழுத்தம் உருவாகியுள்ளது, அதுதான் இன்று நமது தேசத்தின் பிரச்சனை, அதுதான் இன்று நமது உலகத்தின் பிரச்சனை. 187 சிறிது காலத்திற்கு முன்பு நான் ஆப்பிரிக்காவில் இருந்தபோது கவனித்துக் கொண்டிருந்தேன், அடைப்பிலிருந்து ஒரு-ஒரு சிறிய ஆட்டுக்குட்டி அடைப்பை விட்டு வெளியே அலைந்து சென்றது, அந்தச் சிறிய ஜீவன் திடீரென்று மிகவும் பதட்டமடைந்தது, "அதற்கு என்ன பிரச்சனை? அதற்கு என்ன பிரச்சனை?" என்று நான் நினைத்தேன். அப்போது அங்கே ஒரு சிங்கம் வருவதை நான் தற்செயலாகக் கவனித்தேன். அதனால் சிங்கத்தைப் பார்க்க முடியவில்லை, சிங்கத்தின் வாசனையையும் அதனால் நுகர முடியவில்லை, ஆனால் ஆபத்தைப் பற்றி ஏதோ ஒன்று அதற்குக் கூறிக்கொண்டே இருந்தது. அது பதட்டமடைந்தது, அது கத்திக்கொண்டிருந்தது, அது சென்றுகொண்டிருந்தது, எந்தப் பக்கம் செல்வது என்று அதற்குத் தெரியவில்லை. 188 அதுதான் பிரச்சனை, அழுத்தத்தை உருவாக்குவது எதுவென்றால், நீங்கள் அணுகுண்டுகளுக்குப் பயப்படுகிறீர்கள், உலகம் முழுவதும், ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்று அவர்கள் பயப்படுகிறார்கள், ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்பதை அவர்கள் அறிவார்கள். ஏன், நிச்சயமாக, அது நடக்கப் போகிறது. ஆனால் அதனால் என்ன வித்தியாசம்? ஆமென். அது மகிமைக்கான ஒரு விரைவான பயணம். ஏன், நாம் ஏற்கனவே மரித்துவிட்டோம், நாம் மரித்தோம், கிறிஸ்து இயேசுவுக்குள் உன்னதங்களில் அவருடன் நாம் எழுந்திருக்கிறோம், அவரைச் சந்திக்கச் செல்வதே நமது விருப்பம். 189 அதிக நாட்களுக்கு முன்பல்ல, ஒரு போதகர் என்னை அழைத்து, "சகோதரர் பிரன்ஹாம், எந்த நேரத்திலும் இயேசு வரக்கூடும் என்பதைப் பற்றிச் சொல்லி மக்களை நீங்கள் பயமுறுத்துகிறீர்கள்" என்றார். "நீங்கள் மக்களை மிகவும் பதட்டமடையச் செய்கிறீர்கள்" என்றார். நான், "மிகவும் பதட்டமடையச் செய்கிறேனா?" என்றேன். "ஏன்," அவர் சொன்னார், "நிச்சயமாக, உலகத்தின் முடிவைப் பற்றி யாரும் சிந்திக்க விரும்பவில்லை." நான் சொன்னேன், "நான் சிந்திக்கக்கூடிய மிகப்பெரிய காரியம் அதுதான். அப்படியானால் அவர்கள் ஆயத்தமாக இல்லை." அவர் சொன்னார், "அது..." 190 "அவருடைய பிரசன்னமாகுதலை விரும்புகிற யாவருக்கும், அவர் இரண்டாவது முறை தோன்றுவார், அவருடைய பிரசன்னமாகுதலை விரும்புகிறவர்கள், ஆனால் நீங்கள் பூமியுடன் கட்டப்பட்டவர்களாகவும், இன்னும் இங்கேயே கீழே வாழ்ந்துகொண்டும் இருந்தால், உங்களைப் பொறுத்தவரை இது இதைவிடப் பத்து லட்சம் மடங்கு அதிகமாக உங்களைப் பிடித்துக்கொள்ளவில்லை என்றால், நீங்கள் இன்னும் இங்கேயே கீழேதான் இருக்கிறீர்கள். நீங்கள் இங்கே மேலே இருந்தால், நீங்கள் அதிலிருந்து இங்கே மேலே கடந்து வந்துவிட்டீர்கள்." ஆமென். 191 நண்பர்களே, அழுத்தத்தை விட்டு விடுங்கள், அது சரிதான். ஓ, ஆம். அது சரிதான், அழுத்தத்தை விட்டுவிடுங்கள். நீங்கள் இந்த பெரிய கன்மலையாகிய கிறிஸ்துவிடம் வந்தால், அவிசுவாசம் முழுவதையும்-அவிசுவாசத்தை அகற்றிவிட்டால், அது... நீங்கள் அப்போது களிகூரத் தொடங்குவீர்கள், ஏனென்றால் அழுத்தம் வெகு சீக்கிரம் உங்களை விட்டுப் போகப் போகிறது. அது சரி. 192 முன்பு விடுதலைப் பிரகடனம் கையெழுத்திடப்பட்ட அந்த அதிகாலையில் இருந்த பழைய அடிமைகளைப் போல, சில ஆண்டுகளுக்கு முன்பு நான் வாசித்துக் கொண்டிருந்தேன், அவர்கள் அந்த-அந்தப் பிரகடனத்தில் கையெழுத்திட்டபோது, ஒரு குறிப்பிட்ட நாளில் தாங்கள் சுதந்திரமடையப் போகிறோம் என்பதை அறிந்து அந்த அடிமைகள் மிகவும் மகிழ்ந்தனர். சூரியன் உதிக்கும் போது தாங்கள் சுதந்திரமடையப் போகும் நேரம் அது. 193 அவர்கள் என்ன செய்தார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? பெண்கள், மற்றும் குழந்தைகள், மற்றும் சிறியவர்கள், மற்றும் ஊனமுற்றவர்கள், அவர்கள் அனைவரும் இப்படி கீழே இருந்தார்கள், அவர்கள் அந்த மலைச்சரிவு முழுவதும் வரிசையாக நின்றிருந்தார்கள், ஏனென்றால் சூரியன் உதிக்கத் தொடங்கியவுடனே அந்த அதிகாலையில் சூரிய உதயத்தின்போது அவர்கள் சுதந்திரமடை வார்கள். இப்போது அதன் தேதியை நான் மறந்துவிட்டேன், அதை நினைவில் வைத்திருக்க விரும்புகிறேன், ஆனால் இப்போது எனக்கு நினைவில்லை, எனக்குத் தெரியும் என்று நினைத்தேன், ஆனால் நான் அதை எழுதி வைக்கவில்லை, எனவே எனக்குத் தேதி நினைவில்லை. 194 ஆனால் எப்படியிருந்தாலும், அந்த அதிகாலையில், தங்களால் முடிந்தவரை விரைவில், சூரியன் உதித்தவுடனே அவர்கள் சுதந்திரமடையப் போகிறார்கள். சரி, அவர்களில் மிகவும் பலசாலியானவர்கள், இன்றைய பலத்த கிறிஸ்தவர்களைப் போல, அவர்கள் மலையின் உச்சிக்கு ஏறி, பகல் விடியத் தொடங்கியதைக் கவனித்தார்கள், உங்களுக்குத் தெரியும், சூரியனின் முதல் சிறிய எட்டிப்பார்த்தல் தோன்றியவுடன், மலையின் உச்சியிலிருந்தவன், "சூரியன் உதித்துவிட்டது! நாம் சுதந்திர மானோம்!" என்று அலறினான். அவன் அடுத்தவனுக்குக் கீழே சத்தமிட்டான், அடுத்தவன் அடுத்தவனுக்குச் சத்தமிட்டான், அடுத்தவன் அடுத்தவனுக்கு, அது கீழே முழுவதும் செல்லும் வரை. அவர்கள் அழுத்தத்தை விட்டுவிட முடியும், "நாம் சுதந்திரமானோம்!" ஏன்? "சூரியன் உதித்து விட்டது." ஆமென். 195 அது சூரியன் (s-u-n) ஆக இருந்தது, ஆனால், இன்று, என்னை அலற அனுமதியுங்கள், "குமாரன் (The Son) உயிர்த்தெழுந்துவிட்டார்!" குமாரன் (S-o-n). "சாயங்கால வெளிச்சம் பிரகாசிக்கிறது, பரிசுத்த ஆவியானவர் இங்கே இருக்கிறார், தேவ குமாரன் மக்களின் இருதயங்களில் ஆளுகை செய்கிறார்!" அழுத்தத்தை விட்டுவிடுங்கள், அவர் இங்கே இருக்கிறார், குமாரன் உயிர்த்தெழுந்துவிட்டார். அவர் இங்கே இருந்தபோது நடந்த அதே காரியங்கள் நடைபெறுவதைப் பார்த்து நான் இப்போது மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இதோ இந்த கடைசி நாளில் அது அவருடைய மக்களில் மீண்டும் செயல்படுகிறது, எனவே நாம் அழுத்தத்தை விட்டுவிடலாம். 196 அவர் உயிர்த்தெழுந்துவிட்டார், கல்லறையிலிருந்து எழுந்துவிட்டார், அவர் மரித்தோரிலிருந்து எழுந்துவிட்டார், அவர் இரண்டாயிரம் ஆண்டுகளாக உயிர்த்தெழுந் திருக்கிறார், நாம் அவருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், அவருக்குள் உயிர்த்தெழுந் திருக்கிறோம், கிறிஸ்து இயேசுவுக்குள் உன்னதங்களில் உட்கார்ந்திருக்கிறோம், ஆமென், ஏற்கனவே மரித்தோரிலிருந்து எழுந்துவிட்டோம். உங்கள் மீது அழுத்தத்தை வைத்திருப்பதில் என்ன பயன்? வாழ்வதா? ஏன், நீங்கள் வாழ வேண்டும், நீங்கள் மரிக்க முடியாது, "என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு." அது சரி. "நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயி ருக்கிறேன்," என்று இயேசு கூறினார், "என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான். உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிற வனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்." பாருங்கள், நாம் அவருடன் ஏற்கனவே எழுப்பப்பட்டிருக்கிறோம், அதற்கான அச்சாரத்தை நாம் பெற்றுள்ளோம், பரிசுத்த ஆவியானவர் அதை அவ்வாறே அறிவிக்கிறார். நாம் மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட் பட்டிருக்கிறோம். உங்களுக்கு எப்படித் தெரியும்? உலகம் முழுவதும் அகற்றப் பட்டுவிட்டது. 197 அந்த வயதான கழுகு தான் விரும்புகிறபடியெல்லாம் அலற முடியும், ஏனென்றால் ஒவ்வொரு சங்கிலியும் அதை விட்டு நீங்கிவிட்டது, பழைய ஓடு முழுவதும் போய்விட்டது. மேலும் உலகப்பிரகாரமான ஓடு, உலகப்பிரகாரமான பழக்கவழக்கங்கள், முணுமுணுப்புகள், கோபம், சினம், நடைபெறும் அனைத்து காரியங்களும், ஒரு ஸ்தாபனத்திலிருந்து இன்னொரு ஸ்தாபனத்திற்கு ஓடுவது அனைத்தும் தீர்க்கப்பட்டு நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் இருக்கும்போது, நித்திய ஜீவன் வாசம் செய்வதை நீங்கள் அறிவீர்கள், நீங்கள் திரும்பிப் பார்த்து, நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள் என்பதை, அங்கே கீழே அந்தச் சேற்றிலும் முணுமுணுப்பிலும் இருந்ததைக் காண்கிறீர்கள். இப்போது, நான் ஒரு புதிய சிருஷ்டியாக, கிறிஸ்து இயேசுவுக்குள் என்றென்றைக்கும் பாதுகாப்பாக இங்கே மேலே இருக்கிறேன். 198 சில ஆண்டுகளுக்கு முன்பு நான் மலைகளில் வெகு உயரத்தில் பிரசங்கம் செய்துகொண்டிருந்தேன். கர்த்தருக்குப் பரிசுத்தம் என்பது குறித்தும், அது ஒவ்வொரு இருதயத்தின் மீதும், குதிரைகளின் மீதும் எப்படி இருக்கும், மேலும் பகல் நேரத்தில் சீயோன் மலையின் மேல் ஒரு பெரிய நிழலும், இரவில் அக்கினி ஸ்தம்பமும் தொங்கிக்கொண்டிருக்கும், மற்றும் பல காரியங்கள் குறித்தும் ஒரு நாள் இரவு என்னால் முடிந்த அளவு கடினமாக நான் பிரசங்கித்துக்கொண்டிருந்தேன். நான் பிரசங்கித்து முடித்தபோது, நான் ஒரு பீட அழைப்பைக் கொடுத்தேன், அங்கே பின்னால் ஒரு வயதான மரவெட்டி இருந்தான், தேவன், "இன்னும் கொஞ்சம் நேரம் பொறுத்திரு" என்று கூறினார். 199 நான் சொன்னேன், "யாராவது வந்து கர்த்தரை ஏற்றுக்கொள்ள விரும்பினால், இப்போது வாருங்கள்," ஆனால் அவன் வரவில்லை. நான் அவர்களிடம் அந்தப் பாடலை மீண்டும் வாசிக்கும்படி கேட்டேன், அவர்கள் அந்தப் பாடலை வாசித்தார்கள், உடனே, இதோ அவன் இப்படி ஓடிவந்தான். அவன், கூட்டத்திலிருந்து என்னை வெளியேற்றுவதற்காகவே அவன் அங்கே வந்திருந்தான். அவனுடைய மேலங்கிகள் இப்படி முழுவதுமாகக் கிழிந்திருந்தன, மேலும் அவற்றுக்கு பக்கவாட்டில் ஒரு பெரிய பழைய ஆணி நீட்டிக்கொண்டிருந்தது, அவன் தீவனம் வெட்டிக்கொண்டிருந்தான். அவன் அங்கே வந்தான், அவனால் பீடத்திற்குப் போக முடியவில்லை, அவன் விழுந்து, தன் கைகளைத் தலையின் மேல் வைத்துக்கொண்டு, "தேவனே, என்மேல் இரக்கமாயிரும்," என்று சத்தமிட்டபடியே ஊர்ந்து வந்து, பீடத்தருகே வந்து இரட்சிக்கப்பட்டான். 200 அடுத்த நாள்... அடுத்த நாள் இரவு, அவன் தன் சிறு குழந்தைகளுடன் அங்கே உள்ளே வந்து அமர்ந்தான், அவனுடைய சிறு பையன், சுமார் ஐந்து வயதுடைய அந்தச் சிறுவன் மேலே வந்து, "சகோதரர் பிரன்ஹாம்," என்றான், "எங்களுக்கு இப்போது ஒரு நல்ல அப்பா இருக்கிறார்" என்றான். "ஒவ்வொரு நாளும் அவர் வீட்டுக்கு வருவார், குடித்துவிட்டு வந்து, எங்களை அடிப்பார், இன்னும் பல காரியங்களைச் செய்வார்" என்றான். ஆனால் அவன் சொன்னான், "இன்றிரவு, நாங்கள் அனைவரும் மேசையில் ஆசீர்வாதம் கேட்டோம்." அவன் மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருந்தான். நான் பிரசங்கிக்க ஆயத்தமாவதற்குச் சற்று முன்பு, அவன் கேட்டான், "சகோதரர் பிரன்ஹாம், நான் ஏதேனும் சொல்வதற்கு, எனக்கு ஒரு நிமிடம் ஒதுக்க முடியுமா?" என்று. நான் சொன்னேன், "ஆம், ஐயா. மேலே வாருங்கள், சகோதரரே." 201 அவர் அங்கு வந்து, "நான்-நான் ஒரு காலத்தில் மரித்தவனாக இருந்தேன், ஆனால் இப்போது உயிருடன் இருக்கிறேன்" என்றார். "எனக்கு எல்லாம் மாறிவிட்டது" என்றார் அவர். "நேற்று இரவு நான் ஒரு கனவு கண்டேன், சகோதரன் பிரன்ஹாம்" என்று அவர் சொன்னார். நான், "அது என்ன? அதை எங்களிடம் சொல்ல முடியுமா?" என்று கேட்டேன். 202 அவர் சொன்னார், "உங்களுக்குத் தெரியுமா, சகோதரன் பிரன்ஹாம், நான் ஒரு முயலாக இருப்பதைப் போல கனவு கண்டேன்," மேலும், "வேட்டை நாய்கள் என் மீது பாய்ந்தன" என்றார். "நான் ஓடிக் கொண்டிருந்தேன், ஆனால் அந்த நீளமான கால்களை உடைய வேட்டை நாய்கள் என்னை பிடித்துவிடுவதைப் போல என் பின்னாலேயே வந்து கொண்டிருந்தன" என்றார். "அவை குரைத்துக் கொண்டிருந்தன," மேலும் "அவை எனக்கு மிகவும் நெருக்கமாக வந்துவிட்டதால் அவற்றின் மூச்சுக்காற்றை என் குதிங்கால்களில் உணர முடிந்தது" என்றார். "ஒவ்வொரு முறையும் அவை குதிக்கும்போது, என்னை கடிப்பதை என்னால் உணர முடிந்தது" என்றார். 203 மேலும் அவர் சொன்னார், "நான் பார்த்தேன், அங்கே ஒரு பெரிய பாறை இருந்தது, அந்தப் பாறையில் ஒரு பிளவு இருந்தது, அந்தச் சிறிய பிளவுக்குள் என்னால் நுழைய முடிந்தால், அது நான் நுழைவதற்கு ஏற்ற அளவிலேயே இருந்தது, அந்த வேட்டை நாய்களால் உள்ளே வர முடியாது என்பதை நான் அறிந்திருந்தேன், அந்தப் பாறையை அவற்றால் கீற முடியாது என்று எனக்குத் தெரியும், அந்தப் பாறைக்குள் என்னால் நுழைய முடிந்தால் நான் பாதுகாப்பாக இருப்பேன் என்று எனக்குத் தெரியும்." மேலும், "நான் சரியான நேரத்திற்கு உள்ளே சென்றுவிட்டேன்" என்றார். "நான் உள்ளே சென்றதும்," "நான் அமர்ந்து ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஆரம்பித்தேன்" என்றார். 204 அதுதான், அழுத்தத்தை விலக்கி விடுங்கள். அதுதான், அந்தப் பாறையிடம் வாருங்கள். நரகத்தின் வேட்டை நாய்கள் உங்களுக்குப் பின்னாலேயே பாய்ந்து வருகின்றன, நீங்கள் செல்லும்போது பாவம் உங்கள் வாழ்க்கையை அடையாளப்படுத்துகிறது. நீங்கள் உரிமை கொண்டாடுகிறீர்கள்... நீங்கள் உங்களை ஒரு கிறிஸ்தவன் என்று சொல்லிக்கொண்டு, இன்னும் உலகத்தை நேசித்தால், நீங்கள் ஒரு கிறிஸ்தவன் என்று சொல்லிக்கொண்டு, வார்த்தையை விசுவாசிக் கவில்லை என்றால், நரகத்தின் வேட்டை நாய்கள் உங்களுக்குப் பின்னால் குரைத்துக் கொண்டு வருகின்றன என்று அர்த்தம்; அவர் உங்களை ஏதோவொரு கோட்பாட்டிலோ அல்லது ஒரு முட்செடி புதரிலோ மறைத்து வைத்திருக்கிறார், அங்கே அவரால் உங்களைப் பிடிக்க முடியும். ஒரே ஒரு பாதுகாப்பான இடம் மட்டுமே உள்ளது, அதுதான் அந்தப் பாறை, சகோதரனே. இன்றிரவு அந்தப் பாறையில் ஒரு பிளவு உள்ளது, அது பாவிகளுக்காகத் திறக்கப்பட்டுள்ளது, அது அவிசுவாசத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளது, அதற்குள் ஓடிச் செல்லுங்கள், பின்னர் அழுத்தத்தை விலக்கி விடுங்கள், அங்கே அமருங்கள், நீங்கள் என்றென்றைக்கும் பாதுகாப்பாக இருப்பீர்கள். அழுத்தத்தை மட்டும் விலக்கிவிடுங்கள், நீங்கள் நலமாக இருப்பீர்கள். கிறிஸ்துவிடம் ஓடிச் செல்லுங்கள், ஏனென்றால் அவரே நமது அடைக்கலம், "தேவன் நமக்கு அடைக்கலமும் கோட்டையும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்." நமது தலைகளை ஒரு கணம் தாழ்த்துவோம். 205 நான் இங்கு இன்னும் பேச வேண்டிய சுமார் முப்பது காரியங்கள் என்னிடம் உள்ளன, ஆனால் நான் உங்களை சோர்வடையச் செய்ய விரும்பவில்லை, நேரம் தாமதமாகிவிட்டது. இருப்பினும் நான் உங்களிடம் ஒன்றைக் கேட்கப் போகிறேன். 206 உங்களில் அநேகர், இங்குள்ள ஏறக்குறைய அனைவரும், இதற்கு முன்பு எனது கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறீர்கள், பரிசுத்த ஆவியானவர் சொன்னதில் எதுவுமே சரியில்லாதது என்று உங்களால் ஒரு காரியத்தைக் கூட சுட்டிக்காட்ட முடியாது என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் நண்பரே, ஒன்றை நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் உங்கள் ஸ்தாபனத்தில் தஞ்சம் புகாதீர்கள். ஏதோவொரு சிறிய அனுபவத்தில் தஞ்சம் புகாதீர்கள், இன்றிரவு உலகம் முழுவதும் யாரோ ஒருவர் உணர்ச்சிகள், நெருப்பு, புகை, இரத்தம், தூண்கள் மற்றும் எல்லாவற்றுடனும் சுற்றித் திரிகிறார்கள், அதை நீங்கள் நம்பாதீர்கள். ஒரே ஒரு உணர்வு மட்டுமே உள்ளது, அதுதான் கிறிஸ்து. நீங்கள் அதற்குள் இருக்கும்போது, சகோதரனே, சகோதரியே, உங்கள் வாழ்க்கை மாறுகிறது, நீங்கள் ஒரு புதிய சிருஷ்டியாகிறீர்கள், நீங்கள் மரணத்திலிருந்து ஜீவனுக்குக் கடந்துவிட்டீர்கள். நான்-நான் உங்களை நியாயந்தீர்க்க முடியாது, நான் ஒருபோதும், நியாயந்தீர்க்க அனுப்பப்படவில்லை, நான் இந்த வார்த்தைக்காக மட்டுமே அனுப்பப்பட்டேன். 207 இன்றிரவு, உங்களை நீங்களே ஆராய்ந்து பாருங்கள். இங்குள்ள ஒவ்வொருவரும், நீங்கள் யார் என்று எனக்குத் தெரியாது, ஆனால் உங்களைப் பற்றி நீங்களே நினைத்துப் பாருங்கள், உங்களை நீங்களே பாருங்கள், நீங்கள் செயல்படும் விதத்தை, நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். பெண்களே, உங்களை நீங்களே பாருங்கள். ஆண்களே, உங்களை நீங்களே பாருங்கள். 208 போதகரே, உங்களை நீங்களே பாருங்கள். உங்கள் ஸ்தாபனத்தைப் பற்றி என்ன? இன்றிரவு தேவனுடைய சத்தியம் வெளிப்பட்டால் உங்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லையா, அது உங்களுக்கு அவ்வளவு முக்கியமா? நீங்கள் உங்கள் ஸ்தாபனத்துடனேயே தங்கிவிடுவீர்களா? அப்படியானால் நீங்கள் இன்னும் ஒரு பாவியாகவே இருக்கிறீர்கள். உங்களுக்கும் தேவனுடைய வார்த்தைக்கும் இடையில் எதையாவது வைத்தால் நீங்கள் ஒரு அவிசுவாசியாக இருக்கிறீர்கள். இப்போது, நினைவில் கொள்ளுங்கள், அது இயேசு, அவரே வார்த்தை, "ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி, நமக்குள்ளே வாசம் பண்ணினார்." அவரே அந்த வார்த்தை. உங்களுக்கும் தேவனுக்கும் இடையில் ஏதாவது இருக்கிறதா? 209 இப்போது, உங்கள் தலைகள் தாழ்த்தப்பட்ட நிலையில், நான் உங்களிடம் கேட்கிறேன் (நான் உங்களை நீண்ட நேரம் காக்க வைத்துவிட்டேன், ஆனால் அடுத்த வெடிப்பு என்னைத் தாக்காது என்று எனக்கு எப்படித் தெரியும்? ஏதோவொரு கட்டத்தில் நான் செல்ல வேண்டும்.), நான் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் தேவன் ஆதரிக்கவில்லையா. அது என்னால் அல்ல, அது அவருடைய வார்த்தையாக இருப்பதால். நான் உங்கள் ஸ்தாபனங்களை இடத்திற்கு இடம் கடந்துவர வேண்டியிருந்தது, அது உங்களுக்கு எதிரானது அல்ல, உங்களை மற்றவர் களிடமிருந்து பிரிக்கும் அந்த அமைப்புக்கு எதிரானது; நீங்கள் அங்கே அமர்ந்து உலகத்தைப் போல வாழ்ந்து கொண்டும், நீங்கள் கிறிஸ்தவர் இல்லை என்று தெரிந்தும், உங்களை ஒரு கிறிஸ்தவன் என்று சொல்லிக்கொள்ள அனுமதிக்கும் அந்த அமைப்புக்கு எதிரானது. உங்களால் வார்த்தையோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியாவிட்டால், ஏதோ தவறு இருக்கிறது என்று அர்த்தம், அது போதகர்களுக்கும் அனைவருக்கும் பொருந்தும். அது சரி என்று உங்களுக்குத் தெரியும். 210 இப்போது, அதைச் சிந்தித்துப் பாருங்கள். ஏதோவொரு வெடிப்பு, எங்கேயோ ஒன்று இந்த நாட்களில் உங்களைப் பிடிக்கப் போகிறது, நீங்கள் போக வேண்டும், நீங்கள் தேவனைச் சந்திக்க வேண்டும். நீங்கள்... வேட்டை நாய்களை முந்திச் செல்ல ஒரு வாய்ப்பு இருக்கும்போதே, இன்றிரவு நாம் அந்தப் பாறையிடம் செல்வோம். நீங்கள் என்னுடன் வருவீர்களா? நான் வழிகாட்டு கிறேன். உங்கள் தலைகளைத் தாழ்த்தி, ஒவ்வொரு கண்ணும் மூடப்பட்டிருக்கையில், ஜெபத்தில் நினைவுகூரப்பட விரும்புகிறவர் யார்? உங்கள் கையை உயர்த்தி, "சகோதரன் பிரன்ஹாம், எனக்காக ஜெபியுங்கள்" என்று சொல்லுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப் பாராக, நீங்கள், நீங்கள், ஆம். இந்தக் கட்டிடத்தை சுற்றிலும் பாருங்கள். 211 ஓ, ஆண்டவரே, என்னைப் பாறையிடம் நடத்தும். "என்னை விட உயரமான அந்தப் பாறையிடம் என்னை நடத்தும். அது புயல் காலத்தில் ஒரு புகலிடம்." என்னை நடத்தும், ஓ ஆண்டவரே, என்னை நடத்தும். நான்-நான் இந்த உலகத்தில் இருக்க விரும்பவில்லை, அதனுடன் அழிந்துபோக நான் இங்கே விடப்பட விரும்பவில்லை, "பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிவார்கள்." உலகத்தில் வாழ்கிறவர்கள் உலகத்தோடே மடிவார்கள். இந்த உலகத்திற்காகவும் இந்த உலகத்திலும் வாழ்கிறவர்கள் அணு குண்டு வெடிப்பில் அழிந்து போவார்கள், அது வெறும் அணு குண்டுக்கான தீவனமே. 212 இன்று இந்த மக்களைப் பாருங்கள், வீதியிலே, முற்றத்திலே அவர்களைப் பாருங்கள், அவர்கள் எங்கு சென்றாலும் பாருங்கள், என்ன பிரச்சினை என்று நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அவர்கள் இன்பத்தைத் தேடுகிறார்கள், புகைபிடிக்கிறார்கள், குடிக்கிறார்கள், ஆழங் களில் மூழ்குகிறார்கள், விபசாரம் செய்கிறோம் என்று தெரிந்தும் பெண்கள் ஒழுக்கக்கேடாக உடை அணிகிறார்கள். 213 நீங்கள் சொல்கிறீர்கள், "நான் யாரைப் போலவும் சுத்தமாகவே இருக்கிறேன்." ஆனால் அம்மையாரே, நீங்கள் உங்களை அலங்கரித்துக் கொண்டு இந்த வீதிக்கு வரும் விதத்தைப் பார்த்து, ஆண்கள் உங்கள் மீது நாட்டம் கொள்கிறார்கள்; இயேசு சொன்னார், "ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ் செய்தாயிற்று." அந்தப் பாவி விபசாரத்திற்காகப் பதிலளிக்கும்போது, உங்களை வெளிப்படுத் தியவராக நீங்களே இருப்பீர்கள். இப்போது அதைச் சிந்தித்துப் பாருங்கள். 214 ஒரு ஸ்தாபனத்தின் சிறு துணுக்குக்காக ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தையை சமரசம் செய்யும் ஆண்களே, உங்களுக்கு வெட்கமாக இல்லையா. நாம் மனந்திரும்புவோம், தேவனிடம் மன்னிப்பு கேட்போம், இந்த ஏரியின் மீது நடக்கும் மாநாடு ஒரு தவறாக மாற விடமாட்டோம். தேவன் நம்முடன் இருக்கச் செய்வோம், நம் இதயங்களில் எரியும் நெருப்புடன், ஆவியினால் நிரப்பப்பட்டு இங்கிருந்து செல்வோம். நமக்கு உதவக்கூடிய ஒரே ஒன்றான அந்தப் பாறையிடம் ஓடிச் செல்வோம். 215 ஒரு நாள் உங்கள் ஸ்தாபனம், உங்களை தவறான வழியில் வற்புறுத்தும் உங்கள்-உங்கள் நண்பர்கள், உங்கள் போதகர் உட்பட, உலகத்துடன் அழிந்துபோவார்கள்; அவர் உங்களை அப்படி வாழ அனுமதித்து, அதைப் பற்றி உங்களிடம் எதுவும் சொல்லாவிட்டால். பரிசுத்தமானவர்கள் என்றும் அங்கீகரிக்கப் பட்டவர்கள் என்றும் கூறிக்கொண்ட அந்த ஆசாரியர்களைப் பாருங்கள், இயேசு சொன்னார், "நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவ னானவர்கள், உங்கள் பிதாவின் கிரியைகளைச் செய்கிறீர்கள்." ஆனாலும் அவர்கள் தூய்மையான, நேர்மையான மனிதர்களாக இருந்தனர், அப்படித் தோன்றினர், ஆனால் அவர்கள் ஜீவனுள்ள வார்த்தையை மறுதலித்தார்கள், அவர்கள் தேவபக்தியின் வேஷத்தைக் கொண்டிருந்தார்கள். தீர்க்கதரிசி அவர்களிடம் சொன்னார், "நீங்கள் சேவிக்கும் அதே தேவன், அவர்-அவர்-அவர் உங்களை பட்சிப்பார். நீங்கள்..." அவரும் அதைச் செய்தார். 216 இன்றிரவு, இதை நான் சொல்கிறேன்: அமெரிக்கா விசுவாசிப்பதாகக் கூறிக்கொள்ளும் அதே தேவன், அவளை கடலுக்கு அடியில் மூழ்கடிக்கும் அதே தேவனாக இருப்பார், அவள் நித்திய அக்கினியைப் போல எரிவாள். முழு உலகமும், கிறிஸ்தவ உலகம் என்று அழைக்கப்படுவது, தற்போதைய நிலையில் வாழ்ந்து கொண்டு, கோட்பாடுகள் மற்றும் அது போன்ற காரியங்களை கட்டிப்பிடித்துக்கொண்டு, தேவனை மறுதலிக்கிறது! ஆச்சரியப்படு வதற்கில்லை அவர்களின் ஸ்தாப-... எழுப்புதல் முழுமையாக மரித்துப் போனதில் ஆச்சரியமில்லை; அவர்கள் ஒரு குறிப்பிட்ட நிலையை அடைந்தார்கள், பின்னர் இதை உள்ளே கொண்டுவரவும், அதை உள்ளே கொண்டுவரவும், புதிய கல்வி நிலையங்கள் மற்றும் அது போன்ற காரியங்களில் மில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்யவும் சென்றார்கள்; தேவன் ஒருபோதும் அப்படிச் செய்ய நியமிக்கவில்லை. ஆனாலும், "சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்." 217 அதைச் சிந்தித்துப் பாருங்கள். இன்றிரவு நீங்கள் இறந்துவிட்டால் என்ன செய்வது? வீட்டிற்குச் செல்லும் வழியில் நீங்கள் கொல்லப்பட்டால் என்ன செய்வது? அடுத்த வெடிப்பு என்னைத் தாக்கினால், உலகம் இதை அறிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்: தேவனுடைய வார்த்தையை, அதன் ஒவ்வொரு வார்த்தையையும் நான் விசுவாசிக்கிறேன், அதை கிறிஸ்து இயேசுவாக என் இதயத்தில் ஏற்றுக்கொள்கிறேன். எனக்குள்ளே இருக்கும் ஆவியானவர், ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு "ஆமென்" என்று முத்திரையிடுகிறார் என்று நான் நம்புகிறேன். அவர் அளித்த ஒவ்வொரு வாக்குத்தத்தமும் நிறைவேறியதை நான் என் வாழ்நாளில் கண்டிருக்கிறேன், அவர் வருகிறார் என்று எனக்குத் தெரியும். 218 அவர் ஒரு சபைக்காக வருகிறார் என்று எனக்குத் தெரியும், அது நிச்சயம் சிறுபான்மையாகவே இருக்கும், "வயலில் இரண்டு பேர் இருப்பார்கள், நான் ஒருவரை எடுத்துக்கொண்டு ஒருவரைக் கைவிடுவேன்; படுக்கையில் இரண்டு பேர் இருப்பார்கள், நான் ஒருவரை எடுத்துக்கொண்டு ஒருவரைக் கைவிடுவேன்," ஒரு உலகளாவிய உயிர்த்தெழுதல், ஒரு எடுத்துக்கொள்ளப்படுதல். அதற்காக நாம் ஆயத்தமாக இருப்போம் நண்பர்களே, இதுவே அந்த நேரம். நாம் நிற்பது போல, கலிலேயாவில் இயேசு நின்றது போல, இந்த பெரிய ஏரியின் அருகே, நாம் நிற்கும் இங்கு எவ்வளவு அழகான நேரம்! பரிசுத்த ஆவியானவர் இன்றிரவு நம் கட்டிடத்திலேயே இருக்கிறார், மக்கள் மீது அசைவாடுகிறார்; நூற்று ஐம்பது அல்லது இருநூறு பேர் கொண்ட இந்தச் சிறிய கூட்டத்தில், ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கு மக்கள் தங்கள் கைகளை உயர்த்தினர். நாம் மனந்திரும்புவோம். 219 எங்கள் பரலோகப் பிதாவே, சபை அதன் முதல் அன்பை இழந்துவிட்டதை, ஆண்டவரே, எங்களால் காண முடிகிறது. நாடு முழுவதும் உள்ள சபை முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதை எங்களால் காண முடிகிறது, நாடு மட்டுமல்ல, உலகமுமே. விதைகளை விதைப்பதற்கான நேரம் முடிந்துவிட்டது என்று நீர் சில காலைகளுக்கு முன் பேசியதை நாங்கள் உணர்கிறோம்; விதைகளை விதைப்பதற்கான ஒரே இடம் வெளிநாடுகளில்தான் உள்ளது, இது அறுவ டைக்குப் பின் எஞ்சியிருப்பதைப் பொறுக்கும் நேரம். ஓ தேவனே, உண்மையாகவே அந்த வார்த்தைகள் சரியானவை. 220 இப்போது, இன்றிரவு, மாம்சத்தில் ஒரு நல்ல தோற்றத்துடன் தொடக்கத்தை ஏற்படுத்தி, முன்னேற முயற்சிக்கும் இந்த அருமையா னவர்களை நாம் பார்க்கும்போது, அவர்கள், தங்கள் வாழ்க்கை அந்த வார்த்தைக்கு ஏற்றவாறு இல்லை என்பதை உணர்கிறார்கள். எங்கோ ஏதோ தவறு இருக்கிறது, அவர்களிடம் அழுத்தம், கோபங்கள் மற்றும் அலட்சியங்கள் உள்ளன, ஓ தேவனே, அல்லது அவர்களைத் தவறாக நடந்துகொள்ளச் செய்து ஒரு கிறிஸ்தவனைப் போலச் செயல்பட விடாமல் தடுக்கும் அசிங்கமான காரியங்கள் உள்ளன. அவர்கள் திருப்தியடையாமல் இருப்பதைக் காண்கிறார்கள், அவர்கள் ஒரு ஸ்தாபனத் திலிருந்து மற்றொரு ஸ்தாபனத்திற்கும், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கும் அலைந்து திரிகிறார்கள். 221 அவர்கள் சத்தமிட்டிருந்தாலும், இரவின் பாதி நேரம் அவர்கள் நடனமாடியிருந்தாலும், உலர்ந்த மாட்டுத் தோலின் மீது பட்டாணிகளைக் கொட்டுவது போல அவர்கள் அந்நிய பாஷைகளில் பேசியிருந்தாலும், அவர்கள் இந்தக் காரியங்களை எல்லாம் செய்திருக்கலாம், ஆண்டவரே, ஆனாலும் ஓ தேவனே, பவுல் சொன்னார், "நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசி னாலும், நான் சத்தமிடுகிற வெண்கலம் போலவும், ஓசையிடுகிற கைத்தாளம் போலவுமிருப்பேன்; மலைகளைப் பேர்க்கத் தக்கதாக சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், எனக்குப் பரிபூரண விசுவாசம் இருந்தாலும், என் ஆஸ்திகளையெல்லாம் அன்னதானம் பண்ணினாலும்," மற்றும் இந்தக் காரியங்கள் அனைத்தையும் செய்தாலும், அவன் ஒன்றுமில் லாதவனாகிறான். 222 ஓ தேவனே, மனிதர்கள் உணர்ச்சிகள் மற்றும் அது போன்ற காரியங்களைச் சார்ந்திருக்காமல், வார்த்தையாகிய கிறிஸ்து விடம் வரட்டும்; ஒவ்வொரு அவிசுவாசத்தையும் தாண்டி எழும்பி, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குப் பரிசுத்த ஆவியானவரைப் பின்பற்றிச் செல்லட்டும். அதை அருளும், ஆண்டவரே. மரணமாகிய யோர்தானை நீர் கடந்தீர், நீர் திரும்பி வந்தீர், அங்கே மனிதர்கள் என்றென்றும் வாழும் ஒரு நல்ல தேசம் இருப்பதை நீர் எங்களுக்கு நிரூபித்தீர். உயிர்த்தெழுதலின் கனிகளை நீர் எங்களுக்கு அளித்தீர், பரலோக ஈவுகளை நாங்கள் சுவைக்கச் செய்தீர். 223 மேலும், எபிரெயர் 6-ம் அதிகாரத்தில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: "ஏனெனில், ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும்," பெந்தெ கோஸ்தே மக்கள், "பரிசுத்த ஆவியைப் பெற்றும், தேவனுடைய நல்வார்த்தையையும் வருங்காலத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும்," தேவனுடைய பரலோக உணவு, இப்போது அவர்கள் விழுந்து போவதைக் காண்கிறேன், "இனிப் பாவங்களுக்காகச் செலுத்தத்தக்க வேறொரு பலியில்லாமல், நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்" என்று சொல்லப்பட்டுள்ளது. ஓ தேவனே, எல்லையில் இருக்கும் விசுவாசிகள் இன்றிரவு எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக கானானுக்குள் ஓடிச் செல்லட்டும். அதை அருளும், ஆண்டவரே. 224 ஆண்டவரே, இன்றிரவு தங்களுக்குள் இருக்கும் ஜீவனுக்காகக் குதித்துக் கொண்டிருக்கும் இந்தச் சிறிய முயல்கள் ஒவ்வொன்றும், ஆண்டவரே, அந்தப் பாறையைக் கண்டடையட்டும். ஓ தேவனே, புதர்களிலும் மற்ற எல்லா இடங்களிலும் ஜெபக்கூட்டங்கள் நடைபெறும் வரை, இந்தப் பெண்கள் தேவனுடைய பரிசுத்தவான்களைப் போல இருக்கும், அவர்கள் பரிசுத்தவான்களைப் போல உடுத்தி, பரிசுத்தவான்களைப் போலச் செயல்பட்டு, பரிசுத்தவான்களைப் போலப் பேசக்கூடிய அந்தப் பாறையை இந்த மக்கள் கண்டடையும் வரை; மேலும் மனிதர்கள் தங்கள் பிரசங்க மேடைகளுக்கும், மற்றும்-மற்றும்-மற்றும் உதவிக்காரர்கள் தங்கள் அலுவலகங்களுக்கும், அறங்காவலர்கள் போன்றவர்கள் நேர்மையுடனும் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் வல்லமையுடனும் சென்று, மக்கள் மீது ஒரு எழுப்புதலைக் கொண்டுவரும்படி ஜெபிக்கும் வரை, இந்த மாநாடு ஒருபோதும் நிற்காமல் இருக்கட்டும். அதை அருளும், ஆண்டவரே. 225 தேவனே, சபை இரட்சிக்கப்படட்டும். நீர் சொன்னீர், "பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும். என் பிதா அவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் ஒருவனும் என்னிடத்தில் வரமாட்டான். என் பிதா எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்." ஓ தேவனே, தாமதமாகிவிட்டதா? நாம் அந்தப் பாறையை அடைவதற்குள் வேட்டை நாய்கள் நம்மைப் பிடித்துவிடுமா? ஓ தேவனே, அப்படி நடக்க அனுமதிக்காதீர், ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தங்களைக் கிள்ளிப் பார்த்து, நாம் முடிவுக் காலத்தில் இருக்கிறோம் என்ற உண்மையை விழிப்படைந்து உணரட்டும். நம்முடைய ஆண்டவரின் வருகைக்கு இன்னும் அதிக காலம் இருக்க முடியாது. 226 அடுத்த ஆண்டு ஒரு மாநாட்டைப் பற்றிப் பேசுகிறோம், அது இன்றிரவே இருக்குமா, அல்லது காலையில் அவர் வருவாரா என்பது நமக்கு எப்படித் தெரியும்? நம்மில் ஒருவர், அல்லது இங்குள்ள நம்மில் அநேகர், விடியற்காலைக்கு முன்பே அழைக்கப்படலாம் என்பது நமக்கு எப்படித் தெரியும்? அப்போது நாம் நியாயத்தீர்ப்பில் நிற்க வேண்டியிருக்கும். உலகத்தின் இந்தக் காரியங்கள் எல்லாம் நமக்கு என்ன பயனைத் தரும்? அவற்றுடன் நாமும் அழிந்து போவோம். தேவனே, நாம் ஒருபோதும் உயிர்த்தெழுதலில் எழமாட்டோம், ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவதற்கே அன்றி. இன்றிரவு ஒவ்வொரு விலங்கையும் நாம் அவிழ்த்துவிடவும், நாம் அந்தப் பாறையிடம் வந்து, அங்கே கிறிஸ்து இயேசுவில் என்றென்றைக்கும் வாழவும் தேவன் அருள் புரிவாராக. அதை அருளும், ஆண்டவரே. பாறையிடம் வந்து அழுத்தத்தை விலக்கி விடுங்கள். 227 அதை அருளும், பிதாவே. இப்போது நான் அவர்களை உம்மிடம் ஒப்புவிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அவர்கள் ஒவ்வொருவரும் பாதுகாப்பாக அந்தப் பாறையை அடைவார்களாக, அங்கே அவர்களுக்கான நிச்சயம் உள்ளது; அவர்கள் தங்கள் வாழ்க்கையைப் பார்க்க முடியும், அங்கு மேலோடு அனைத்தும் தட்டிவிடப்பட்டிருக்கும். ஆண்டவரே, அநேகர், பலரும், ஆண்டவரே, அவர்கள் பாறையின் அருகில் இருப்பதாக நினைத்துக்கொண்டு ஏமாற்றப்படுகிறார்கள்; ஆனால் தங்கள் வாழ்க்கையை நேராகப் பார்க்கும்போது தாங்கள் அங்கு இல்லை என்பதைக் காண்கிறார்கள், உலகத்தின் தளைகள், ஆசைகள், உலகத்தின் காரியங்கள் இன்னும் தங்களைச் சுற்றியிருப்பதைப் பார்க்கிறார்கள், ஜெபத்தில் அவர்கள் இன்னும் மேலோட்டைத் தட்டிவிடவில்லை என்பது அவர்களுக்குத் தெரியும். 228 இன்றிரவு இந்த ஹோட்டல் அறைகள் அனைத்தும், ஓ தேவனே, கிறிஸ்தவர்கள் மறுபடியும் பிறந்து பரிசுத்த ஆவியால் நிரப்பப்படும் வரை, புதிய வாழ்க்கைகள் தொடங்கும் வரை, மாரடித்து ஜெபிக்கும் ஒரு முழு இரவு ஜெபக் கூட்டமாக மாற தேவன் அருள் புரிவாராக. இயேசுவின் நாமத்தில், தேவனுடைய மகிமைக்காக இதைக் கேட்கிறோம். ஆமென். நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? நான் அவரை நேசிக்கிறேன், இப்போது ஆவியிலும், உறுதியான இருதயத்துடனும் அவரை ஆராதியுங்கள். ஏனென்றால்... என் இரட்சிப்பை விலைக்கு வாங்கினார் கல்வாரி மரத்தில். 229 நான் சொல்வது உங்களுக்குப் புரிகிறதா? நாம் மரித்துவிட்டோம், நீங்கள் ஏற்கனவே அவருடன் எழுப்பப்பட்டுள்ளீர்கள் என்பதை. அதுவே நமது இரட்சிப்பின் அச்சாரமாகும், நாம் பரலோக இடங்களில் ஒன்றாக அமர்ந்திருக்கிறோம். நீங்கள் வந்த இடங்களைத் திரும்பிப் பாருங்கள், என்ன நடக்கிறது என்பதைப் பாருங்கள், உங்களை நீங்களே சோதித்துப் பாருங்கள், ஆராய்ந்து பாருங்கள். பாருங்கள்: "நான் அவருடைய வார்த்தையை மீறிவிட்டேனா? நான்-நான்-நான் இல்லை... நான்-நான்-நான் பைபிள் அப்படிச் சொல்கிறது என்று அறிவேன், ஆனால் நான் அதை அப்படி நம்பவில்லை." கவனமாக இருங்கள், நீங்கள் இன்னும் மரிக்கவில்லை. பரிசுத்த ஆவியானவர் உள்ளே இருந்தால் அவர், "ஆமென், அது என்னுடைய வார்த்தை" என்று சொல்வார். புரிகிறதா? "சரி, அற்புதங்களின் நாட்கள் முடிந்துவிட்டன என்று நான் நம்புகிறேன்." அப்படியா, பைபிள் சொல்கிறதே, "அவர் நேற்றும், இன்றும், என்றென்றைக்கும் மாறாதவ ராயிருக்கிறார்" என்று? "மாற்கு 16-ன் அடையாளங்கள் வேறொரு தலைமுறைக்கானது என்று நான் நம்புகிறேன்." 230 அப்படியா, அவர் "விசுவாசிக் கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன" என்று சொன்னாரே? எவ்வளவு தூரம்? "உலகத்தின் முடிவுபரியந்தம். இதோ, சதாகாலங்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன். நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்." எவ்வளவு காலம்? "உலகத்தின் முடிவுபரியந்தம்." தீர்க்கதரிசியின் அனைத்து வாக்குத்தத்தங்களும், இந்த மாலை நேரத்தில், பகல் என்றும் இரவு என்றும் அழைக்கப்படாத ஒரு நாள் இருக்கும், அது மங்கலான வெளிச்சமாக இருக்கும் என்று தீர்க்கதரிசி சொன்னார். 231 சூரியன் எங்கே உதிக்கிறது? கிழக்கில். அது எங்கே மறைகிறது? மேற்கில். நாகரிகம் எப்படிப் பயணிக்கிறது? கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி. இப்போது, குமாரன் (S-o-n), கிழக்கிலே உள்ள மக்கள் மீது தமது செட்டைகளில் ஆரோக்கியத்துடன் உதித்ததி லிருந்து ஒரு நாள் கடந்துவிட்டது. இப்போது, ஸ்தாபனத்தின், பிரிவினையின் ஒரு நாள் கடந்துவிட்டது; சுற்றிலும் பார்க்கவும், உங்கள் பெயரை ஒரு புத்தகத்தில் பதிவு செய்யவும், கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொள்ளவும் போதுமான வெளிச்சம் மட்டுமே இருந்தது; ஆனால் அவர் வாக்களித்தார், "மாலை நேரத்தில் வெளிச்சம் உண்டாகும்." 232 இப்போது, மாலை வெளிச்சம் வெளியே வந்துள்ளது, கிழக்கில் உதிக்கும் அதே சூரியன் (s-u-n), மேற்கில் மறையும் அதே சூ-ரி-ய-ன் (s-u-n) என்பதைக் காட்டுகிறது. மதம், நாகரிகம், இரட்சிப்பு, சூரியனைப் போலக் கிழக்கிலிருந்து மேற்கிற்குப் பயணித்துள்ளது. இப்போது குமாரன் (S-o-n), பெந்தெகோஸ்தே நாளில் ஊற்றப்பட்ட அதே பரிசுத்த ஆவியானவர் மேற்கில் ஊற்றப்படுகிறார். நாம் இன்னும் மேலே செல்ல முடியாது, நாம் மேற்குக் கடற்கரையில் இருக்கிறோம், நாம் இன்னும் மேலே சென்றால், நாம் சீனாவில், அது தொடங்கிய இடமான கிழக்கிற்கே மீண்டும் வந்துவிடுவோம். புரிகிறதா? "ஆனால் மாலை நேரத்தில் வெளிச்சம் உண்டாகும்." இதுவே அந்த நேரம், நண்பர்களே, இதுவே அந்த நேரம். தயவுசெய்து அதை ஏற்றுக்கொள்ளுங்கள். 233 மேலும் கேளுங்கள், நான் உங்களுக்குத் தருகிறேன்... இன்னும் ஒரு நிமிடம் எடுத்துக்கொள்ளலாமா? கேளுங்கள். கம்யூனி சத்தைப் பார்த்து நீங்கள் பயப்படுகிறீர்களா? கம்யூனிசத்திற்காக நீங்கள் ஏன் பயப்படு கிறீர்கள்? மக்களே விழித்தெழுங்கள்! கம்யூனிசம் தேவனுடைய கரத்தில் உள்ளது, அது அவர் பயன்படுத்தும் ஒரு கருவி. நீங்கள் ஒருபோதும்... 234 கம்யூனிசம் உலகத்தை ஆளும் என்று பைபிளில் ஒரு வேத வாக்கியம் கூட இல்லை, ஆனால் ரோமனிசம் உலகத்தை ஆளும் என்று பைபிள் சொல்கிறது. பாதங்களின் அடியில் இருந்த இரும்பும் களிமண்ணும் எது? அது கம்யூனிசமா? இல்லை ஐயா, அது ரோமனிசமும் புராட்டஸ்டன்டிசமும், அது முற்றிலும் சரி. அந்த எஃகு, இரும்பு, ரோம், நேராக இறுதிவரை செல்கிறது, அது ரோமனிசம். 235 அது இன்று எங்கே நிலை நிறுத்தப்படுகிறது என்று பாருங்கள்; நமது ஜனாதிபதி திரு. கென்னடி தேர்ந்தெடுக்கப் பட்டதிலிருந்து, கடந்த ஆறு மாதங்களில், அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து, கென்டக்கி மாநிலத்தில் சுமார் மூன்று லட்சத்து பத்தாயிரம் பேர் புராட்டஸ்டன்ட் மதத்திலிருந்து கத்தோலிக்க மதத்திற்கு மாறியுள்ளனர், கென்டக்கி மாநிலத்தில் மட்டும். இது மறுநாள் நாளிதழில் வந்தது. புரிகிறதா? 236 இப்போது என்ன நடந்தது என்று பாருங்கள். அது என்ன? உலக சபைகளின் மன்றம். அவர்கள் அதைப் பற்றிப் பேசுகிறார்கள், மேலும் அவர்கள் சொல்கிறார்கள்... நம்முடைய சகோதரரைப் போல, பிரஸ்பிடீரியன், மற்றும் பலரும், உள்ளே வருகிறார்கள். அது அற்புதமானது, நானும் அதை நம்புகிறேன், ஆனால் அந்தப் புத்தியில்லாத கன்னிகை, எண்ணெய்க்காகக் கூப்பிட ஆரம்பித்தபோது, அந்தச் சரியான நேரத்தில்தான் மணவாளன் வந்தார் என்பதை நீங்கள் எப்போதாவது விழிப்படைந்து சிந்தித்திருக்கிறீர்களா? தங்களிடம் எண்ணெய் இல்லை என்பதை விழித்துணர்ந்தபோது, அவர்கள் எண்ணெய் வாங்கப் போனார்கள்; அவர்கள் எண்ணெய் வாங்கச் சென்ற அந்த நிமிடத்தில்தான், மணவாளன் வந்தார், மணவாட்டி உள்ளே சென்றாள். அதை உங்களால் பார்க்க முடியவில்லையா? 237 இந்த எபிஸ்கோபாலியன்கள், பிரஸ்பிடீரியன்கள், மற்றும் லூத்தரன்கள் அனைவரைப் பற்றியும் நாம் சிந்திக்கிறோம், அதை நாம் பாராட்டுகிறோம், அவர்கள் உள்ளே வருவதை நாம் பார்க்கிறோம், ஆனால் அது நமக்கு ஒரு அடையாளம். அவர்கள் அந்த எண்ணெயை வாங்க வரும் நேரம் இதுதான், நித்திரையடைந்த கன்னிகை இவ்வளவு காலமாகத் தூங்கிக்கொண்டிருந்தாள். இன்றைய போதகர்களுக்கு என்ன ஆயிற்று? நீங்கள் வாழும் காலம் என்னவென்று உங்களுக்குத் தெரியாதா? இயேசு சொன்னார், "நீங்கள் என்னை அறிந்திருந்தீர்களானால், என் நாளையும் அறிந்திருப்பீர்கள்." அவர் சொன்னார், "வானத்தின் தோற்றத்தை நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, காலங்களின் அடையாளங்களை நிதானிக்க உங்களால் கூடாதா?" 238 மக்களே விழித்தெழுங்கள், இந்த பெந்தெகோஸ்தே சபை இப்போது போய்க்கொண்டிருக்கும் விதத்தைப் பற்றி பைபிள் சொல்வது உங்களுக்குத் தெரியாதா, "நீங்கள் நினையாத நாழிகையில்"? பெந்தெகோஸ்தே சபைதான் லவோதிக்கேயா சபைக்காலம் என்பது உங்களுக்குத் தெரியுமா, அவற்றில் கடைசி சபைக்காலம்? அது வெதுவெதுப்பாக இருக்கும், தேவன் அதைத் தமது வாயிலிருந்து வாந்தி பண்ணிப்போடுவார்? ஒவ்வொரு சபைக்காலமும், ஒவ்வொரு நட்சத்திரமும், சபைக்காலத்தின் ஒவ்வொரு ஊழியரும், சபைக்குரிய ஒவ்வொரு தூதரும் அதன் வெளிப்பாட்டைச் செய்துவிட்டார்கள்? இயேசு தமது சபையை விட்டு வெளியேற்றப்பட்ட ஒரே சபைக்காலம் இந்தச் சபைக்காலம்தான் என்பது உங்களுக்குத் தெரியுமா, லவோதிக்கேயா சபைக்காலம், அவர் உள்ளே வர முயற்சி செய்து கதவைத் தட்டிக்கொண்டிருக்கிறார்? நாம் வாழும் நேரத்தை உங்களால் பார்க்க முடியவில்லையா? 239 பைபிள் தீர்க்கதரிசனம் மற்றும் அது தொடர்பான காரியங்களைப் போதிக்க, நாம் எங்கு வாழ்கிறோம் என்பதைப் பார்க்க, சுமார் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு நான் இங்கு வர முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் நண்பர்களே. மக்களுக்கு என்ன ஆயிற்று? நாம் முடிவுக் காலத்தில் இருக்கிறோம் என்பதை உங்களால் பார்க்க முடியவில்லையா? எல்லாம் முடிந்துவிட்டது, அடுத்த காரியம் அந்தச் சிறிய குழுவை ஒன்றாகச் சேர்க்கும் ஒரு வீச்சாக இருக்கும், ஓரிரு மாதங்களில் அவள் சென்றுவிடுவாள், அவள் ஒன்றுசேர்க்கப்பட்டவுடன். சரி, நாம் முடிவில் இருக்கிறோம், வேறு எங்கும் நம்பிக்கைகள் மீதமில்லை. மக்களே, கிறிஸ்துவிடம் ஓடிச் செல்லுங்கள்! 240 உங்கள் ஈவுகளின் மூலமாக நான் என் பிள்ளைகளுக்கு உணவளித்திருக்கிறேன், உங்கள் நன்மையின் மூலமாக நான் ஒரு ஊழியத்தைக் கொண்டிருந்திருக்கிறேன்; நான் பாப்டிஸ்ட் சபையை விட்டு வந்த மக்கள் மூலமாக, பெந்தெகோஸ்தே மக்கள் மூலமாக, நீங்கள்தான் அந்த நபராக இருந்திருக்கிறீர்கள். நான் ஒரு மதவெறியன் என்றும், தீர்க்கதரிசனம் என்று எதுவும் இல்லை என்றும், இந்தத் தேவதூதர்கள் தோன்றுவது போன்ற காரியங்கள் எதுவும் இல்லை என்றும் அவர்கள் என்னிடம் சொன்னபோது, இன்றிரவு நான் உங்களை சாட்சியாக எடுத்துக்கொள்கிறேன்: பல்லாயிரக் கணக்கான காரியங்களில், நிறைவேறாத எதையாவது நான் உங்களிடம் எப்போதாவது சொல்லியிருக்கிறேனா? அவர்கள் சாமுவேலுக்கு முன்பாக வந்து, "நாங்கள் விரும்புகிறோம், சவுல் ஒரு-ஒரு ராஜாவாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்" என்று சொன்னது உங்களுக்கு நினைவிருக்கிறதா? அப்போது தேவன் சாமுவேலிடம், "அவர்கள் உன்னைத் தீர்க்கதரிசியாகத் தள்ள வில்லை, அவர்கள் என்னையே தள்ளினார்கள்" என்றார். "நீ கீழே போய் அவர்களுக்கு முன்பாக நில்" என்று சொன்னார். அவர் கேட்டார், "கர்த்தருடைய நாமத்தினால் நான் உங்களிடம் சொன்னதில், நிறைவேறாத எதையாவது நான் எப்போதாவது சொல்லியிருக்கிறேனா? நான் எப்போதாவது என் வாழ்க்கைக்காக உங்களிடம் பிச்சை கேட்டிருக்கிறேனா?" அவர்கள் சொன்னார்கள், "இல்லை, இந்தக் காரியங்கள் சரிதான், ஆனால் நாங்கள் இன்னும் ராஜாவையே விரும்புகிறோம்." 241 இதோ, அது மீண்டும் அதே இடத்திற்கு வந்து விட்டது. அது சபையாகும், அது சபையாகும், அது தேசம் அல்ல, அது மக்கள் தான். அவர்கள் அப்படிச் செய்தால்... நமது தொலைக்காட்சியைப் பாருங்கள், நமது செய்தித்தாள்களைப் பாருங்கள், நமது விளம்பரப் பலகைகளைப் பாருங்கள், நமது பெண்களைப் பாருங்கள், நமது ஆண்களைப் பாருங்கள், நமது சபைகளைப் பாருங்கள், ஏன், அது அடித்தளத்திலும்கூட அழுகிப்போயுள்ளது. அது முற்றிலும் உண்மை. பிறகு நாம் அதை கிறிஸ்தவ... என்று அழைக்கிறோம். 242 மக்களே, அந்த காரியங்களை நீங்கள் நம்பாதீர்கள். நான் உங்களை நேசிக்கிறேன், நான் கோபப்படவோ, அல்லது தவறான ஏதேனும் ஒன்றைச் சொல்லவோ முயற்சிக் கவில்லை, கர்த்தருடைய நாமத்தில் நான் உங்களுக்குச் சொல்கிறேன். இந்த மற்ற காரியங்களை நீங்கள் நம்பி, அவைகள் நிறைவேறுவதைப் பார்த்திருந்தால், இதையும் நீங்கள் நம்புங்கள். நீங்கள் நினைப்பதை விட காலம் கடந்துவிட்டது. 243 தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இதை மீண்டும் உங்களிடம், இங்குள்ள தலைவர் சகோதரர் சன்மோர் அவர்களிடமோ, அல்லது இங்குள்ள வேறு சிலரிடமோ நான் ஒப்படைப்பது நல்லது. 244 நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? அதை நாம் இன்னும் ஒரு முறை பாடுவோம். நீங்கள் மெத்தடிஸ்டுகள் அனைவரும் பாப்டிஸ் டுகளுடன் கைகுலுக்க வேண்டும் என்றும், நீங்கள் பெந்தெகோஸ்தே சபையாரும் அதே வழியில் செய்ய வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன், மேலும், "சகோதரரே, நானும் அவரை நேசிக்கிறேன், தேவனுடைய உதவியால் நான் முழு இருதயத்தோடும் அவருக்குச் சேவை செய்யப் போகிறேன்" என்று சொல்லுங்கள். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் அதைச் செய்வீர்களா? "ஆமென்" என்று சொல்லுங்கள். நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன் ஏனென்றால் (அது சரி.)... அவர் என்னை நேசித்தார் மேலும் என் இரட்சிப்பை விலைக்கு வாங்கினார் கல்வாரி மரத்தில். 245 எத்தனை பேர் அந்த எடுத்துக் கொள்ளப்படுதலில் (Rapture) பங்குகொள்ள விரும்புகிறீர்கள்? உங்கள் கரங்களை உயர்த்துங்கள். சரி. பாருங்கள், அவர் இன்னும் உங்களுடன் இடைபடுகிறார். பாருங்கள், அவர் இன்னும் இடைபடுகிறார் என்றால் உங்க ளுக்காக ஒரு அடைக்கலம் இருக்கிறது, நாம் தொடர்ந்து முன்னேறிச் செல்வோம். நான் என் இரண்டு கரங்களையும் உயர்த்தியிருக்கிறேன், நானும் அதில் பங்குகொள்ள விரும்புகிறேன். "ஓ, என்னை இன்னும் அருகில், இன்னும் அருகில், ஓ ஆசீர்வதிக்கப்பட்ட கர்த்தாவே, உமது இரத்தம் சிந்தும் விலாவிற்கு அருகில் இழுத்துக்கொள்ளும்." அங்குதான் நான் தங்கியிருக்க விரும்புகிறேன். நீங்கள் விரும்ப வில்லையா? இப்போது, நாம் இந்த 'நான் அவரை நேசிக்கிறேன்' என்ற பாடலைப் பாடும்போது, நம் கரங்களை அவருக்கு நேராக உயர்த்தி, நமது முழு இருதயத்தோடும் பாடுவோம். நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன் ஏனென்றால் அவர் முதலில் என்னை நேசித்தார் மேலும் என் இரட்சிப்பை விலைக்கு வாங்கினார் கல்வாரி மரத்தில். 246 இப்போது, நீங்கள் உங்கள் தலைகளை வணங்கி, உங்கள் கண்களை மூடிக்கொண்டு, இப்போது மிகவும் உண்மையாகச் சிந்தியுங்கள், அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, பொறுமை, சாந்தம், விசுவாசம் ஆகிய அடையாளங்களுடன் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைப் பெறாத அனைவரும், இந்த அடையாளங்கள் எல்லாம் உங்களைப் பின்தொடர வேண்டும், வேறு என்ன நடந்திருந்தாலும் சரி, அதுதான் ஆவியின் கனியாகும், அது உங்கள் வாழ்க்கையில் இல்லையென்றால், தயவு, சாந்தம், பொறுமை, அன்பு, ஒவ்வொரு நபரையும் மன்னித்தல், அந்த அடையாளங்கள் உங்கள் வாழ்க்கையில் இல்லையென்றால் (இப்போது, யாரும் பார்க்க வேண்டாம், உங்கள் தலைகளை வணங்கிய படியே இருங்கள்.), உங்கள் கரத்தை உயர்த்தி, "சகோதரர் பிரான்ஹாம், எனக்காக ஜெபியுங்கள்" என்று சொல்லுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சபையில் சுமார் தொண்ணூறு சதவீதம் பேர் என்று நான் சொல்வேன். 247 ஓ, இயேசுவே, தயவுசெய்து, தேவனே! தேவனே, அந்த மக்களை அப்படி வெட்டுவதை நான்-நான் வெறுக்கிறேன், ஆனால், ஓ, நியாயத்தீர்ப்பு நாளில் அங்கே நிற்கும்போது நான் என்ன செய்வேன்? பிறகு அந்த கரங்கள் அலறுவதையும், அந்தப் பெண்கள் தங்கள் முகங்கள் திகைத்து, தங்கள் கண்கள் வெளியே பிதுங்கியபடி, "நீங்கள் ஏன் என்னிடம் சொல்லவில்லை?" என்று சொல்வதையும் நான் பார்க்கிறேன். அந்த மனிதர்கள், "ஓ, நீங்கள் அதை என்னிடம் சொல்லியிருந்தால்!" என்று சொல்லும்போது! தேவனே, எனக்கு உதவி செய்யும். தயவுசெய்து, என்னைக் காத்துக் கொள்ளும், கர்த்தாவே, நான் உண்மை யானவனாக இருக்க, நான் நேர்மையானவனாக இருக்க, நான் நிமிர்ந்து நிற்பவனாக இருக்க என்னை அனுமதியும், கர்த்தாவே, உமது வார்த்தையை நான் அறிந்துகொள்ள எனக்கு உதவி செய்யும், அப்போதுதான் நான் அதைச் சொல்ல முடியும். மேலும் இங்கே இருக்கும் இந்த மக்களுக்கு உதவி செய்யும் பிதாவே. 248 சற்று சிந்தித்துப் பாருங்கள், இங்கு ஒரு பெந்தெகோஸ்தே மாநாட்டில், வார்த்தையி லிருந்து நேராக வந்த சுட்டெரிக்கும், கடினமான செய்திக்குப் பிறகு தொண்ணூறு சதவீதம் பேர் தங்கள் கரங்களை உயர்த்தியுள்ளனர், பரிசுத்த ஆவியானவர் கடந்து சென்றுகொண்டிருக்கிறார், ஆனால், தேவனே, அவர்கள் இன்னும் அதை உணர முடிகிறது என்பதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அதை உணர்ந்து, அதை அறிந்துகொள்ளக்கூடிய ஒரு மனிதன் அல்லது ஒரு பெண், தேவனே, அது உமது ஆவியானவர் அவர்களுடன் பேசுவதாகத்தான் இருக்க வேண்டும். நான் ஜெபிக்கிறேன், மேலும் உமது ஊழியனாக அவர்கள் ஒவ்வொருவருடைய ஆத்துமாவையும் நான் உரிமை கொண்டா டுகிறேன், கர்த்தாவே, நான், மோசேயைப் போல, அவர்களுக்கும், கர்த்தாவே, வரவிருக்கும் நியாயத்தீர்ப்புக்கும் இடையே நிற்கிறேன். நான் கெஞ்சுகிறேன், கர்த்தாவே, அவர்கள் தங்கள் கரங்களை உயர்த்தினார்கள். நான் உம்மைப் பிரியப்படுத்தியிருந்தால், பிதாவே, நான் அப்படிச் செய்யவில்லை என்று எனக்குத் தெரியும், ஆனால் நான் செய்த ஏதேனும் ஒன்று-அது உமக்கு ஏதேனும் பயனுள்ளதாக இருந்திருந்தால், கர்த்தாவே, இன்றிரவு, இப்போது எனக்குச் செவிசாயும். 249 இவர்கள் தியாகம் செய்த மக்கள், அவர்கள் எல்லாவற்றையும் செய்திருக்கிறார்கள், அவர்கள் என்னை நேசிக்கிறார்கள், கர்த்தாவே, மேலும் அவர்கள் வார்த்தையை நேசிக்கிறார்கள், அவர்கள் நேசிக்கிறார்கள், மேலும் அவர்கள் சரியாக இருக்க விரும்புகிறார்கள், கர்த்தாவே, இன்றிரவு அந்த அடைக்கலத்தைத் திறந்தருளும், தேவனே, அவர்கள் அதற்குள் ஓடட்டும். அது இப்போதே, இன்றிரவு, ஜெப அறையில், அவர்களின் படுக்கையறையில் இருந்தால், கனவுகளிலும் மற்ற காரியங்களிலும் அவர்களை எழுப்புங்கள், கர்த்தாவே, அவர்கள் மீது உமது ஆவியைப் பொழிந்தருளும், அவர்கள் அந்தக் கன்மலையைக் கண்டடையட்டும், கர்த்தாவே, ஓ தேவனே, அவர்களின் ஆத்துமாக்கள் எரியும் அக்கினியாக மாறட்டும்! அதை அருளும், கர்த்தாவே. 250 நாங்கள் உம்மை நேசிக்கிறோம், மேலும் நாங்கள் உம்மை விசுவாசிக்கிறோம், உமது வார்த்தையில் நீர் இதைச் சொன்னீர்: "நீங்கள் விரும்பியதைக் கேளுங்கள், அது உங்களுக்குச் செய்யப்படும். நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் விரும்புவதைக் கேளுங்கள்." தேவனே, மனிதர்கள் என்னை அமைப்புகளிலிருந்தும் மற்ற எல்லாவற்றிலிருந்தும் வெளியேற் றினாலும், வார்த்தையின் ஒவ்வொரு கட்டளையையும் கைக்கொள்ள நான் முயற்சித்தேன், ஆனால் நான் இன்னும் அதை விசுவாசிக்கிறேன், நான் அதற்காக நின்றிருக் கிறேன், கர்த்தாவே. இப்போது என் ஜெபத்தைக் கேளும்: அவர்கள் ஒவ்வொருவருக்காகவும் நான் ஜெபிக்கிறேன், அவர்கள் ஒவ்வொரு வருக்காகவும் நான் கேட்கிறேன், தேவனே, அவர்கள் ஒவ்வொருவரும் எடுத்துக் கொள்ளப்படுதலில் இருக்கட்டும், அவர்கள் ஆவியால் நிரப்பப்படட்டும், ஜீவனுள்ள தேவன் அவர்கள் மத்தியில் வாழ்கிறார் என்பதற்கான அனைத்து அடையாளங்களுடனும், கர்த்தாவே. அதை அருளும். இயேசுவின் நாமத்தில், அவர்களுக்காக நான் கேட்கிறேன். ஆமென். 251 வியாதியுள்ளவர்கள் யாராவது இருந்தால், அவர்களுக்காக ஜெபிக்க வேண்டுமா என்று நான் கேட்க வேண்டும் என்று சகோதரர் கார்ல்சன் கூறினார். இன்றிரவு, நோயுற்று, ஜெபிக்கப்பட வேண்டும் என்று விரும்புபவர்கள் இங்கே இருக்கிறார்களா? அப்படி இருந்தால் உங்கள் கரங்களை உயர்த்துங்கள். ஓ, என் தேவனே, கணிசமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள்! (இன்னொரு நாள் இரவு, கூட்டம் இருக்கிறதா? நாம் இன்னொரு நாள் இரவு கூட்டத்தை நடத்தப் போகிறோமா? விருந்து அல்ல, இல்லை, அது...) சரி, நான் உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் ஜெபத்தில் இருக்கும்போது உங்கள் கரங்களை ஒருவரை யொருவர் மீது வையுங்கள், "விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும், தேவன் அவனை எழுப்புவார்." 252 இங்கே பாருங்கள், நீங்கள் என்னைப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், நான் என் வேதாகமத்தை வைத்திருக்கிறேன். ஒரு ஏமாற்றுக்காரனாக நான் இங்கே நிற்பதால் எனக்கு என்ன நன்மை கிடைக்கும்? வீட்டில் எனக்கு ஒரு மனைவியும் மூன்று குழந்தைகளும் இருக்கிறார்கள். நான் புறப்படும்போது அழும் குழந்தைகள் எனக்கு இருக்கிறார்கள். வீட்டில் எனக்கு ஒரு சபை இருக்கிறது, அது என்னை தங்கியிருக்கக் கெஞ்சுகிறது, "போக வேண் டாம்," என்று சொல்லி, கூடாரங்களையோ அல்லது வேறு எதையுமோ கட்டத் தயாராக இருக்கிறது, ஆனால் என்னுடைய அநேகர், அவர்களால் அங்கு வர முடியாது, நான் அவர்களிடம் செல்ல வேண்டும். புரிகிறதா? நான் இங்கே நின்று உங்களுக்குத் தவறான ஒன்றைச் சொல்வதால் எனக்கு என்ன நன்மை கிடைக்கும்? 253 எனக்கு ஐம்பத்து மூன்று வயதாகிறது, நான் முப்பத்திரண்டு வருடங்களாக ஒரு ஊழியக்காரனாக இருக்கிறேன், நான் எப்போதாவது ஒருமுறை எதற்காகவாவது உண்மையாக ஜெபித்திருந்தால், அதை அவர் எனக்குக் கொடுத்திருக்கிறார், அல்லது ஏன் அதை அவருக்கு எனக்குக் கொடுக்க முடியவில்லை என்பதை எனக்குக் காட்டியிருக்கிறார். அது முற்றிலும் உண்மை. நான் அதைக் கேட்டால், அவர் அதை எனக்குக் காட்டுவார் என்பதை நான் எப்போதும் கண்டிருக்கிறேன், நான்-அவர் அதை எனக்குக் கொடுக்காததில் எனக்கு மகிழ்ச்சியே. இன்றிரவு, நான் பிரசங்கித்த இதே செய்தியோடு நியாயத்தீர்ப்பு நாளில் உங்களைச் சந்திக்க வேண்டிய ஒரு-ஒரு சகோதரனாக நான் அதைச் சொல்கிறேன். 254 நீங்கள் உண்மையுடன் ஒருவரை யொருவர் மீது உங்கள் கரங்களை வைத்து, ஒருவருக்கொருவர் ஜெபியுங்கள், நீங்கள் ஒரு துளி கூட சந்தேகப்பட வேண்டாம், ஆனால் நீங்கள் கேட்டதை நீங்கள் பெறுவீர்கள் என்று விசுவாசியுங்கள், தேவன் அதை உங்களுக்குத் தருவார், நீங்கள் எவ்வளவு நோயுற்றிருந்தாலும், அல்லது உங்களுக்கு என்ன குறைபாடு இருந்தாலும் எனக்குக் கவலையில்லை, தேவன் அதை அருளுவார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? ஒருவரையொருவர் மீது உங்கள் கரங்களை வையுங்கள். நான் உங்களுக்கு வார்த்தையை மேற்கோள் காட்டப் போகிறேன்: "விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன; அவர்கள் வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்." யார்? நீங்கள், விசுவாசிகளாகிய நீங்கள்தான். இப்போது உங்களுக்காக ஜெபிக்க வேண்டாம், நீங்கள் யார் மீது உங்கள் கரங்களை வைத்துள்ளீர்களோ அவர்களுக்காக ஜெபியுங்கள், ஏனென்றால் அவர்கள் உங்களுக்காக ஜெபிக்கிறார்கள். 255 எங்கள் பரலோகப் பிதாவே, வார்த்தை புறப்பட்டுச் சென்றிருப்பதை நான் அறிவேன், அது தனது இடத்தைக் கண்டுபிடித்துவிட்டது. இப்போது, ஒரு பாதுகாப்பான பகுதி இருப்பதாகவும், இந்தப் பாதுகாப்பான பகுதியில் குணமாக்கும் வல்லமை இருப்ப தாகவும் நான் அவர்களிடம் சொல்லியி ருக்கிறேன். மேலும், கர்த்தாவே, அவர்கள் ஒருவரையொருவர் மீது கரங்களை வைத்திருக் கிறார்கள், அவர்கள் விசுவாசிகள், நாங்களும் உம்மை விசுவாசிக்கிறோம். இப்போது, சாத்தான் இந்த மக்களில் சிலரை வியாதியால் கட்டியிருக்கிறான். அவர்கள் ஒருவரையொருவர் மீது கரங்களை வைத்து ஒருவருக்கொருவர் ஜெபிக்கிறார்கள். 256 சாத்தானே, நீ போரில் தோற்றுவிட்டாய். தேவனுடைய வார்த்தையின் மீது நேர்மையாக நிற்க நான் முயற்சித்தேன், அவர் கூறினார், "நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் விரும்புவதைக் கேளுங்கள், அது உங்களுக்குச் செய்யப்படும்." ஆகையால், சாத்தானே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், சிந்தப்பட்ட அவருடைய இரத்தத்தின் அடிப்படையிலும், அவருடைய உயிர்த்தெழுதலின் அடிப்படை யிலும், நித்திய ஜீவனின் வல்லமையில் இன்றிரவு அவர் இங்கே தோன்றியிருப்பதன் அடிப்படையிலும் நான் வருகிறேன், இந்த மக்களை அவிழ்த்துவிடு. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இனி அவர்களைப் பிடித்து வைத்திருக்க நான் உன்னை எதிர்க்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அவர்கள் சென்று சுதந்திரமாக இருக்கும்படிக்கு, சாத்தானே, அவர்களை விட்டு வெளியே வா. 257 "விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும், தேவன் அவனை எழுப்புவார்." நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகளா? நீங்கள் ஆபிரகாமின் பிள்ளையாக இருக்க வேண்டுமா? ஆபிரகாம், எவ்வளவு காலம் எடுத்தாலும், "தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து அவன் அவிசுவாசமாய் சந்தேகப்படாமல்; தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான்." 258 பிசாசு உங்களிடம் எவ்வளவுதான் "இல்லை, இல்லை, இல்லை," என்று சொன்னாலும், நீங்கள் "ஆம், ஆம், ஆம்," என்று சொல்லுங்கள். இன்றிரவு, நீங்கள் தேவனுடைய வார்த்தையை விசுவாசியுங்கள், தேவன் அதை நிறைவேற்றுவார், நீங்கள் கேட்ட எல்லாவற்றையும் நீங்கள் பெறுவீர்கள், நீங்கள் அதை உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால். 259 இப்போது நான் உங்களிடம் கேட்கப் போகிறேன்: சிந்தப்பட்ட இரத்தத்தின் அடிப்படையில், நீங்கள் ஒரு கிறிஸ்தவர் என்பதை அறிவதன் அடிப்படையில், வாக்குத்தத்தம் உண்மையாயிருக்கிறது, மரணத்திற்குப் பிறகு ஜீவன் இருப்பதாக இயேசு வாக்குத்தத்தம் செய்து, மரணத்திற்குள் சென்று, அதை நிரூபிக்க ஜீவனோடு திரும்பி வந்து, உங்களுக்குள் ஆவியின் ஜீவனைக் கொடுத்து, அவருடைய பிரசன்னம் இப்போது இங்கே இருக்கும்போது, அது எப்படித் தவறிப்போகும்? அது தவறிப்போக முடியாது, "வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை." 260 நாம் ஆபிரகாமின் சந்ததி, ராஜரீக சந்ததி, ஆபிரகாமின் ராஜரீக சந்ததி என்று நாம் உரிமை கொண்டாடி, அவருடைய வார்த்தையைக் குறித்து நாம் சந்தேகப்பட்டால், அப்படியானால் ஆபிரகாமின் சந்ததியா? எழுபத்தைந்து வயதுடைய ஆபிரகாமும், அறுபத்தைந்து வயதுடைய அவர் மனைவியும் மலடாக, பிள்ளைப்பேறு இல்லாமல் இருந்தபோது, அவர்களுக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்று தேவன் அவர்களிடம் சொன்னார், அவர்கள் இருபத்தைந்து வருடங்கள் காத்திருந்தார்கள், அவளுக்குத் தொண்ணூறு வயதும் அவருக்கு நூறு வயதும் ஆகும்வரை, தனக்குக் குழந்தை பிறக்கும் என்று அவர் இன்னும் தேவனைத் துதித்துக்கொண்டிருந்தார். நம்மால் சில நிமிடங்கள்கூட விசுவாசிக்க முடியவில்லையா? 261 நீங்கள் ஒவ்வொருவரும் குணமடைந்து விட்டீர்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். நீங்களும் அதையே விசுவாசிக்கிறீர்களா? உங்கள் கரத்தை உயர்த்தி, "சிந்தப்பட்ட இரத்தத்தின் அடிப்படையில் நான் இதை ஏற்றுக் கொள்கிறேன்" என்று சொல்லுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அப்படியானால் நீங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் குணமடைந்துவிட்டீர்கள். ஆமென். சரி, சகோதரர் கிளேட்டன். அழுத்தத்தை வெளியேற்றுதல் (62-0518) 180